Published: 02 பிப் 2018

உங்கள் அலைபேசியில் உள்ள தங்கம்

அடுத்த முறை உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனைப் பார்க்கும்போது, இதைப் பற்றி சிந்திக்கவும்: இதில் தங்கம் உள்ளது. தங்கமானது அரிக்கும் தன்மை அல்லது துருப்பிடிக்கும் தன்மை இல்லாதிருப்பதால், அது உங்கள் செல்போனில் உள்ள ஒருங்கிணைந்த சுற்று (ஐசி) போர்டுகளில் உள்ள சிறிய இணைப்பிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் ஸ்மார்ட்போனை ஒரு அற்புதமான சாதனமாக ஆக்குகிறது. உண்மையில், இவற்றில் தங்கம் அதிகளவில் இல்லை - சுமார் 50 மில்லிகிராம் அளவில் - முப்பது அல்லது முப்பத்தி ஐந்து ரூபாய் மதிப்பில் உள்ளது. ஆனால் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது, இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

இந்தியாவில் 800 மில்லியனுக்கும் அதிகமான செல்போன்கள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம்- இது மிக பழைய மதிப்பீடாகும் – இப்போது சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பது பற்றி பேசுகிறோம்! மேலும் சிந்தனையை விரிவுபடுத்தவும்; உலகளாவிய ரீதியில், ஒரு வருடத்திற்கு ஒரு பில்லியன் மொபைல் ஃபோன்களை நாம் உற்பத்தி செய்கிறோம் என பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன! இது மொபைல் போன்களில் மட்டும் 3,500 கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் இருப்பதைக் காட்டுகிறது.

தங்கம் ஒரு சிறந்த மின்சாரம் கடத்தி என்பதால் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. வேறு இடங்களில் இணைப்பிகளிலும் அது பயன்படுத்தப்படுகிறது; தங்கத்தைவிட வெள்ளி மற்றும் தாமிரம் ஆகிய இரண்டு உலோகங்கள் மட்டுமே சிறந்த மின்சாரம் கடத்தியாக கருதப்படுகிறது. தங்க இணைப்பிகளானது டிஜிட்டல் தரவுகளை வேகமாகவும் துல்லியமாகவும் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.

பூமியிலிருந்து அதை தோண்டி எடுத்த பிறகு, அதை விண்வெளிக்கு செயற்கைகோள்களில் அனுப்புகிறோம். தங்கம் பூசப்பட்ட பாலியஸ்டர் படலங்களானது அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை பிரதிபலிப்பதற்கும், வெப்பநிலைகளை நிலைப்படுத்துவதற்கும் விண்வெளி ஓடங்களில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் இல்லாமல் இருந்தால், விண்கலத்தின் இருண்ட பகுதிகள் கணிசமான வெப்பத்தை உறிஞ்சிவிடும் என்று பூமியின் விஞ்ஞான செய்தி மற்றும் தகவல்களுக்கான முன்னணி வலைத்தளமான Geology.com கூறுகிறது. அமெரிக்க விண்வெளி விண்கலமான கொலம்பியா 41 கிலோ தங்கத்தை இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தியது (அதன் விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டுகள் உட்பட)!

மொபைல் போன்களைப் போலவே, தங்கமானது கணினிகள் மற்றும் மடிக்கணினிகளின் ஐசி-களில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் துல்லியமாக சொல்வதானால், கணினியின் மைய செயலாக்க அலகு (சிபீயு) அல்லது 'மூளை' என்பதை உருவாக்கும் சர்க்யூட் போர்டுகளில் பயன்படுத்தப்படுகிறது; கணினியின் பல்வேறு பகுதிகள் மின்னாற்றலைப் பெறுவதற்கும், ஒன்றை ஒன்று தொடர்ச்சியாக தொடர்புகொள்வதற்கும் இது உதவுகிறது. வில்லி நெல்சன் பாடலைப் போலவே, 'தங்கம் எப்போதும் அதன் மனதில் இருக்கிறது' என்று நீங்கள் கூறலாம்.