Published: 28 ஜூன் 2018

தங்கம் எவ்வாறு கலிபோர்னியாவை உருவாக்கியது?

Famous Californian gold rush story

கலிபோர்னியா கோல்டு ரஷ் ஆனது 1848 மற்றும் 1855 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் தான் கலிபோர்னியாவில் தங்கம் கண்டறியப்பட்டது.

ஜனவரி 24, 1848ல், கலிபோர்னியா, கொலோமா அருகிலுள்ள சியர்ரா நெவாடா மலையடிவாரத்தில் பாயும் அமெரிக்க ஆற்றில் மென் தகடுகளாக தங்கம் இருப்பதை, ஒரு கட்டுமான போர்மேன், ஸூட்டர்ஸ் மில்லில் வைத்து கண்டறிந்தார். அது தங்கத்தின் ஒரு சிறிய துண்டு என்பதை அறிந்த அவர் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

இதை இரகசியமாக வைத்திருக்க அவர் தவறிவிட்டார். எனவே, இந்தத் தகவல் சீக்கிரமே பரவிவிட்டது. சான் பிரான்ஸிஸ்கோ மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இதனை நம்ப மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஸூட்டர்ஸ் மில்லில் கிடைக்கப்பெற்ற தங்கம் அடங்கிய ஒரு சிறு குப்பியுடன் நகர்வலம் வந்த போது ஒரு ஸ்டோர்கீப்பர், இந்தத் தகவல் மக்களிடம் பரவலாக சென்றடையுமாறு செய்தார்.

செல்வச்செழிப்புக்கு உத்தரவாதம் என்ற நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கலிபோர்னியாவுக்கு படையெடுத்தனர். இந்த கலிபோர்னிய பயணத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கடன் வாங்கினர், சொத்துக்களை அடைமானம் வைத்தனர்; அவ்வளவு ஏன், தங்களின் வாழ்நாள் சேமிப்பையும் செலவழித்தனர். 1849ல் கலிபோர்னியாவின் உள்நாட்டை சாராதவர்களின் மக்கள்தொகை சுமார் 100,000. கோல்டு ரஷ் தொடங்குவதற்கு முன்பு இது வெறும் 1000 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளிகள், தங்கம் கிடைக்கும் என்ற ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டனர் மற்றும் தங்கம் கிடைக்குமிடங்களுக்கு அவ்வப்பொழுது தங்கள் இருப்பிடத்தையும் அவர்கள் மாற்றிக்கொண்டனர். முதலில் செட்டிலான சுரங்கத் தொழிலாளிகள், சாதாரணமாக அவர்களின் வேலைக்குக் கிடைப்பது போன்று 10 மடங்கு அதிக பணத்தை சம்பாதித்தனர்.

அதிவேகத்தில் வந்துசேர்ந்த குடியேறியவர்களாலும், தங்கமானது சந்தைக்குப் போக தொடங்கியதாலும், சிறு சுரங்க நகரங்கள் முளைக்கத் தொடங்கின. இந்த ரஷ் –ஐ சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் கடைகள், முடி திருத்தகங்கள் மற்றும் பல்வேறு வகையான வர்த்தகங்களும் தோன்றின. இப்படியாக, 1850ல் கலிபோர்னியா தோன்றியது.

நிலப்பரப்பிலோ மக்கள்தொகையிலோ இந்த கோல்டு ரஷ், தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; இது குறைந்த காலமே நீடித்தது. தங்கத்தை பிரித்தெடுப்பதற்கு அதிக திறன் தேவைப்பட்டதால், அது பெரிய வர்த்தகங்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக, தனிநபர் சுரங்கத் தொழிலாளிகளின் இடத்தை, கொஞ்சம் கொஞ்சமாக வர்த்தகங்கள் எடுத்துக்கொண்டன.

1860 மற்றும் 1880 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில், $170 மில்லியன் மதிப்புள்ள - 700,000 பவுண்டுகளுக்கு மேற்பட்ட- தங்கம் பெரு நிறுவனங்களால் பிரித்தெடுக்கப்பட்டது. இதன் பிறகு, வேளாண்மை, சந்தையைக் கைப்பற்றியது.

கலிபோர்னியாவின் தோற்றமும், நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அடித்த அதிர்ஷ்டமும், தங்கம் கொண்டிருக்கும் அளப்பரிய பொருளாதார மதிப்பு மற்றும் தங்கத்தின் வலிமைக்கு ஒரு உண்மையான ஆதாரம் ஆகும்.