Published: 27 செப் 2017

உங்கள் வாயில் உள்ள தங்கத்தின் மதிப்பு எவ்வளவு?

தங்கம் என்பது பல் மருத்துவ சிகிச்சையில் மூடிகள், கிரவுன்கள், மற்றும் நிரப்பிகள் எனப் பயன்படுத்தப்படுகிறது. கிரவுன்கள் மற்றும் மூடிகள் மிகவும் இலேசாக இருக்கும், எனவே அவற்றுக்கு நிறைய தங்கம் தேவைப்படாது. திடமான தங்கப் பற்கள் சுமார் 66% தங்கத்தைக் (16 காரட் தங்கம்) கொண்டுள்ள தங்கக் கலவைகளால் கட்டமைக்கப்படுகிறது, இவை ஒவ்வொன்றும் சுமார் 3 கிராம் எடையில் இருக்கும்.

ஹிப் ஹாப் கலாச்சாரத்தில், ஒரு கிரில் என்பது உங்கள் பற்கள் மீது அணிந்துகொள்ளப்படும் நகைகளின் ஒரு வகையாகும். கிரில்ஸ் என்பது ஒரு சிலிக்கான் டை பயன்படுத்தி உங்கள் பற்கள் வடிவத்திலான விலைமதிப்பற்ற உலோகங்களால் செய்யப்படுகின்றன. கிரில்ஸ் என்பது பொதுவாக கழற்றப்படக்கூடியது ஆகும், இது 1980களில் நியூயார்க்கில் உள்ள கலைஞர்கள் மத்தியில் பிரபலமான நவநாகரீக போக்காக உருவாகத் தொடங்கி, பிரபலமடைந்தது. பல் மருத்துவத்திற்கான தங்கத்தின் பயன்பாடுகளில் கிட்டத்தட்ட 16 காரட் தங்கமே (66% தூய்மையானது) பயன்படுத்தப்படுகிறது. அதை விட தூய்மையான தங்கம் என்பது மிகவும் மென்மையானதாக இருக்கும், எனவே மெல்லும் பொழுதான அதிக அழுத்தம் காரணமாக அவை சிதைந்துவிடும்.

நீங்கள் ஒரு ஹிப்-ஹாப் கலைஞராக அல்லது உங்கள் பற்களில் சில தங்கக் கிரவுன்கள் கொண்ட மற்றொரு நபராக இருந்தால், உங்கள் வாயில் உள்ள தங்கமானது நிச்சயமாக மதிப்புக்குரியதாக இருக்கும். 16 காரட் தங்கத்தின் 1 கிராமின் விலை என்பது சுமார் ரூ.1700 ஆகும் (ஜூலை 2017ஆம் ஆண்டு விலையின்படி) ஆகும், எனவே உங்கள் வாயில் உள்ள தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்று யூகித்துக்கொள்ளலாம்.

உங்கள் வாயில் உள்ள 32 பற்களுக்குமான ஒரு கிரில் உள்ளது என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொரு கிரில்லும் 3 கிராம் எடை கொண்டதாகும், எனவே நீங்கள் உங்கள் வாயில் 16 காரட் தங்கத்தில் 96 கிராம் வைத்திருப்பீர்கள். 16 காரட் தங்கத்திற்கு ஒரு கிராமுக்கு ரூ.1700 என்று எடுத்துக்கொண்டால், உங்கள் வாயில் உள்ள தங்கமானது 1,63,000 ரூபாய் மதிப்புள்ளதாகும். இதைக் கொண்டு அமெரிக்கா சென்று திரும்புவதற்கான டிக்கெட் எடுக்கலாம், அல்லது ஐந்து ஐபோன் 6 போன் வாங்கலாம் அல்லது உங்கள் வீட்டிற்கு சில 60 அங்குல எல்சிடி டிவி வாங்கலாம்!