Published: 28 ஆக 2017

பொற்கொல்லர்கள் – பாடப்படாத கலைஞர்கள்

தனது உறவுப் பெண்ணின் கழுத்து, காதுகள் மற்றும் கைகள் ஆகியவற்றை அலங்கரித்திருக்கும் கழுத்தணி, காதணிகள் மற்றும் வளையல்கள் ஆகியவற்றை ஆச்சரியத்துடன் கண்டு ஷில்பி வியந்தாள். இந்த அளவிற்கு ஒரு நபரின் அழகை நகைகள் அதிகப்படுத்தும் என்று அவள் நினைத்ததில்லை. மணமகளாக இருந்தாலும், அவளது உறவுப் பெண் மிக அழகாக இருந்தாள்; 'வாவ்!' என்று ஷில்பி ஆச்சரியப்பட்டாள். இதைக் கண்டு, அவளுக்கு அடுத்தபடியாக உட்கார்ந்திருந்த அவளின் பாட்டி, "ஆமாம், அவள் அழகாக இருக்கிறாள், அப்படித்தானே?" என்றார். "இல்லை! நான் நகைகளைக் கண்டு வாவ் என்று சொன்னேன், அவளை இல்லை" என்று ஷில்பி அப்பாவித்தனமாக பதிலளித்தாள். அவளுடைய பாட்டி இதயப்பூர்வமாக சிரித்து, "நீ எவ்வளவு அப்பாவியாக இருக்கிறாய். ஆனால் உனது 'வாவ்' என்பதற்கு பதிலளிக்கும் முன்னர், முதலில் நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அது என்ன நகைகள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். ஷில்பி அவளின் தலையை அசைத்தாள், அதன் பின்னர் அவளுக்கு சோனார்ஸ் (பொற்கொல்லர்கள்) மற்றும் தங்க நகைகள் போன்றவற்றின் உலகம் குறித்த அறிமுகம் கிடைத்தது.

அவளது உறவுப் பெண் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களானது, அவளுடைய முன்னோர்களால் தூய தங்கத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாக பாட்டி கூறினார். சிறிது ஆர்வத்துடன், ஆனால் இன்னும் குழப்பத்துடன், ஷில்பி தனது தலையை ஆட்டினாள், மேலும் தனது உறவுப் பெண்ணை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறாள் என்று அவள் பாட்டிக்கு தெரிந்தது. ஒரு நாள், ஷில்பி தனது ஆர்வத்தை தனது தொழில் வாழ்க்கையாக மாற்றி, நகை வடிவமைப்புப் பற்றிய படிப்பை எடுப்பாள் என்று அந்த நேரத்தில் அவளுக்குத் தெரியாது.

இன்று, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சோனாரின் பயணத்தைப் பற்றி விளக்கி, ஷில்பி தனது பாட்டியிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். தனது பாட்டியும், குடும்பத்திலுள்ள அனைத்துப் பெண்களும் அலங்கரித்துக்கொள்ள விரும்புவதே தங்கத்தின் தேவைக்கான ஆரம்பக் கட்டம் ஆகும். தங்களின் நகைகள் வடிவமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து, அனைத்து நகை வடிவமைப்புகளுக்கும் வடிவம் தரும் சோனாரான மனோஜ் பற்றி ஷில்பி தனது பாட்டியிடம் கூறினாள். தனது சிறிய தொலைதூர கிராமத்திலிருந்து பரபரப்பான நகர்ப்புற இந்தியாவிற்கு வந்த மனோஜின் பயணத்தின் ஒவ்வொரு படியையும் ஷில்பி விவரித்தாள்.

அவரது குழந்தைப் பருவத்தில், மனோஜின் தந்தை அவரை தங்க ஆபரணப் பணிமனைக்கு அழைத்துச் சென்றார். அவரது தந்தை தனது தந்தையிடமிருந்து நகைகளை உருவாக்கும் திறனைப் பெற்றார், இதனால், இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மடைமாற்றப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், மனோஜ் தனது தந்தையிடம் இருந்து தங்கத்தை சீர்படுத்துதல், ஒட்டுதல், அறுத்தல், வார்த்தல், வடித்தல் மற்றும் பாலிஷ் செய்தல் போன்ற திறன்களைப் பெற்றார். சோனாரின் வேலைகளானது தொழில்நுட்பத்தின் வருகையால் கணிசமாக எளிதாகிவிட்டது. இருப்பினும், மனோஜின் தாத்தா நகைகளை வடிவமைக்கும் போது, அதன் சரியான துல்லியத்தை பெறுவதற்காக வார்க்கப்பட்ட நகைகளை நோக்கி வளைந்து, குனிந்து வேலை பார்த்தார். மனோஜ் இப்பொழுது தனது உபகரணத்தின் மீது பல்வேறு உருப்பெருக்க கண்ணாடிகள், ஒரு இரட்டை திறன்மிக்க எல்இடி விளக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி, நேர்த்தியான வடிவமைப்புகளை துல்லியமாகப் பெறுகிறார்.

மனோஜ் அவரது கலைப்படைப்பை வடிவமைக்க பின்வரும் கருவிகளைப் பொதுவாகப் பயன்படுத்துகிறார்:
  • அளவிடும் கருவிகள்
  • விரல் அளவுகள்
  • பொற்கொல்லர் உளி, சுத்தியல், டேப்பிங், பிளாக், முகடாக்குதல், பெஞ்ச் ஊசிகள், துளையிடுதல், பளபளப்பாக்குதல்

தனது பணியை முன்பை விட எளிதாக்கும் தொழில்நுட்பம் கிடைக்கப்பெறும் நகருக்கு மனோஜ் மாறினார். இருப்பினும், அவரது தந்தையும், ஆயிரக்கணக்கான பிற பொற்கொல்லர்களும் இன்னும் அவரது கிராமங்களில் பாரம்பரிய முறைகளை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். மனோஜுடன் ஒரு நாள் செலவிட்ட ஷில்பி, இந்த ஆபரணங்களை உருவாக்குவது எவ்வளவு கடினமான வேலை என்பதை உணர்ந்தாள். அவர்களுடைய கலைப்படைப்பானது ஒவ்வொரு துண்டுகளிலும் புதிர் நிறைந்த அழகைக் கொண்டுவருகிறது, மேலும் அவளுடைய உறவுப் பெண்ணைப் போலவே பல்வேறு மக்களை விசேஷ நாட்களில் அழகாக்குகிறது.