Published: 04 செப் 2017

தங்கம் - ஒரு அற்புதமான உலோகம்

பிரம்மாண்டமான மற்றும் மயக்கும் அதன் தோற்றம், அதன் வேதியியல் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக - நம் கிரகம் முழுவதும் காணப்படும் பொருட்களில் தங்கத்தைப் போல் மனிதப் பயன்பாட்டிற்கு பொருத்தமானது எதுவும் இல்லை. நமது கிரகத்தில் காணக்கூடிய அரிதான விலைமதிப்பற்ற உலோகங்களில் ஒன்றான தங்கத்தின் அற்புதமான பண்புகளின் காரணமாக, அவை விண்வெளி பயணம், பல் மருத்துவம் போன்றவற்றில் இருந்து மின்னணு தொழில்நுட்பம் வரை பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது, எனவே அதன் பண்புகள் பற்றி இன்னும் கொஞ்சம் அறியலாம்.

தங்கம் ஒரு இரசாயன பொருளாக இருந்தாலும், அதை உற்பத்தி செய்ய முடியாது. அதைப் பயன்படுத்த, நாம் அதை இயற்கையில் மட்டுமே கண்டுபிடிக்க வேண்டும். தங்கம் என்பது 19.3 கிராம்/செ.மீ3 அடர்த்தியுடன் தண்ணீரை விட 19 மடங்கு அடர்த்தியானது ஆகும், மேலும் பூமி கிரகத்தில் இது 5வது மிக அடர்த்தியான உலோகமாகும். இருப்பினும், தங்கம் அதன் தூய்மையான வடிவத்தில் மிகவும் மென்மையாக உள்ளது; திடமான வடிவத்தில் இருக்கும்பொழுது தங்கத் துகள்களானது தங்களை தாங்களே ஒழுங்கமைக்கும் விதத்திலான ஒரு பண்பைக் கொண்டுள்ளது.

கிரகத்தில் உள்ள அனைத்து உலோகங்களைப் போலவே, தங்கத்தையும் வளைக்க முடியும். தகடாக்கும்திறன் என்பது தகடுகளாக ஒரு உலோகம் மடிக்கப்படும் திறனைக் குறிக்கிறது. ஒரு ஒற்றை கிராம் தங்கத்தை 1 சதுர மீட்டர் அளவிலான ஒரு தகடாக மடிக்கலாம்; அது அலுமினியம் படலம் போலவே தோற்றமளிக்கும், ஆனால் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும் மற்றும் மிகவும் மெல்லியதாக இருக்கும். இந்தக் காரணங்களினால் தங்கம் மிகவும் நீளும் தன்மையுடையது ஆகும், அதாவது மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தும்போது தங்கத்தை மிக நீண்ட மற்றும் மெல்லிய கம்பிகளாக ஆக்கலாம் என்பது இதன் அர்த்தமாகும். மைக்ரோமீட்டர் அளவு விட்டம் கொண்ட கம்பிகளாக இழுக்கும்பொழுது, தங்கக் கம்பிகளானது பெரும்பாலும் மின்சார சர்க்யூட் போர்டுகளில் செயல்திறனை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

தங்கத்தின் தகடாக்கும் திறன் மற்றும் நீளும் திறன் ஆகியவை, சிறந்த வெப்பம் மற்றும் மின்சார கடத்தும்திறன், உராய்வு மற்றும் தேய்மானத்தைக் குறைக்கும் திறன் போன்ற அதன் மற்ற வேதிப்பண்புகளுக்கு உதவிகரமாக இருக்கிறது. நாசா அமைப்பானது, தனது விண்வெளி ஓடங்களில் வெப்பத்தைக் கடத்தவும் மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கவும் தங்கப் படலத்தின் தட்டையாக்கப்பட்ட தகடுகளைப் பயன்படுத்துகிறது.

மனிதனால் தங்கத்தைக் கொண்டு நிறைய செய்ய முடியும் என்றாலும், தங்கமானது பெரும்பாலும் மந்த நிலையிலேயே உள்ளது. உண்மையில், தங்கத்தின் அணு அமைப்பு காரணமாக, அது நமது கிரகத்தின் குறைவாக வினைபுரியும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. இந்த காரணத்தினால்தான், தங்கமானது உலகில் உள்ள எந்தப் பொருட்களுடன் வெளிப்படையாக வைத்தாலும், அது சிதைவதோ அல்லது துருப்பிடிப்பதோ இல்லை.