Published: 04 அக் 2018

அமெரிக்க டாலர் எப்படி தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

Facts about gold - Correlation between US dollar and gold

தங்கம் நாமெல்லாம் அறிந்த பரிமாற்றத்திற்கான பழமையான வழியாகும், மேலும் நீண்ட காலமாக இது பணத்தின் பங்கை வகித்து வருகிறது. அதே சமயத்தில் இதர நாணயங்கள் இதன் பங்கை எடுத்துக் கொண்ட போதிலும், நவீன பணத்திற்கும் தங்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தொலைந்து விடவில்லை.

தங்கத்தின் தரம் சரிந்ததை அடுத்து, அமெரிக்க டாலரானது தங்கம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு விலையை நிர்ணயிக்கும் சட்டபடியான நடைமுறையாக மாறியது. இதன் விளைவாக இவை இரண்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டன. அமெரிக்க டாலர் தங்கத்தின் விலையை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

தங்கமும் டாலரும்

தங்கம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட சொத்தாகும், மேலும் அதன் விலை உலகெங்கும் உணரப்பட்ட ஒட்டுமொத்த நாணயங்களின் மதிப்பினால் பாதிக்கப்படக் கூடியது. ஜுலையில் அமெரிக்க-சீன வர்த்தக அழுத்தங்களின் போது ஏற்பட்டதைப் போலவே, உலக அரசியல் அச்சங்கள் அல்லது கொந்தளிப்புக் காலங்களின் போது, தங்கத்தின் விலை உயரும். இருந்தாலும், விரைவில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு, உலகளாவிய அரசியல் பதட்டங்கள் இருந்த போதிலும் தங்கம் 20 – மாதங்களாக குறைந்த விலையை கண்டது. மேலும் இதன் பின்னணியில் உள்ள மிக முக்கியமான காரணி அமெரிக்க டாலர் மதிப்பை பலப்படுத்தியதாகும். ஆனால், டாலர் அல்லது அமெரிக்கப் பொருளாதாரத்தின் காரணமாக தங்கத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது இது முதன்முறை அல்ல.

டாலர் மற்றும் தங்கத்திற்கு இடையிலான மதிப்புமிக்க உறவு முக்கியமானது, ஆனால் இந்த உலொகத்தின் விலையை பாதிக்கும் ஒரே காரணி டாலர் மட்டுமல்ல. தங்கத்தால் தானாக வட்டி ஈட்ட முடியாது என்ற போதிலும், முதலீட்டுத் தேவைகளில் அது வட்டி ஈட்டும் சொத்துக்களுடன் போட்டியிடுகிறது. வட்டி விகிதங்கள் உயரும் போது தங்கத்தின் விலை வீழ்ச்சியடைகிறது, மற்ற சொத்துக்களுக்கான தேவை அதிகரிக்கும் போது உயர் வட்டி விகிதத்தின் காரணமாக ஈட்டிய உயர் வருமானத்திற்கு நன்றி.

எனவே அமெரிக்க டாலர் எப்படி தங்கத்தின் விலையை பாதிக்கிறது?

எனவே, டாலர் எப்படி தங்கத்தின் விலையை பாதிக்கிறது என்பதைப் பற்றி மேலும் விவரங்களைப் புரிந்துக் கொள்ளலாம் வாருங்கள். அமெரிக்க அரசாங்கம் பெரிய தங்க உற்பத்தியாளராக இல்லாத போதிலும், உலகின் எல்லா தங்கத்திலிருந்தும் ஒரு பெரிய பகுதியை இருப்பில் வைத்திருக்கிறது. அமெரிக்கா அதன் பெருமளவு பங்குகளை இறக்குமதி செய்வதன் மூலம் இந்த அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

டாலர் பலவீனமடையும் போது, தங்கத்தை இறக்குமதி செய்வது அதிக செலவுள்ளதாகிறது. எனவே, நிறுவனங்கள் சரக்குகள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்ய அதிக டாலர்களை செலுத்த வேண்டியிருக்கும், மற்றும் வியாபாரிகள் தங்கமாக செலுத்த வேண்டும் – அத்துடன் அரசாங்கமும் தங்கத்திற்காக அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்கிறது. மாறாக, டாலரை பலப்படுத்தினால் தங்கத்தின் விலை சரிகிறது.

மேலும் பலவீனமான டாலர் அமெரிக்க கடன் வைத்திருக்கும் வெளிநாட்டினரை பாதிக்கிறது, பதிலுக்கு இது அமெரிக்க கருவூலம் மற்றும் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை வலுவிழக்கச் செய்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது குறைந்து வரும் நம்பிக்கை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

அதே போல, அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவது பணவீக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். காகிதப் பணம் அச்சுறுத்தலின் கீழ் இருப்பதாகத் தோன்றும் போது, மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்ற முனைகிறார்கள். அதிகரிக்கும் பணவீக்கம் தங்கத்தின் விலைகளுக்கு நல்லது, மேலும் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை அரிக்கப்படும் போது பணவீக்கத்திற்கு ஏற்ப சரிகட்டப்பட்ட தங்கத்தின் விலை மிகவும் நேர்மறையாக இருக்கும். 2008 ஆம் ஆண்டின் சப் பிரைம் நெருக்கடி ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த காலகட்டத்தில், வீடு மனை நிலைச் சொத்துக்களின் மதிப்பு கரைந்தது மேலும் பங்குகளில் பெருமளவு விற்பனை திடீரென தங்கத்தை நோக்கி நிலைமாற்றத்தைக் கண்டது, இது பாதுகாப்பான பந்தயமாக பார்க்கப்பட்டது. உண்மையில், அந்த கால கட்டத்தில் தங்க விலைகள் மீதான அந்த நெருக்கடியின் நேர்மறையான தாக்கம் அதிகமாகப் பேசப்பட்டது, மேலும் இந்த உலோகம் ஒரு அவுன்ஸ்க்கு சுமார் 1,900 டாலர் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது.

தங்கம் மற்றும் ரூபாய் – டாலர் சமன்பாடு

இந்திய நுகர்வோர் தங்கத்தை முதலீட்டுச் சொத்தாகவும் அலங்காரப் பொருளாகவும் இரண்டு வகையிலும் பார்க்கிறார்கள். பாதுகாப்பான முதலீடாக இருப்பதே, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், தங்கத்தை வாங்குவதற்கான முக்கிய காரணமாகும், மீதமுள்ள மற்றவர்களின் தங்கம் வாங்கும் முடிவுக்குப் பின்னால் அதை அலங்காரப் பொருளாகப் பார்ப்பதே முதன்மையான காரணமாகும்.

உலக தங்க விலையின் தாக்கம் அதன் மீது இல்லாத போதிலும், இந்தியாவில் தங்கத்தின் விலையில் ரூபாய்க்கும் டாலருக்கும் இடையிலான உறவு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்தியாவில் தங்கத்திற்கான தேவை உள்ளூர் விநியோகத்தை விட மிக வேகமாக முந்திச் செல்கிறது. அதிகமான வருடாந்திர தங்கத் தேவை இறக்குமதியின் வழியாக எதிர்க்கொள்ளப்படுகிறது. டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழந்தால், ஒரு டாலர் விலையுடன் பொருந்த அதிக ரூபாய்களை செலுத்த வேண்டும்.

சுருக்கமாக சொல்லப் போனால், டாலரின் மதிப்பு உயர்வதோ அல்லது சரிவதோ தொடர்ந்து உலகளாவிய தங்க விலையை எதிர் திசையில் பாதிக்கிறது. அதே சமயம், தங்கத்தின் விலையை பாதிக்கும் ஒரே காரணி அமெரிக்க டாலர் மட்டுமல்ல, பணவீக்கக் காலங்களில் அமெரிக்க டாலர் சரியாக செயல்படாத போது, தங்கம் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த வரலாறு இருக்கிறது.

ஆதாரங்கள்