Published: 18 மே 2018

குஜராத்தி கொண்டாட்டங்களில் தங்கத்தின் முக்கியத்துவம்

Gujarati Jewellery

'சாத்தி' என்ற குஜராத்தி பெயர்சூட்டு விழாவில், புதிய பெற்றோர்களும் பிறந்த குழந்தைக்கும் உறவினர்கள் தங்கத்தின் அனைத்து வகையான அணிகலன்கள் முதல் நகை அல்லது நாணயம் அல்லது சிலைகள் வரை பல பரிசுகளை அளிப்பர் என்பது உங்களுக்கு தெரியுமா

பல முக்கியமான குஜராத்தி விழாக்களில் ஒன்றான குழந்தை பிறப்பில் தங்கம் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது, ஆனால் தங்கத்தின் பளபளப்பு இல்லாத குஜராத்தி திருமணங்களை கற்பனை செய்து பார்க்க முடியாது.

தங்கம் குஜராத்தி திருமணங்களின் ஒரு அவசியமான பகுதியாகும் மற்றும் அது அலங்கரிக்கும் நபரை இயற்கையாக பிரகாசிக்கச் செய்யும். ஒரு பாரம்பரிய குஜராத்தி மணமகள் சராசரியாக 180 கிராம் எடையுள்ள தங்கத்தை தலை முதல் பாதம் வரை அணிந்திருப்பாள்! ஒவ்வொரு குஜராத்தி திருமணத்திலும் நீங்கள் பார்க்கக்கூடிய தங்கத்தின் சில வேறுபாடுகள் பின்வருவன.

  • பானேதார் புடவைகள்:

    பானேதார் பாணி புடவைகள் வகை வெள்ளை நிற உடல் மற்றும் அழகான ஜரி வேலைபாடு கொண்ட சிவப்பு பார்டரால் வகைப்படுத்தப்படுகின்றன. சிவப்பு பார்டரில் கோடிட்ட அல்லது கட்டம் போட்ட வடிவம் மெல்லிய தங்க நூல்களாலான ஜரி அல்லது எம்பிராய்டரியால் உருவாக்கப்படுகிறது. தங்க எம்பிராய்டரி புடவைக்கு மிக உன்னதமான உணர்வைத் தருகிறது. இவை வழக்கமாக தாய்மாமனிடமிருந்து மணமகளுக்கு பரிசாக கொடுக்கப்படும். இது பட்டினால் நெய்யப்படுகிறது மற்றும் சானியா சோலியை மிகவும் ஒத்ததாக இருக்கிறது.

  • கர்சோலா புடவைகள்:

நன்றி: உத்சவ் ஃபேஷன்

இது மணமகள் தனது புகுந்த வீட்டிலிருந்து கர்சோலா புடவை பெறும் ஒரு பொதுவான குஜராத்தி வழக்கம் ஆகும். இந்த புடவைகளில் பொதுவாக தங்க நூலால் ஆன ஜரி வேலைப்பாடு செய்யப்படுகிறது. முதலில் ஜரி நெய்யப்பட்டு, பின்னர் பாந்தினி வேலைப்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. சிறப்பியல்பு வாய்ந்த ஜரி கட்ட வடிவமைப்பு கீழே காண்பிக்கப்பட்டுள்ளபடி, 9, 12, அல்லது 52 தொகுப்புகளின் தோன்றும் விதத்தில் செய்யப்படுகிறது:

ஒவ்வொரு கட்டத்தின் பார்டரும் மற்றும் முந்தானையும் ஜரியால் செய்யப்படுகிறது பண்டைய காலங்களில், உண்மையான தங்கத்தின் நூல்கள் மட்டுமே ஜரி நெசவுக்காக பயன்படுத்தப்பட்டன. இன்றும் கூட இந்த புடவைகள் உங்களை அலங்கரிக்கவும் மற்றும் குஜராத்தி நயத்திற்கு உருக்கொடுக்கவும் முடியும்!

தங்க அணிகலன்கள்:

குஜராத்தி தனிச்சிறப்புமிக்க சில தங்க அணிகலன்கள் உள்ளன, மற்றும் சிறப்பு விழாக்களில், குறிப்பாக திருமணங்களின் போது அவை பெருமையுடன் அணியப்படுகின்றன. அடுத்த முறை நீங்கள் குஜராத்தில் இருக்கும்பொழுது, உங்கள் நகைகளின் பொக்கிஷத்துடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • ஷிங்க்கா என்பது முடியில் அணியப்படும் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய குஜராத்தி நகையாகும். ஒரு மாங் டிக்காவைப் போலவே, ஷிங்க்காவிலும் பல தங்க சங்கிலிகள் உள்ளன. வடிவமைப்பைப் பொறுத்து, ஆபரணத்தை அணிபவருடைய நெத்தியை மறைக்கும் சிறிய தங்க ஜும்காக்களை கொண்டிருக்கலாம்.
  • சந்திரன் ஹார் ஒரு கனரக தங்க நெக்லஸ் செட் ஒரு உடையின் முக்கிய பகுதியாக இருக்க முடியும். இது பெரிய தங்க காதணிகளுடன் நன்றாக பொருந்துகிறது; தொங்கட்டான்கள் மற்றும் வளையங்கள் ஆகிய இரண்டுமே பிரபலமாக உள்ளன.
  • போச்சா என்பது கீழே காண்பிக்கப்பட்டுள்ளபடி, ஒரு முனை தொங்கவிடப்பட்டு அணிபவருடைய சருமத்தை வீசிச்செல்கிற நகையின் மற்றொரு பிரபலமான வடிவமைப்பாகும்.
  • குஜராத்தி நகைகளின் வடிவமைப்புகள் தனித்துவமான, கமீப்ரமான மற்றும் குஜராத்தி ஆடையின் தனிச்சிறப்புமிக்கதாகவும் உள்ளன. ஒரு தங்க போன்ச்சோ என்பது ஒவ்வொரு விரலுக்கும் மோதிரமாக நீட்டிக்கப்படும் 5 கூடுதல் தங்க சங்கிலிகள் கொண்ட ஒரு ப்ரேஸ்லெட் ஆகும்.
  • கொண்டாட்ட குஜராத்தி உடுப்பின் மற்றொரு நேர்த்தியான சேர்க்கை Nathni அல்லது மூக்குத்தி ஆகும்.

குஜராத்தில் இருக்கும் போது, குஜராத்திகள் செய்வதைப் போலவே செய்யவும்: தலை முதல் பாதம் வரை தங்கம் அணிந்து, மேலே கூறப்பட்ட அணிகலன்களுடன் அது அளிக்கும் இணையற்ற நளினத்தை அனுபவித்து மகிழுங்கள்.