Published: 08 ஆக 2017

தங்கமும் ஆரோக்கியமும்

Gold Health Benefits

5000 ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்சான்டிரியாவில் உள்ள இரசவாதிகள் ஒரு திரவ தங்க மருந்தை உருவாக்கினர் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த மருந்தானது மனிதர்கள் வியாதிகளை எதிர்த்து போராடவும் இளமையாக இருக்கவும் உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா ?

உங்களது விலை உயர்ந்த நகைத் தொகுப்பிற்கான ஒரு கூடுதல் பொருள் மட்டுமல்ல தங்கம் . அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உதவும்:

  1. இரத்த சுற்றோட்டத்தை மேம்படுத்தும்

    இதயத்திற்கு இதமான உலோகம் தங்கம் என்று அறியப்படுகிறது. உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிரக்கிறது. உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் அதிகபட்ச ஆக்சிஜனைப் பெற உதவுகிறது.
    முற்காலத்தில் அடிவயிற்றை சுற்றி தங்க ஆபரணங்கள் அணியுமாறு கருத்தரித்த பெண்களுக்கு அறிவுறுத்துவார்கள். இப்படி செய்வதால் தாய்க்கும் சேய்க்கும் இரத்தமும் மற்ற உடல் திரவங்களும் சீராக சுற்றோட்டத்தில் கிடைக்கும்.

  2. குணமாக்குதல்

    ஒரு பாதிக்கப்பட்ட அல்லது காயப்பட்ட உடல் பகுதியில் சுத்தமான 24 காரட் தங்கத்தை வைத்தால் அது அங்குள்ள தொற்றுக்களைக் கட்டுப்படுத்தி அந்த புண்ணை ஆற்றும் என்று நம்பப்படுகிறது.

  3. சரும பாதுகாப்பு

    எகிப்தின் முந்தைய இராணியான க்ளியோபட்ரா, ஒவ்வொரு இரவும் தூங்கும்போது தங்க முகமூடியை அணிந்திருந்தாள் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் சருமத்திற்குத் தேவையான இதத்தையும் ஆதரவான அதிர்வலைகளையும் இது உருவாக்கும். இது உங்கள் உடல் செல்களை புதிதாக உருவாக்க உதவுகிறது. பல்வேறு சரும பாதுகாப்பு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் தங்கம் பயன்படுகிறது. படர்தாமரை, பூஞ்சை தொற்று, அரிப்பு, சொறி, சிரங்கு, தோல் எரிச்சல் போன்ற பல்வேறு தோல் நோய்களை சமாளிக்க இது உதவுகிறது.

  4. உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது

    தங்கம் அணிவதால் உங்கள் உடலின் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. சில்லென்ற வானிலை, வெப்ப அதிர்வலைகள் மற்றும் இரவு வியர்வைகளின்போது உங்கள் உடல் வெப்பநிலையை பராமரிக்கிறது.

  5. எலும்புருக்கி நோய் சிகிச்சையில் உதவுகிறது

    இரண்டாம் உலகப் போருக்குப் பின் எலும்புருக்கி நோயை குணமாக்க தங்கம் சேர்க்கப்பட்ட கலப்பு மருந்து பயன்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? மறுமலர்ச்சி காலத்தின்போது வெனிஸ் நகரில் ஒரு சமூகக் கூட்டத்தில் விருந்தினர்களுக்கு உணவுக்குப் பின் தங்க முலாம் பூசப்பட்ட பாதாம் பருப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மூட்டு வலியை குணப்படுத்தவும் விருந்தளிப்பவரின் செல்வத்தை பற்றி பறைசாற்றவும் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் உங்கள் மூட்டுக்களில் உள்ள காயத்தின் வீரியத்தைக் குறைத்து இரத்த சுற்றோட்டத்தை அதிகரிக்க தங்கம் உதவும்.

  6. போதை பழக்கத்தை ஒழிக்கும் சிகிச்சை அளிக்கிறது

    19ஆம் நூற்றாண்டில் மது அருந்தும் பழக்கத்திற்கு எதிரான சிகிச்சைக்கு தங்கம் பயன்பட்டுள்ளது, நிகோட்டின், மருந்துகள் மற்றும் காபின் போதைக்கு எதிரான சிகிச்சைகளில் மருந்தாக தங்கம் பயன்படுகிறது.

  7. புற்றுநோயை குணமாக்குகிறது

    புற்றுநோய் செல்களுக்கான வளர்ச்சியை உடல் கட்டுப்படுத்துவதில் தங்கம் உதவி செய்கிறது. எனவே உயிர் உறுப்பு புற்றுநோய்கள் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் போன்ற பல்வேறு விதமான புற்றுநோய்களைக் குணப்படுத்தும் மாற்று மருந்தாக தங்கம் பயன்படுகிறது. புற்றுநோயை முன்னரே கண்டறியவும் தங்கம் உதவுகிறது. தங்க நானோ(நுண்ணிய) பொருட்களை பயன்படுத்தி புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் முறையை அமெரிக்காவைச் சேர்ந்த உயிர் மருந்தியல் நிறுவனமான சைட்இம்யூன் கண்டறிந்துள்ளது. நானோஸ்பெக்ட்டிரா என்ற மற்றொரு நிறுவனம், நானோஷெல்ஸ் என்ற வெப்பத்தின் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் வேறு வகையான கூடுகளை உருவாக்கி உள்ளது. ஒரு நானோஷெல் அல்லது நானோஷெல் ப்ளாஸ்மான் எனப்படுவது இரட்டை மின் முனை கொண்ட உருண்டை வடிவமான நானோ துகளை உள்ளடக்கியது. இதனை ஒரு மெல்லிய உலோக ஷெல் சூழ்ந்துள்ளது ( குறிப்பாக தங்கம்).

  8. சுகாதாரத் தொழில்நுட்பம்

    ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் நடத்தப்படும் இலட்சக்கணக்கான விரைவான சோதனை ஆய்வுகளில் [Rapid Diagnostic Tests (RDTs)] தங்க நானோதுகள்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? தங்க நானோதுகள்கள் கொண்ட விரைவான சோதனை ஆய்வுகள் ஒரு நபருக்கு மலேரியா நோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிய உதவுகின்றன. இதில் மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் ஹெச்ஐவி/ எய்ட்ஸ் போன்ற நோய்களை முன்னரே கண்டறியவும் தங்கம் பயன்படுகிறது என்பது அற்புதமான விஷயம்.

உங்களது நிதி எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதை மட்டுமல்ல நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தங்கம் உதவும்.
Sources:
Source1Source2Source3Source4Source5