Published: 14 ஜூலை 2017

உங்கள் எதிர்காலத்தை பணவீக்கமற்றதாக்க தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்

Invest in Gold to make your Future Inflation-Proof
முதலீடு என்பது மதிப்பிடுதல் மற்றும் செல்வத்தை சேர்த்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக பல்வேறு சொத்து வகைகளுக்குள் உங்கள் பணத்தை ஒதுக்கும் விஞ்ஞானம் மற்றும் கலையாகும். திருமணம், முதலாவது மற்றும் இரண்டாவது வீடுகள் வாங்குதல், குழந்தைகளின் கல்வி போன்ற செலவுகளுக்கு உதவுவது தவிர, உங்கள் முதலீடுகளாது நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் ஒரே வருமான ஆதாரமாக இருக்கும். ஒவ்வொரு முதலீடும் பெயரளவிலான மற்றும் உண்மையான என்ற இரண்டு வகையான வருமான வகைகளை உருவாக்கும்.

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிரந்திர வைப்புத் தொகை 10% அடிப்படையில் வருடத்திற்கு ரூ. 1 லட்சம் என்ற பெயரளவிலான வருமானத்தை ஈட்டும். ஆனாலும் இந்த முதலீட்டில் நிஜ வருமானம் உங்களுடைய வாங்கும் சக்தியின் உண்மையான அதிகரிப்பை சார்ந்திருக்கும். பொருளாதாரத்தில் பணவீக்கம் அல்லது விலை அதிகரிப்பு விகிதம் 8% ஆக இருந்தால், நிரந்தர வைப்புத் தொகையின் உண்மையான வருமானம் ரூ. 20,000 அதாவது 2% ஆக மட்டுமே இருக்கும். வரிவிதிப்புடன் சேர்ந்து, உங்கள் நிலையான வருமான முதலீடுகள் எந்த வருவாயும் ஈட்டாது அல்லது எதிர்மறையான நிஜ வருமானத்தை உருவாக்கக் கூடும்.

பணவீக்கத்தில் இருந்து நீண்ட கால முதலீடுகளை பாதுகாத்தல்

பங்கு அல்லது ரியல் எஸ்டேட் முதலீடுகள் போன்ற ஆபத்தான தேர்வுகள் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்பதால், பத்திரங்கள், கடன் பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதிகள், வருங்கால வைப்பு நிதி கணக்குகள் போன்ற குறைந்த ஆபத்து சொத்து வகைகள் பணவீக்க சூழலில் மிகவும் மோசமாக செயல்படுகின்றன. நிலையான வருமானமுள்ள பொருட்கள் நீண்ட கால முதலீட்டை திட்டமிடுவதற்கு உகந்ததாக இருப்பதனால், குறைந்த முதலீட்டு இழப்பு அபாயத்துடன் கவர்ச்சிகரமான வருமானங்களை பெற உதவும் திட்டங்களை கண்டறிவது அவசியமாகும்.

தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு கவசமாகும் ஏனென்றால் தங்கம் இயல்பாகவே மதிப்புடையதாக இருக்கிறது. பத்திரங்கள் மற்றும் நிதி ஆவணங்கள் அவற்றின் மதிப்பை நிறுவனத்தின் செயல்திறன் அல்லது நாட்டின் பொருளாதாரம் போன்ற வெளிப்புற காரணிகளில் இருந்து பெறுகின்றன. பணம் கொடுத்து வாங்கும் சக்தி ஒரேநேரத்தில் வீழ்ச்சியடைவதனால் பங்கு விலை உயர்வு பூஜ்ய வருமானத்தை உருவாக்கும். மறுபுறம், பணவீக்கத்தின் காரணமாக தங்கம், நிலம், எண்ணெய், மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் அல்லது அசையா சொத்துக்களின் மதிப்பு இழப்பு குறைந்த அளவே ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தங்கம்-சுய தேவை மற்றும் விநியோகம்

ஒரு புளூ சிப் நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடலாம். அரசாங்கங்கள் அதிக ரூபாய்நோட்டுகளை அச்சிடலாம். ஆனாலும் மெல்லிய காற்றில் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியாது. தங்கம் என்பது பூமியில் இருந்து வெட்டியெடுக்கப்படும் ஒரு விலைமதிப்பற்ற உலோகமாகும் மற்றும் அதன் விநியோகம் மிகவும் குறைவானதாகும்.

மேலும், தங்கத்திற்கான தேவை பொருளாதார காரணிகளை சார்ந்து இருப்பதில்லை. குறிப்பிட்ட தொழிற்சாலை பயன்பாடுகளைத் தவிர, தங்கம் பிரதானமாக நகைகள் மற்றும் முதலீடு நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. பணவீக்கம் பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவையை பாதிக்கலாம் அதனைத் தொடர்ந்து பங்குகள் மற்றும் கடன் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது, தங்கத்தின் தேவை மற்றும் விநியோகத்தின் தனிப்பட்ட அம்சங்கள் பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளுடன் ஒப்பிடும் போது பாதிக்கப்படாமல் இருக்கின்றன.

பணவீக்கத்திற்கு எதிரான நீண்ட கால பாதுகாப்பு

தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான நீண்ட கால பாதுகாப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். உங்கள் ஓய்வு பலன்களின் ஒரு பகுதி பணவீக்க அழிவுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். பணவீக்கம் மற்றும் வட்டி விகித வேறுபாடுகள் தங்கத்தின் விலையில் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பணத்தினால் பொருள் வாங்கும் சக்தியில் குறைவு ஏற்படுவதிலிருந்து முதலீடுகளை பாதுகாப்பது என்று வரும்போது இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் கடந்த 50-60 ஆண்டுகளில் தங்கத்தின் கடந்த கால செயல்பாடானது வேறு எந்த சொத்தும் தங்கம் போல பயனுள்ளதாக இல்லை என்பதை காட்டுகிறது.

பொருளாதார பிரச்சனைகள் நேரத்தில் பாதுகாப்பான புகலிடம்

எண்கள் தவிர, உங்கள் நீண்ட கால முதலீட்டு யுக்தியில் தங்கத்தை சேர்ப்பது உளவியல் தாக்கமாக எடுத்துக் கொள்வதும் முக்கியமாகும். உலகம் கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களில் பல பிரளய மாற்றங்களை சந்தித்துள்ளது. இவை எல்லாவற்றிலும் தங்கத்தின் மீதான மனித இனத்தின் ஆர்வம் மட்டுமே நிலைத்து நிற்கிறது.

அரசுகள் செயல்பாடற்று போகலாம் மற்றும் புளூ சிப் கம்பெனிகள் திவாலாகிவிடலாம் ஆனால் தங்கம் மட்டும் எதிர்காலத்தில் அதன் மதிப்பை இழப்பதற்கு வாய்ப்பே இல்லை. குழப்பமான காலத்தில் தங்கம் முதலீட்டாளர்கள் விரும்பும் பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது. முதலீட்டு யுக்தி பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதனால் பணவீக்கம் மற்றும் மந்தமான வருடங்களின் போது எதிர்மறை நிஜ வருமானத்தை உருவாக்கலாம். தங்கத்தை மெதுவான மற்றும் நிதானமான முறையில் வாங்குவது உங்கள் முதலீட்டு பிரிவு மிக அதிகமான இழப்பை சந்திக்காது என்பதை உறுதிப்படுத்த உதவும். ஒரு மந்தமான சூழலில் நீங்கள் பணத்தை முதலீடு செய்யத் துவங்கினாலும் தங்கத்தில் முதலீடு செய்வது உங்களை பணப்புழக்கத்தை அனுபவிக்க உறுதியான விதத்தில் உதவும்.

முடிவுரை

தங்கத்தை பணமாக்குதல் போன்ற புதிய வாய்ப்புகளை தங்கத்தில் முதலீடு செய்து வட்டியை சம்பாதிக்க பயன்படுத்தலாம். மேலும், வைப்பு காலத்தின் அடிப்படையில் வட்டியை தங்கமாகவோ அல்லது ரொக்கப் பணமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஒரு உயரிய குறிக்கோளுடைய உலகில், பணவீக்கம் ஒரு பிரச்சினையாக இருக்காது மற்றும் முதலீடு செய்வது மட்டுமே செல்வத்தை சேர்ப்பதற்கு போதுமானதாக இருக்கும். பணவீக்கத்தை ஒழிக்க முடியாது என்பதனால், உங்கள் பணத்தில் ஒரு பகுதியை பொருள் சார்ந்த அல்லது டிமேட் தங்கத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான தேர்வாகும்.