Published: 10 ஆக 2017

இராமாயணத்தின் தங்க தருணங்கள்

Gold Ramayana

இந்து மதத்தில் தங்கம் எப்போதுமே பெரும் பங்காற்றுகிறது. செல்வத்திற்கௌ ஒரு கடவுளும் அம்மனும் உள்ளனர். தினமும் துதித்தால் தங்க மழையை உண்டு பண்ணும் சுலோகம் கூட உள்ளது. பண்டைய இந்து புராணமான இராமாயணத்தில் பல இடங்களில் வலுவாக தங்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான பகவான் இராமர், அவரது மனைவி சீதை, சகோதரர் இலக்ஷ்மணன் ஆகியோர் வாழ்க்கை கதையை விளக்குவது இராமாயணம். இந்தக் கதையில் இந்தியாவின் விருப்பமான உலோகம் பெரும் பங்காற்றுகிறது. இந்த புராணத்தில் அவர்கள் காட்டில் பயணித்த 14 ஆண்டுகள் , இராட்சத மன்னன் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது, அதனைத் தொடர்ந்த போர் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.


சவால்

இராவணனுடன் போர் நடைபெற்ற பிறகு, தனது குடிமக்களுள் ஒருவரான இராமன் நச்சரிக்கப்பட்டார். அவரது இராஜ்ஜியத்தைவிட அவரது தனிப்பட்ட உறவுகளே மிகவும் முக்கியம் என்று அந்த குடிமகன் கூறினார். அந்த குடிமகன் சொன்னது தவறு என்று உணர்த்துவதற்காக சீதையை காட்டில் விட்டுவிட்டு வருமாறு இராமர் இலக்ஷமணரிடம் கூறினார். ஆனால் இராமர் யாஜ்னாக்கள் (பலியிடுதல்) செய்ய வேண்டும்.அதற்கு ஒருவரது மனைவி மிகவும் முக்கியம். அரண்மனைக்கு சீதையை மீண்டும் அழைத்து வரவேண்டும் அல்லது மறுதிருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது ஆன்மிகக் குரு கூறினார். இரண்டையும் செய்வதற்கு பகவான் இராமர் மறுத்துவிடுவார். அதன் பின் ஆலோசனைப் படி சுத்தமான தங்கத்தில் சீதையைப்போல் ஒரு சிலை செய்து இந்த யாகத்தை நடத்தலாம் என்று அவரது குரு கூறுவார். அவரது குருவின் ஆலோசனைப்படி ஒவ்வொரு முறை இராமர் யாகம் நடத்தும்போதும் சீதையின் புதிய தங்க சிலையை உருவாக்குவார்.


கடத்திக்கொண்டு செல்லுதல்

இராவணனின் மாமாவான மாரீசன் ஒரு புள்ளிமான் போல் வேடமணிந்து வந்து சீதையைக் கவர்வதற்கு இராவணனுக்கு உதவுவான். இராட்சத மன்னன் இராவணனிடம ஒரு புஷ்பக விமானம் இருந்தது. இந்த விமானம் தங்கத்தால் செய்யப்பட்டு அவனது மனதால்5 கட்டுப்படுத்தப்பட்டது.

இராவணன் சீதையைக் கடத்திய பிறகு, அனுமார் இலங்கை சென்று சீதையை சந்திக்கிறார். ஒரு தங்கஇலையில் பதிக்கப்பட்ட முத்துவை எடுத்துச்சென்று பகவான் இராமரிடம் அளிக்குமாறு சீதை அனுமாரைக் கேட்டுக்கொள்கிறார்.

அலங்கரித்தல்

நாட்டிலிருந்து7 வெளியேற்றப்படும் முன் பகவான் இராமர், இலக்ஷமணர், சீதை ஆகியோர் இராஜ உடைகள், தங்க மகுடங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை அணிந்திருந்தனர். இராவணனுடன் போர் புரியும் முன்பு, தாங்கள் பகவான் விண்ணு, சிவபெருமான் மற்றும் சீதை அணிந்திருக்கும் சக்தி மிகுந்த தங்க மோதிரம் ஆகியவற்றிற்கு மட்டுமே பயப்படுவதாக கருட மன்னர் சடயு கூறுவார்.

தங்க நகரமான இலங்கை

இராவணன் ஆண்டதாகக் கூறப்படும் இலங்கை நகரம் முழுவதும் தங்கத்தால் ஆனது என்று கூறப்படுகிறது. தங்க நகரம் இலங்கை முழுவதும் அனைத்து பக்கங்களிலும் தங்க சுவர்கள், தங்க கதவுகள் இருந்தன. இலங்கை நகரத்தை சொந்தமாக வைத்திருந்தவர் குபேரர்.

Sources:
Source1Source2Source3Source4Source5Source6