Published: 04 செப் 2017

தங்கம் : புராண கால இந்திய மருத்துவர்

பண்டைய மற்றும் ஷமானிய மரபுகளில் "குணப்படுத்துவதற்கான" வரம்பிற்குள் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஆன்மிக அணுகுமுறைகள் இருந்தன.

பண்டைய இந்திய கலாசாரங்களானது இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்றவை மற்றும் கற்றுக்கொண்டவை ஆகும். அவர்கள் வனத்தைக் கடவுள் என்று நம்பினர், மேலும், வாழ்வதற்கு, சாப்பிடுவதற்கு மற்றும் குணப்படுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் காட்டில் இருந்தே பெற வேண்டும் என்று அவர்கள் நம்பினர். நம்முடைய பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் ஆற்றல் என்பதே உண்மையான வாழ்க்கை சக்தியாக இருப்பதை அவர்கள் முதலில் கண்டுபிடித்தனர். அவர்கள் உடல்களைவிட, ஆற்றலை உயர்ந்த இடத்தில் வைத்தனர். அவர்கள் "ஒளி உடல்கள்" அல்லது தெய்வீக ஒளி ஆகியவற்றின் மூலக்கூறு செயல்பாட்டை மாற்றுவதற்காக படிகங்கள், உலோகங்கள் மற்றும் தாவரங்களைப் பயன்படுத்தும் கலையைக் கற்றுக்கொண்டனர்.

தெய்வீக ஒளி என்பது உடல் பாகங்களின் ஆன்மாவின் இயல்பு வடிவம் ஆகும், இதை ஒருவருடைய உடலில் மனிதரால் அணுக முடியாது. தனது சிதைந்த பாகங்களை தெய்வீக ஒளியில் கரைத்து, அவர்களின் சீரமைக்கப்பட்ட சக்கரங்கள் தனித்தனியாக கொடுக்கும் சக்தியைப் பெறுவதே ஒருவரின் அனுபவங்களை மாற்ற ஒரு மனிதருக்கு தூய்மையான வழி ஆகும்.

ஒரு உடலில் 7 சக்கரங்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். இசை அதிர்வுகள், இயற்கையான விஷயங்களுக்கு வெளிப்படுதல், படிகங்கள் மற்றும் தங்கம் போன்ற உலோகங்கள் ஆகியவை இந்தச் சக்கரங்களை தூண்டுவதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன, இது உடலில் தடையின்றி பாயும் அளவற்ற ஆற்றலை உடல் உருவாக்க உதவுகிறது. ஒரு தூய்மையான மனதுடன் இணைந்து வாழும் இந்த நிலையில் இருப்பது என்பது வாழ்வின் மிக உயர்ந்த மற்றும் மிகவும் சாதகமான நிலைகளில் ஒன்றாகும். மனிதர்கள் தங்கள் கலாச்சார அல்லது வெளி உலக முறையுடன் இணைந்து செயல்படுவதற்கு பதிலாக தங்கள் தனிப்பட்ட நலன்களை ஏற்றுக்கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அனுமதிப்பதால் மற்றும் தங்களின் உயர்ந்த அளவிலான அமைதி மற்றும் உற்பத்தித்திறனை சுதந்திரமாக அணுக முடிவதாலும், இது மெய்நிகர் நுண்ணறிவு மற்றும் ஏற்றுக்கொள்ளும் திறன் ஆக பார்க்கப்படுகிறது.

பண்டைய ஷமான்களின் கூற்றுப்படி, விலைமதிப்பற்ற உலோகங்கள், சக்கரங்களை ஒழுங்குப்படுத்தி, தனிநபர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஆழ்நிலை மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளை அணுக உதவுகிறது. கதிர்வீச்சு, இரசாயனம் மற்றும் காற்று, உணவு மற்றும் அவர்களின் உணர்ச்சி அனுபவங்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்படும் நச்சுகள் மூலம் அவர்களுக்கு ஏற்படும் சேதத்தைத் சரிசெய்யும்பொழுது, குணப்படுத்துவதற்கு மற்றும் சக்கரங்களைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் உடலை சமநிலைப்படுத்துவதற்கும், குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற பண்டைய கால பொருட்களில் தங்கம் ஒன்றாகும்.

தங்கம் என்பது எப்போதும் அதன் பண மதிப்பு அல்லது அழகியல் காரணங்களுக்காக மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல், கிழக்கு மற்றும் ஷமானிக் கலாச்சாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த உலோகமாக கருதப்படுகிறது. இதயச் சக்கரம், தொண்டை சக்கரம், மூன்றாவது கண் சக்கரம் மற்றும் கிரீடம் சக்கரம் உள்ளிட்ட உயர் சக்கரங்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக தங்கம் அறியப்படுகிறது. இது சிகிச்சை செயல்பாட்டிற்கு உதவுவதற்காக உடலுக்கு மென்மையான அதிர்வுகளை அளிக்கும் வகையில் சூடான ஆற்றலைத் தக்க வைக்கிறது. செல்கள் மீண்டும் உருவாவதை விரைவுபடுத்துவதற்கும், உலோகத்தால் வெளியிடப்படும் மென்மையான அதிர்வுகளால் எளிதாக வளர உதவுவதற்கும் தங்கம் உடல் பாகங்களின் மீது வைக்கப்பட வேண்டும் என்று பல கலாச்சாரங்களில் நம்பப்படுகிறது. இது தமனிகளில் சுதந்திரமாக இரத்தம் ஓடுவதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

பண்டைய ஜப்பானிய கலாச்சாரத்தில் குத்தூசி மருத்துவத்தைச் செய்வதற்கு தங்க ஊசிகளைப் பயன்படுத்தியது இன்னொரு சுவாரஸ்யமான உதாரணம் ஆகும், இது பல காலமாக மருத்துவ நடைமுறைகளில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், இது அற்புதங்களை நிகழ்த்துவதால், இன்றைய அறிவியல் காலகட்டத்திலும் இதே போன்று பின்பற்றப்படுகிறது.