Published: 14 ஜூலை 2017

தங்கத்தில் முதலீடுகள் - செல்வத்தின் பாதுகாப்பு மற்றும் மதிப்பு உயார்வின் அற்புத இணைப்பு

Gold Investments—Fantastic Combination of Wealth Protection and Value Appreciation
தங்கத்தின் மீதான மனிதகுலத்தின் ஆர்வம் மனித நாகரீகத்தைப் போலவே மிகவும் பழமையானது. ரிக் வேதத்தில் தங்கத்தை பற்றிய குறிப்புகள் உள்ளன. ரோமர்கள் இந்தியாவில் இருந்து பட்டு மற்றும் நறுமணப் பொருட்களை வாங்க தங்கத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆதி காலம் முதல் நவீன காலம் வரை தங்கம் ஒரு நம்பகமான மற்றும் பாதுகாப்பான மதிப்புமிக்க பொருளாக தொடர்ந்து இருந்து வருகிறது

செல்வத்தை பாதுகாத்தல்

செல்வத்தை பாதுகாப்பதற்கு தங்கம் முதன்மையான தேர்வாகும் ஏனென்றால் இது ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பிற நிதி பத்திரங்கள் போல் இல்லாமல் இயற்கையாகவே மதிப்புடையதாக இருக்கிறது. ரூபாய் நோட்டை எளிதாக கிழிக்கலாம் அல்லது அழிக்கலாம். மறுபுறம் தங்கம் ஒரு அழிக்க முடியாத உலோகம் இதை அழிக்க முடியாது. அடுத்த 30-40 ஆண்டுகளுக்கு முதலீட்டு யுக்தியை உருவாக்கும் போது இவையெல்லாம் தங்கத்தை ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக்குகிறது.

பொருள் சார்ந்த உழைப்பு தவிர, தங்கம் அரிதாக கிடைப்பதனால் எப்போதுமே ஒரு விலையுயர்வான பொருளாக இருந்து வருகிறது. ஒரு நாட்டின் நாணயம் அல்லது ஒரு புளூ சிப் நிறுவனத்தின் பங்குகள் நாட்டின் பொருளாதாரம் அல்லது நிறுவனத்தின் செயல்திறனில் இருந்து அவற்றின் மதிப்பை பெறுகின்றன. தங்கம் இயல்பாகவே மதிப்புமிக்கதாகும் இதுதான் தங்கத்தை செல்வத்தை பாதுகாப்பதற்கான சிறந்த கருவியாக்குகிறது.

மூன்றாவதாக, நவீன பொருளாதாரத்தில் தங்கத்தின் நிலை காரணமாக தங்கத்தை பன்முகப்படுத்துதல் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமான முதலீடாக இருக்கிறது என்பதே கடந்த 100 ஆண்டுகளில் கவனிக்ப்பட்ட பொதுவான போக்காக இருக்கிறது. பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களின் போது முதலீட்டாளர்கள் தங்களின் நிதிகளை தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். உலக பொருளாதாரம் ஏற்றங்களும் இறக்கங்களுமாக ஒரு சுழற்சி முறையில் செல்வதனால், பொருளாதார பின்னடைவுகள் மற்றும் வீழ்ச்சியின் போது தங்கத்தில் முதலீடு செய்வது பிற முதலீட்டு விருப்பங்களை விட சிறப்பாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

மதிப்பு உயர்வு

தங்கம் வரலாற்று ரீதியாக நீண்ட காலமாகவே மதிப்பு உயர்ந்து வருகிறது, அது எளிதாக பல வடிவங்களில் கிடைக்கிறது

ஒரு சாமர்த்தியமான பல்வகைப்படுத்துதல் விருப்பம்

பலதரப்பட்ட பிரிவை உருவாக்குவதே உணர்வுப்பூர்வமான முதலீடாகும். பங்கு முதலீடுகளை மட்டுமே கொண்ட ஒரு பிரிவு அதிக வருமானத்தை கொடுக்கலாம், ஆனால் மூலதனத்தை மொத்தமாக இழக்கும் ஒரு உயர் ஆபத்தும் இருக்கிறது. தங்கத்தை பன்முகத்தன்மையுடையதாக்கி தங்கம் தொடர்பான முதலீட்டு விருப்பங்களில் நிதிகளை ஒதுக்குவது ஆபத்தை சமநிலைப்படுத்த உங்களுக்கு உதவும். இதனால்தான் தங்கம் குறைந்த அளவு நிதி அறிவு அல்லது முதலீட்டு அனுபவம் கொண்ட முதிர்ச்சியடையாத முதலீட்டாளர்களுக்கும் ஒரு அற்புதமான தேர்வாக இருக்கிறது.

சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் பல விருப்பங்கங்கள் கிடைப்பதனால் தங்கத்தில் முதலீடு செய்வது எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

ஆரம்ப கட்ட முதலீட்டாளர்கள், ஒரு தங்கத்தை கட்டிகளாக அல்லது நாணயங்களாக வாங்கலாம். அல்லது, நகையில் முதலீடு செய்யலாம்.

தங்க ஈடிஎப்-களை வாங்குதல் மற்றும் தங்க மியுச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பிற எளிய மற்றும் மலிவான விருப்பங்களாகும். முதலீட்டை மீட்கும் நேரத்தில் தங்க பொருட்களாக மாற்றக் கூடிய வகைகளில் வாங்குபவர்களுக்கு வழங்கப்படும்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தின் கீழ் தங்கத்த பொருளாக டெபாசிட் செய்யலாம். பணமாக்கல் தனிநபர்களை குறைந்த பொருள் இழப்பு அல்லது பொருளாதார மதிப்பு குறைப்பு போன்ற குறைந்த ஆபத்துடன் தங்கத்தில் முதலீடு செய்வதில் வட்டி சம்பாதிக்க உதவும்.

ஒரு நம்பகமான, இலாபகரமான தங்கத்தில் நிதிகளை ஒதுக்குவதன் மூலம் தீவிரமான உயர் அபாய முதலீடுகளில் சமநிலைப்படுத்தப்படுகிற ஒரு சமநிலையான பிரிவை உருவாக்க இதுபோன்ற ஒரு யுக்கி உங்களுக்கு உதவுகிறது.

முடிவுரை

இவ்வாறு, தங்கம் இரண்டு உலகங்களையும் ஒன்றிணைக்கிறது மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.