Published: 13 செப் 2017

தங்கம் எவ்வாறு சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது?

காரட் வைரத்தைப் பெறுவதை விட 1 அவுன்சு தங்கக்கட்டியை பெறுவது அவ்வளவு சுலபமல்ல என்ற சொற்றொடரின் மூலம், தங்கம் எவ்வளவு அரிதானது என்று தெரிய வருகிறது. தங்கம் இவ்வளவு அரிதாக இருக்கும்போது அதனை நாம் எவ்வாறு நகைகள், முதலீடுகள், மருத்துவ மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்காக பெறுகிறோம்?

இதற்கான பதில் சுரங்கத்தொழில்

இதுவரை வரலாற்றில் 187,200 டன்கள் தங்கம் கிடைத்துள்ளதாக கணக்கீட்டாளர்கள் கூறியுள்ளார்கள். இந்த தங்கத்தின் ஒவ்வொரு அவுன்சு அளவையும் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக வைக்கும்போது, சுத்தமான தங்கத்தின கனவடிவம் ஒவ்வொரு பக்கமும 21 மீட்டர் அளவு இருக்கும்.

தங்கம் அதனது இயற்கை வடிவத்திலிருந்து நான்கு வகையாக வெட்டி எடுக்கப்படுகிறது. அது எவ்வாறு என்பதனைக் காண்போம்.:

 1. ப்ளேசர் சுரங்கம்

  இம்முறை ஆரம்பகால தங்க வேட்டைக்காரர்களால் பயன்படுத்தப்பட்டது. புவிஈர்ப்பு விசை மற்றும் தண்ணீரைப் பன்படுத்தி தங்கத்தைச் சுற்றியுள்ள மற்ற உலோகங்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க அது பயன்படுகிறது. தங்கம் கலந்த மணல் மற்றும் சள்ளிகளிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க இம்முறை பயன்படுகிறது. ப்ளேசர் இருப்புகளிலிருந்து தங்கத்தைப் .

  பிரித்தெடுக்கப் பயன்படும் முறைக்கு கோல்டு பேனிங் (Gold Panning )என்று பெயர். இந்த முறையை சட்டீஸ்காரில் உள்ள சோனாஜ்ஹார் சமூகத்தினர் செய்கின்றனர். 4-5 அரிசிமணிகள் அளவு கொண்ட தங்கத்தை இவர்கள் ஒவ்வோர் நாளும் சேகரிக்கின்றனர். இதற்காக ஆண்டுக்கு ரூ.400 வீதம் சம்பாதிக்கின்றனர்

 2. கடினப் பாறை சுரங்கம் அமைத்தல்

  இப்படித்தான் பெரும்பாலான தங்கம் சுரண்டப்படுகிறது. இது திறந்த குழி மற்றும் நிலத்தடி சுரங்கத்துடன் தொடர்புடையது.

  படிநிலை 1: இந்த முறையானது வெடித்த குழிகளை துளையிடுவதிலிருந்து துவங்குகிறது. இது 40 அடி ஆழமானது மற்றும் 16லிருந்து 22 அடி அகலம் கொண்டது. இந்த இடத்தில் தங்கம் இருக்கிறதா, இல்லையா என்று கண்டறிவதற்கு இது உதவுகிறது.

  படிநிலை 2: சுற்றியிருக்கும் சூழ்நிலைக்கு சிறிதளவே தாக்கமே ஏற்படுமாறு இந்த துளைகள் ஒரு கட்டுப்பாடான முறையில் வெடிக்கப்படுகின்றன.

  படிநிலை 3: வெடித்த பாறை பின்பு ஆய்வு செய்யப்படுகிறது. தங்கம் இருக்கும் தாதுக்கள் குறியிடப்படுகின்றன.

  படிநிலை 4: தங்கம் நிறைந்துள்ள அனைத்து தாதுக்களும் ஒரு வண்டியில் வைத்து இழுத்துச் செல்லப்படுகின்றன. பின்னர் இவற்றை ஒரு கசக்கும் இயந்திரத்திற்கு அனுப்பி பதப்படுத்தப்படுகிறது.

  படிநிலை 5: தாதுக்களை நசுக்குவது இரண்டடுக்கு வேலை. இதில் தாதுககள் சிறுசிறு பொருட்களாக உடைக்கப்படுகின்றன.

  படிநிலை 6: பின்னர், கடினமான பாறை வடிவத்திலிருந்து சோடியம் சயனைடு பயன்படுத்தப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த முறைக்கு லீச்சிங் (கலவா கலவைப் பகுப்பு) என்று பெயர்.

  படிநிலை 7: லீச்சிங்கிலிருந்து கிடைக்கும் தங்கம் பின்னர் பதனிடப்பட்டு தங்கம் நிரம்பிய களிமண்ணாகக் கிடைக்கிறது.

  படிநிலை 8 : தங்கம் நிறைந்த களிமண்ணானது பின்னர் ஒரு சுத்திகரிப்பு உலைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு எந்தவிதமான உலோகம் அல்லாத பொருட்களிலிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுக்க பயன்படுகிறது. இது 98% தங்கமும் வெள்ளியும் கலந்த ஒரு கலவையை அளிக்கிறது. இதற்கு டோர் என்று பெயர். 24 காரட் தங்கததின் 99.99% தங்கத்தைப் பெறுவதற்கு சிறப்பான சுத்திகரிப்பு ஆலைக்கு இந்த தங்கம் பின்னர் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

 3. விளைவுப் பொருளின் சுரங்கம்

  பல்வேறு முறைகளில், சுரங்கத்தின் முக்கிய பணியானது தாமரத்தை சுரண்டி எடுத்து அதிலிருந்து மணல், சள்ளி மற்றும் பிற பொருட்களைப் பிரித்தெடுப்பதாகும். உலகிலேயே மிகவும் பிரபலமான தங்கச் சுரங்களுள் ஒன்றான தி க்ராஸ்பெர்க் தங்கச் சுரங்கமானது தற்போது தாமிரச் சுரங்கமாக மாறியுள்ளது. இதுதான் தற்போது உலகின் நான்காவது பெரிய சுரங்கம். ஆண்டுதோறும் இதில் 20,000 பேர் பணிக்கமர்த்தப்படுகிறார்கள்.

 4. தங்கத் தாதுவை பிரித்தெடுத்தல்

  தங்கத் தாதுவானது நன்கு நசுக்கப்பட்ட பாறை. இதில் தங்கத்தின் அளவுகள் உள்ளன. இதனை சயனைடு கொண்ட ஒரு இரசாயன முறையின் மூலம் பிரித்தெடுக்க வேண்டும். இந்த முறையில் நிறைய பொருளாதார சுற்றுச்சூழல் ◌செலவுகள் ஏற்படுவதால் இந்த துறை இலாபகரமானது அல்ல.

  ஒவ்வோர் ஆண்டும், தங்கச் சுரங்கங்களினால் ஏறத்தாழ 2,500லிருந்து 3,000 டன்கள் தங்கம் கிடைக்கிறது. நமது அன்றாட வாழ்வில் தங்கம் எவ்வாறு இணைந்திருக்கிறது என்பது குறித்த ஓர் ஆச்சர்யமான பார்வை இதோ.

Sources:
Source1, Source2, Source3, Source4, Source5, Source6