Published: 28 அக் 2021

தங்க ஆதரவு ETF கள் மற்றும் தங்க எதிர்காலம்: வித்தியாசம் என்ன?

gold bars

முதலீட்டாளர்கள் தங்கள் துறையை பல்வகைப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்கள் அல்லது தங்கத்தை பாதுக்காக வேண்டும் என்ற கவலை இருக்ககூடாது என்று நினைப்பவர்கள் மின்னணு வகை தங்கத்தின் இரண்டு பிரபலமான வடிவங்களான தங்க எதிர்காலம் மற்றும் தங்க ஆதரவு ETF களில் முதலீடு செய்வர் . 2020 ஆம் ஆண்டில், தங்க எதிர்காலம் மற்றும் ETF இரண்டும் தேவை அதிகரிப்பைக் கண்டன, ETF கள் பதிவு செய்த வருடாந்திர நிகர வருவாய் $ 47.9 பில்லியன் ஆகும்.

இருப்பினும், தங்க எதிர்காலம் மற்றும் தங்க ஆதரவு ETF களுக்கு இடையே பணப்புழக்கம், பயனீடு மற்றும் செலவுகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன-இந்த வேறுபாடுகள் தாங்கள் எந்த சாதனத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்ற முதலீட்டாளரின் முடிவைப் பாதிக்கலாம்.

தங்க ஆதரவு ETF கள் மற்றும் தங்க எதிர்காலத்தை வரையறுத்தல்

தங்க எதிர்காலம் மற்றும் தங்க ஆதரவு ETF இரண்டும் , பரிவர்த்தனைகளில் வர்த்தகம் செய்யப்படும் நிதி சாதனங்கள், ஆனால் இரண்டிற்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.

தங்க எதிர்காலம்: தங்க எதிர்காலம் என்பது ஒப்பந்தங்கள் ஆகும், இதில் வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை எதிர்காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்க ஒப்புக்கொள்கிறார். தங்க எதிர்காலத்தை மீட்க விரும்பும் முதலீட்டாளர்கள் பணம் கொடுத்தோ அல்லது அசலான தங்கம் கொடுத்தோ (ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டால்) மீட்க முடியும்

தங்க-ஆதரவு ETF: தங்க ஆதரவு கொண்ட ETF கள், சரக்கு நிதிகளாகும், அவை அதன் அசல் வடிவத்தில் முதலீடு செய்யாமல் மின்னணு வடிவ தங்கம் மற்றும் காகித வடிவிலான தங்கத்தில் முதலீடு செய்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் தங்க-ஆதரவு ETF களை மீட்கும்போது, குறைந்தபட்சம் 1 கிலோ தங்கத்தை மீட்க விரும்பும் முதலீட்டாளர்கள் அதற்கு சமமான பணம் அல்லது அசல் தங்கத்தைப் பெறுவார்கள்

பயனீடு

பயனீடு என்பது முதலீட்டின் மீது வரக்கூடிய வருமானத்தை அதிகரிக்க கடன் வாங்கிய மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கான முதலீட்டு நுட்பமாகும். ETF கள் மற்றும் தங்க எதிர்காலங்கள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பது இங்கே:

தங்க எதிர்காலம்: எதிர்காலம் என்பது பயனீடு செய்யப்பட்ட பொருட்களாகும். முதலீட்டாளர் அடிப்படையில் ஒரு சிறிய தொகையை செலுத்துகிறார், பின்னர் சாத்தியமான திசையில் நகரக்கூடிய பொருட்களின் விலையில் பந்தயம் கட்டுகிறார். இது சந்தையில் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்களுக்கு பயனீடு - அல்லது கடன் வாங்கிய மூலதனத்தை - பயன்படுத்த உதவுகிறது.

இந்தியாவில், தங்க எதிர்காலத்திற்கான வரம்பு தொகை ஒப்பந்தத்தின் உத்தேச மதிப்பில் 4% ஆகும்; இதன் பொருள், ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தின் மதிப்பில் 4% மட்டுமே செலுத்துகிறார்கள்.

தங்க-ஆதரவு ETF கள்: ஒரு ETF அதன் மதிப்பை "அடிப்படை சொத்துக்கள்" வைத்திருப்பதன் மூலம் பெறுகிறது, இந்த விஷயத்தில் அது தங்கமாகும். "நன்னம்பிக்கை வரம்பு" இல்லை என்பதால் ETF என்று வரும்போது எந்தவிதமான கடன் மூலதனமும் இல்லை. சில தரகர்கள் ETF களை வாங்க கடன் வழங்கலாம், ஆனால் அனைத்து வகையான கடன்களுக்கும் அதனுடன் தொடர்புடைய செலவுகளுக்கும் இவை ஒத்தவையாகும்

செலவுகள்

எதிர்காலங்கள் மற்றும் ETF இரண்டும் அசல் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பாத, அல்லது வாங்க முடியாத முதலீட்டாளர்களை குறைந்த விலையுள்ள மாற்றுகளை ஆராய அனுமதிக்கிறது. அவற்றுடன் தொடர்புடைய செலவுகள் இங்கே:

தங்க எதிர்காலங்கள்: முதலீட்டாளர்கள் தங்களுடைய விருப்பப்படி தங்கத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும் எனும்போது தங்க எதிர்காலம் நேரடியானது, மேலும் பரிவர்த்தனை செலவுகள் எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் குறிப்பிட்ட தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் சார்பாக எந்த நிர்வாகக் கட்டணமும் இல்லை மற்றும் மூன்றாம் தரப்பினரும் முடிவுகளை எடுக்க முடியாது.

இருப்பினும், தங்க எதிர்காலத்தில் தரகர் கணக்கு தொடக்க கட்டணம் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அசல் ஒப்பந்தத்தின் காலாவதி தேதியை நீட்டிக்க விரும்பினால் அதற்கு தரகு கமிஷன் ஆகியவை உண்டு ஒரு முதலீட்டாளர் தங்கள் தங்க எதிர்காலத்தின் ஒப்பந்தத்தை கை மாற்ற முடிவு செய்தால், அது சில செலவுகளையும் உள்ளடக்கியதாகும்

தங்க ஆதரவு ETF: ETF களுடன் தொடர்புடைய செலவுகளில் வருடாந்திர அடிப்படையில் டிமேட் கணக்கு கட்டணங்கள், கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய இரண்டிற்கும் தரகு கட்டணம் மற்றும் நிதி மேலாண்மை செலவுகள் ஆகியவை பொதுவான மொத்த நிதி மதிப்பில் குறைந்தபட்ச சதவீதம் கொண்ட செலவுகலாகும். சில "கண்காணிப்பு பிழைகள்" ஏற்படலாம், இது நிதியால் ஏற்படும் செலவுகள் அல்லது நிதியின் செலவுகளை ஈடுகட்ட குறிப்பிட்ட தங்கத்தை விற்கும்போது ஏற்படலாம்.

வரிகள்

தங்க எதிர்காலம் மற்றும் தங்க ஆதரவு ETF களுக்கான வரி விகிதங்கள் வர்த்தகர், நாடு மற்றும் வைத்திருக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்ததாகும்

தங்க எதிர்காலங்கள்: தங்க எதிர்கால வர்த்தகத்துடன் தொடர்புடைய வரி அமைப்பு புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானது. தங்கத்தை அடிப்படை சொத்தாகக் கொண்ட, முக்கியமாக வணிகங்களுக்கு மட்டுமே கிடைக்கும் தங்க கொணர்வுகள் ஒப்பந்தங்களுக்கு இந்தியா தனி வரி விதிமுறைகளைக் கொண்டுள்ளது. வணிகங்கள் வரி விலக்கு பெற தங்க கொணர்வுகளில் இருந்து வருமானத்தை திருப்பித்தரக் கோரலாம்.

தங்க ஆதரவு ETF: தங்க-ஆதரவு ETF களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் லாபத்தின் மீதான வரிகள் அசல் தங்கத்தின் விற்பனையுடன் பொருந்தும். மூன்று வருடங்களுக்கும் குறைவாக வைத்திருக்கும் ETF களின் குறுகிய கால மூலதன ஆதாயங்கள் முதலீட்டாளரின் வருமானத்துடன் சேர்க்கப்படுகின்றன, அங்கு ஏற்கனவே உள்ள படிமுறை படி வரி விதிக்கப்படுகிறது. அவர்கள் நீண்ட காலம் அதை வைத்திருந்தால், அவர்களின் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 20.8% செஸ் விதிக்கப்படும். 

விலை ஏற்றத்தாழ்வு

தங்க-ஆதரவு ETF கள் மற்றும் தங்க எதிர்காலங்கள் விலை ஏற்ற இறக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ளன, இருப்பினும் தங்க எதிர்காலத்தின் பல தனித்துவமான பண்புகள் இதை மேம்படுத்துகின்றன.

தங்க எதிர்காலங்கள்: தங்க எதிர்காலம் என்பது கடன் மூலதன தயாரிப்புகளாகும், இது பெரிய அளவில் வருவாய் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், மறுபுறம், இழப்புகளும் பெரிதாகலாம். தங்க எதிர்காலத்தில் "ரோல்ஓவர்" என்று ஒன்று உள்ளது, அங்கு முதலீட்டாளர்கள் தங்கள் தகுதி காலாவதியாகும் முன் அவர்கள் நிலையை மூடிவிட்டு, தங்களின் காலாவதியாகும் எதிர்கால முதலீடுகளை பின் தேதியில் காலாவதியாகும் பிற எதிர்கால ஒப்பந்தங்களுடன் மாற்றிக்கொள்கிறார்கள். இது விலை ஏற்ற இறக்கத்தை பாதிக்கலாம்

தங்க ஆதரவு ETF கள்: தங்க எதிர்காலத்துடன் ஒப்பிடும்போது, ETF கள் குறைந்த அளவு நிலையற்ற தன்மையைக் காட்டுகின்றன. இது ஏனெனில் தங்க ஆதரவுETF கள் தங்கத்தின் சந்தை விலையை ஒரு பொருளாகப் பின்பற்றுகிறது. அந்த நேரத்திற்கான சந்தை விலைதான் பொருத்தமானது, எதிர்காலத்தில் இருக்கும் ஏதேனும் தேதியில் உள்ள விலை அல்ல. தங்க-ஆதரவு ETF கள் அடிப்படையில் அசல் தங்கத்தின் அதே விலை ஏற்ற இறக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

தங்க ஆதரவு ETF கள் மற்றும் தங்க எதிர்காலங்கள் இரண்டும் அவற்றிற்கென்று நன்மைகள் மற்றும் தீமைகளைக் கொண்டுள்ளன. தங்க எதிர்காலம் அபாயகரமான முதலீடுகளாக இருந்தாலும், அவை அதிக வருவாயைக் கொடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. நீங்கள் தங்கச் சந்தையைப் புரிந்துகொண்டு அதை தொடர்ந்து பின்பற்றினால், அது மிகவும் இலாபகரமான முதலீட்டு சாதனமாகும். இருப்பினும், தங்க-ஆதரவு ETF கள் அதிக பணப்புழக்கம் கொண்ட பாதுகாப்பான சாதனங்களாகும். நீங்கள் இப்போதுதான் தங்க முதலீட்டை தொடங்குகிறீர்கள் என்றால், தங்க ஆதரவு ETF கள்தான் உங்களுக்கு ஒரு சரியான சாதனமாகும்.