Published: 31 ஆக 2017

உங்கள் நகைப் பெட்டிக்கான தங்கக் காதணிகள்

Pinjada Jhumka Design

கழுத்தணிகள், வளையல்கள், சீப்புகள், ஒட்டியாணங்கள் ஆகியவற்றைக் கொண்ட பளபளப்பான தங்க நகைகள் நிறைந்த ஒரு பெட்டியை வைத்திருப்பது என்பது அனைவரின் கனவாகும் - இவை ஒவ்வொன்றும் ஒருவர் ஆடையின் அலங்காரத்தைக் கூட்டுகின்றன, மேலும் கவர்ச்சியையும், செல்வச் செழிப்பையும் ஒருவரின் தோற்றத்தில் கொண்டு வருகின்றன.

குறிப்பாக காதணிகள் என்பது ஒவ்வொரு நகைப் பெட்டியிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருளாக இருக்கின்றது, அவை அணிபவரின் விருப்பத்தைப் பொறுத்து காலத்திற்கேற்றவாறு அல்லது நாடகத்தனமாக இருக்கலாம்.

 

ஒவ்வொரு வகையான தோற்றத்திற்கும் சிறந்த அழகான தங்கக் காதணிகள் சிலவற்றின் உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


ஜும்காவின் அன்புக்காக

ஒரு பாரம்பரிய தோற்றம் கொண்ட இது காதணிகளின் பழமையான பாணிகளில் ஒன்றாகும். இந்தக் கூம்பு வடிவிலான ஆபரணங்களானது குர்தா, சேலை அல்லது லெஹங்கா போன்ற பாரம்பரிய உடையுடன் அணியப்படுகிறது.

முகத்தின் வகை:

வட்ட வடிவ மற்றும் நீள் வடிவ முகத்திற்கு ஜும்கா சிறந்தவை ஆகும்.

தொங்கல் அல்லது லட்கன்கள் உடன் ஜொலித்தல்

பெயர் குறிப்பிடுவது போல இவை நீண்ட காதணிகளாகும், மேலும் இவை பல்வேறு வடிவமைப்புகளில் மற்றும் மாதிரிகளில் கிடைக்கின்றன. லட்கன்கள் என்பது சேலையுடன் நன்றாக இருக்கும்; இந்தக் காதணிகளே ஒரு அலங்காரத் தோற்றத்தை அளிப்பதால், இதனுடன் நெக்லஸ் எதுவும் அணியத் தேவையில்லை.

முகத்தின் வகை:

தொங்கல்களானது வட்ட வடிவ மற்றும் நீளமான முகங்களுக்குப் பொருந்தும்.

கவர்ச்சியான பதக்கங்கள்

தொங்கல்களைப் போலவே, இவை சிறிய தோடில் இருந்து தொடங்கும் நீண்ட காதணிகளாகும், மேலும் இறுதி நோக்கி செல்லும்பொழுது அகலமாக இருக்கின்றன. இந்த காதணிகள் சிறப்பு சந்தர்ப்பங்களில் கவர்ச்சியைக் கூட்ட அணியப்படுகிறது.

முகத்தின் வகை:

இவை ஒரு நீள்வடிவ முகத்திற்கு நன்றாக இருக்கிறது.

அழகான வளையங்கள்

வளையங்கள் என்பது பாரம்பரிய தங்க பாலிஸின் ஒரு நவீன திருப்பமாகும். இந்திய மற்றும் மேற்கத்திய உடைகளுக்கு பொருத்தமாக இருப்பது வளையங்களில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சமாகும். வளையங்களின் சிறிய பதிப்பானது 'ஹக்கீஸ்' காதணி என்று அழைக்கப்படுகிறது, இது காது மடல்களைச் சுற்றி மூடி மறைக்கும் வகையில் அணியப்படுகின்றன். இதனால் அவை தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது.

முகத்தின் வகை:

வளையங்கள் மற்றும் ஹக்கீஸ் ஆகியவை ஒரு நீண்ட முகத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது.

அற்புதமான தோடுகள்

நேர்த்தியான மற்றும் அழகான தினசரி பயன்பாட்டிற்கு, தங்கத் தோடுகள் என்பது பிஸியாக இருக்கும் ஒவ்வொரு இளம்பெண் / பெண்ணின் பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. ஆண்களும் ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் தங்கத் தோடுகளை அணிகிறார்கள். அவை அனைத்து வகையான ஆடைகளோடும் நன்றாகப் பொருந்துகிறது, மேலும் அணிபவருக்கு ஒரு தெளிவான நம்பிக்கையை அளிக்கிறது.

முகத்தின் வகை:

எல்லா வகையான முகங்களுக்கும் தோடுகள் பொருத்தமானதாகும், இருப்பினும், ஒரு வட்ட வடிவ முகத்திற்கு சிறந்ததாக உள்ளது.

அழகான சங்கிலிகள்

இது தலையில் மாட்டப்படும் அல்லது குத்தப்படும் தங்கச் சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கக் காதணிகளின் ஒரு பாரம்பரிய வடிவமாகும். இந்தக் காதணிகளானது விரிந்த கூந்தலுடன் கூடிய பாரம்பரிய உடைக்கு பொருத்தமானதாக இருக்கும்.

முகத்தின் வகை:

சங்கிலிக் காதணிகளானது நீள்வடிவ முகத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்; அவை ஒரு நீளமான தோற்றத்தை அளிக்கும்.

நீண்ட காதுப்-பிடிகள்

பாரம்பரிய தங்கக் காதுப்-பிடிகளானது நவநாகரிகத்தில் பரிசோதனை செய்ய விரும்பும், கூட்டத்தில் தனித்துத் தெரிய விரும்பும் இளம் இந்தியர்களால் போற்றப்படுகின்றது. சில காதுப்பிடிகளானது முழு காதுகளையும் மூடியிருக்கும், அவை அழகான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

முகத்தின் வகை:

இது வட்ட வடிவ முகத்தின் பாரம்பரிய தோற்றத்தை மேம்படுத்தும்.

 

இந்தத் தங்கக் காதணிகளானது இந்திய நகைகளில் ஒரு முக்கியமான பகுதியாகும், மேலும் இவை ஒவ்வொரு பெண்ணும் "சொந்தமாக வைத்திருக்க வேண்டியதாகும்”.