Published: 02 ஏப் 2018

கனடாவில் ஹால்மார்க் தங்கம் வாங்குவது எப்படி

Canadian gold hallmarking standards.

கனடாவின் ஹால்மார்க்குகள் ஃபிரெஞ்சு ஹால்மார்க்குகளை ஒத்தவை என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படி மாறியதும், ஃபிரெஞ்சு கனடா எல்லைகளுக்கு வந்த முதல் காலனிக்காரர்கள் மற்றும் முதல் நகைக்கடைக்காரர்கள் ஃபிரான்சிலிருந்து குடியேறியவர்கள் ஆவர். எனவே நகைகளில் பெரும் பகுதியும் அவ்விடத்தின் தாக்கத்தால் உருவானவை.

ஆனால் நீங்கள் கனடாவில் தங்கம் வாங்க விரும்பினால், அது உறவினர்களை பார்க்கச் சென்ற பயணமாக இருந்தாலும் அல்லது நன்கு வருமானம் ஈட்டிய ஒரு விடுமுறையாக இருந்தாலும், நீங்கள் எந்த விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்? அதைப் பற்றி பார்ப்போம்.

கனடாவில் 1996 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விலையுயர்ந்த உலோகங்களுக்குக் குறியிடும் சட்டம் ஹால்மார்க்கிங் விதிமுறைகளுக்கு அடிப்படையாக செயல்படுகிறது

ஹால்மார்க் செய்வது மற்றும் அதில் திருத்தங்கள் செய்வதற்கான மிகப்பெரிய பொறுப்பு விநியோகஸ்தர்கள் – உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் (CEO, மேலாளர்கள், அதிகாரிகள் அல்லது முகவர்கள்) ஆகியோரை சார்ந்தது. கனடாவின் தொழிற்துறை வர்த்தக முத்திரைகளின் பதிவேட்டில் ஹால்மார்க்கை பதிவு செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் தேசிய ஹால்மார்க்கை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் – ”சி” என்கிற எழுத்தின் உட்புறம் மேப்பிள் இலை.

பொதுவாக மோதிரத்தின் உட்புறம் அல்லது நெக்லெஸ் க்ளாம்பின் பக்கவாட்டில் K என்கிற எழுத்தைத் தொடர்ந்து எண்கள் கொண்ட ஒரு முத்திரை இருக்கும். இது “கேரட்டுகளில்” தொகுப்பைக் காட்டும். ஒவ்வொரு முத்திரையின் தங்கக் கலவை அட்டவணை பின்வருமாறு ii iii:

How to buy hallmarked gold in Canada

தூயத் தங்கம் பெரும்பாலும் நேர்த்தியான தங்கம் என்றழைக்கப்படுகிறது. தூய தங்கக் கட்டி பொதுவாக ‘999.9’ என்கிற ஹால்மார்க்கை தாங்கி இருக்கும். இது தங்கம் 99.9% தூய்மையானது என்பதையும் எந்தவிதமான உலோகக் கலவையும் இல்லை என்பதையும் குறிக்கிறது. தங்கக் கலவையின் தூய்மையின் அளவை இரண்டு வழிகளில் வெளிப்படுத்தலாம்: 24 கேரட் அல்லது 1000/1000. (1000 த்தில் குறைந்தது 999 பகுதிகள் தூய தங்கம்). நீங்கள் கனடாவில் தங்கம் வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வரத் திட்டமிட்டு இருந்தால், அத்தியாவசிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள இதை படிப்பதை உறுதி செய்யுங்கள்: தங்கத்துடன் நீங்கள் பயணம் செய்யும் போது தெரிந்துக்கொண்டிருக்க வேண்டியவை அனைத்தும்.