Published: 17 ஆக 2017

பாரம்பரிய இந்திய புடவைகளில் தங்கம்

கி.மு.2800லிருந்தே புடவைகள் தோன்றின என்று உங்களுக்குத் தெரியுமா1?

இன்று பல்வேறு இந்திய மாநிலங்களும் கலாச்சாரங்களும் தங்களுக்கென பிரத்யேகமான புடவையை வைத்துக் கொண்டுள்ளன. ஒரு புடவை 84 விதங்களில் கட்டப்படலாம் என்று நிரூபிப்பதற்கு கட்டிடக்கலை சான்றுகள் உள்ளன.!2. காட்டன், சிஃபான், பட்டு என்று பல்வேறு விதமான பொருட்களால் இந்தப் புடவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுதான் சிறந்த பகுதி. பல புடவைகள் தங்கத்தால் கூட செய்யப்படுகின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த தங்கத்தினால் செய்யப்பட்ட பல்வேறு விதமான புடவைகள் பற்றிய ஒரு பார்வை இதோ.

  1. உத்தர பிரதேசத்திலிருந்து பனாரசி பட்டு புடவைகள்

    இந்தப் புடவைகள் வாரணாசியில் தயார் செய்யப்படுபவை. (முன்னர் இதனை பனாரஸ் அல்லது பெனாரஸ்) என்று அழைப்பர். இந்த தனித்துவமான புடவைகள் அவற்றின் தங்க ஜரிகை மற்றும் அற்புதமான எம்பிராய்டரிக்கு பெயர் பெற்றவை. பொதுவாக இந்தப் புடவைகள் பட்டினால் நெய்யப்படுபவை. இதன் நுண்ணியமான வேலைப்பாட்டினால் மணமகள்களின் பிரியமான தேர்வாக இவை இருக்கும். இவற்றில் வெளிப்படையான தங்க வேலைப்பாடுகள், உலோக விளைவுகள், வலைபின்னல் வடிவமைப்புகள், மீனாக்காரி வேலைப்பாடுகள் ஆகியவற்றுடன் பிரம்மாண்டமான புடவையாக நெய்யப்படுகிறது.

    மொகலாயர்கள் காலத்து வடிவங்களான பூக்கள், பூ தொடர்பான படங்கள், நிமிர்ந்து நிற்கும் இலைகள், சிறிய, விளக்கமான உருவங்கள் என்று பனாரஸ் புடவைகளில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

  2. தமிழ்நாட்டிலிருந்து காஞ்சிபுரம் பட்டுப் புடவை

    காஞ்சிபுரம் புடவைகள் என்று அழைக்கப்படும் இந்தப் புடவைகள் காஞ்சி நகரம் அல்லது காஞ்சிபுரத்திலிருந்து கிடைக்கின்றன. இந்த புடவைகள் மல்பெரி எனப்படும் பட்டுப்பூச்சிகளிலிருந்து கிடைக்கும் பட்டு நூலினால் நெய்யப்படுபவை. இதன் ஜரிகை வேலைப்பாடுகள் தங்க நூலினால் ஆனவை. காஞ்சிபுரம் புடவைகளின் முக்கிய அம்சம் இதுதான். பொதுவாக இதில் உடல் நிறத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டும் கரை (கான்ட்ராஸ்ட் பார்டர்) இருக்கும். கட்டங்கள், நீளகோடுகள், பூக்களை அடிப்படையாக வைத்த ஓவியங்கள், பறவைகள், விலங்குகள் அல்லது கோவில் எல்லைப்புறங்கள் வடிவங்களாக நெய்யப்படும்.

    தென்னிந்திய கோவில்களின் உருவங்கள், இராமாயணம் அல்லது மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து இடம் பெறும் ஓவியங்கள், இராஜா இரவி வர்மாவின் ஓவியங்கள் ஆகியவை சில புடவைகளில் வரையப்படும். இந்த கருத்துக்களை தங்க நூல்களினாலும் நெய்வார்கள்.

    நகைச்சுவையான உண்மை:

    உலகின் மிகவும் விலை அதிகமான புடவை என்று கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் ஒரு புடவை இடம்பெற்றுள்ளது. இந்தப் புடவையை கடைசியாக அணிந்தவர் திருமதி நீதா அம்பானி. இந்த புடவை 8 கிலோ எடை கொண்டது. இதில் இராஜா இரவி வர்மாவின் ஓவியங்களில் சிறந்த 11 ஓவியங்கள் நெய்யப்பெற்றுள்ளன. இதன் மதிப்பு ரூ.40 இலட்சம் ரூபாயாகும்

  3. கேரளாவிலிருந்து கவசு

    முண்டும் நெயிதும் என்று அழைக்கப்படும இந்தப் புடவை மிகவும் பழங்கால புடவையின் வடிவம். மகாபாரதத்தில் சகுந்தலை இந்தப் புடவையை நீவி பாணியில் அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இராஜா இரவி வர்மாவின் ஓவியங்களிலும் இந்தப் புடவையின் அமைப்பு தீட்டப்பட்டிருக்கிறது.

    இந்தப் புடவை காட்டனால்(பருத்தியால்) ஆனது. கையால் நெய்யப்படுவது. அசல் தங்கத்தினால் ஆன அகலமான ஜரிகை பார்டர் கொண்டது. இதில் எளிய ஜியோமெட்ரிக்கல் வடிவங்கள் உள்ளன. சில சமயங்களில் இதில் மயில் அல்லது கோவில் வடிவங்களும் உண்டு

  4. மகாராஷ்டிராவிலிருந்து பைதானி

    அவுரங்காபாத்தில், பைத்தானில் அசல் தங்க ஜரிகையினால் நெய்யப்படும் இந்தப் புடவை, நாட்டிலேயே அதிகம் விலை கொண்ட புடவை என்று கூறப்படுகிறது. இதில் ஒரு சதுர வடிவம், புள்ளியடப்பட்ட அல்லது தெளிவான பார்டர் இருக்கும். இதன் முந்தானைப் பகுதியில் (தோளுக்கு மேல் அணியப்படும் புடவையின் லேசான முனை) ஒரு மயில் வடிவமோ அல்லது கிளி வடிவமோ இருக்கும்.

    இந்தப் புடவைகள் புத்தமத ஓவியங்களின் தாக்கம் பெற்றவை. எனவே புத்தமத கலாச்சாரத்தில் உள்ள பல்வேறு குறியீடுகள் இந்தப் புடவைகளில் இடம்பெறும். சில சமயங்களில், பூக்கள் பூக்கும் செடி வைக்கப்பட்ட பூந்தொட்டி, பூக்கள் கருத்துக்கள், ஏணிப்படிகள், வடிகணித வடிவங்கள் ஆகியவை முந்தானையில் இடம்பெறும்.

    நகைச்சுவையான உண்மை :

    இந்தப் புடவையில் பயன்படுத்தப்படும் தங்க நூல்கள் மிகவும் சிறந்த திறன் கொண்டவை. இது மிகவும் பிரகாசமானது. எந்த அளவிற்கு என்றால் சமயத்தில் கண்ணாடியைப் போல் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.

  5. அசாமிலிருந்து முகா

    இந்தப் புடவையானது தங்க இழை என்று அழைக்கப்படும் முகாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இது ப்ளெயினாக இருக்கும். சில சமயங்களில் முந்தானையிலும் மற்ற பார்டர்களிலும் ஏதேனும் வடிவம் இடம்பெறும். இது மிகவும் நுட்பமான தெளிவான எம்பிராய்டர்ட் கொண்ட பூக்கள், இலைகள், அத்திப் பூக்கள், வடிகணித முறைகள், யானை வடிவங்கள் ஆகியவை கொண்டவை. இந்த பளபளக்கும் புடவைக்கு கண்ணாடி போன்ற தரம் உண்டு. ஒவ்வொரு முறை துவைக்கும்போதும் அது மின்னும்.

    நகைச்சுவையான உண்மை:

    பண்டைய காலத்தில் முகா புடவைகள் இராஜ பரம்பரையினருக்குச் சொந்தமானவை என்று கருதப்படுகின்றன.

  6. வங்காளத்திலிருந்து பாலுச்சாரி

    பாலுச்சாரி புடவைகள் பட்டினால் ஆனவை. இதன் முந்தானையில் புராணக் கதைகள் வரையப்பட்டிருக்கும். மகாபாரதம் மற்றும் இராமாயணத்திலிருந்து பல்வேறு கதைகள் இதில் இடம்பெற்றிருக்கும். மொகலாயர் காலத்தின்போது, இதில் சதர வடிவங்கள் உள்ளன. இதில் பைஸ்லி பூட்டா கருத்துக்கள் நெய்யப்பட்டுள்ளன. பெங்கால் நவாவின் வாழ்கை முறைகள் விவரிக்கப்பட்டிருக்கும். பிரிட்டிஷாரின் காலத்தின்போது, கிழக்கிந்திய கம்பெனியில் பணி புரிந்த ஐரோப்பிய அதிகாரிகளின் படங்கள் கூட இந்தப் புடவைகளில் நெய்யப்பட்டது.

    வரலாற்று ரீதியாக, ஜமீந்தார் இல்லங்களில் வாழும் உயர்குடி பெண்கள் இந்தப் புடவையை அணிவார்கள். ஸ்வார்ணாசாரி என்ற வகையான பாலுச்சாரி புடவைகள் உண்டு. இவை தங்க நூல்களால் நெய்யப்படுகின்றன. இதில் உள்ள தங்கமானது புடவையில் உள்ள வடிவங்களுக்கு வெளிச்சம் அளித்து அழகைக் கூட்டி காண்பிக்கின்றன.

    நகைச்சுவையான உண்மை. இந்த வகை புடவை நெய்பவர்களுக்கு 2009ஆம் ஆண்டும் 2010ஆம் ஆண்டும் இந்திய குடியரசுத்தலைவர் தேசிய விருது வழங்கினார்.

Source1, Source2, Source3, Source4, Source5, Source6, Source7, Source8, Source9, Source10, Source11