Published: 09 பிப் 2018

தங்க சந்தையை தாராளமயமாக்கல்: 1990 – 2000

28 ஆண்டுகளாக இருந்த வந்த கட்டுப்படுத்தப்பட்ட தங்க விற்பனை, இறுதியாக 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை விலக்கிக் கொண்டதன் மூலம் நீக்கப்பட்டது. இதைச் செய்வதற்கு நிதி அமைச்சர் மது தண்டவதே வைத்த வாதம் மிகவும் எளிமையானது: முறையற்ற வகைகளில் தங்க விற்பனை நடைபெறுவதன் மூலம் அனைத்து வருமானத்தையும் இழப்பதை விட சுதந்திரமான இறக்குமதியை அனுமதித்து அதன் மூலம் வரியை ஈட்டுவது புத்திசாலித்தனமானது என்றார். ஒவ்வொரு 10 கிராமுக்கும் 250 ரூபாய் வரி கட்டி, நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கத்தை இறக்குமதி செய்யலாம். தங்க சந்தை பதில் வினையாற்றியது: 1991-ல் நடைமுறையில் அதிகாரபூர்வ இறக்குமதியாக கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத அளவிலிருந்து, 1992-ல் இந்தியா 110 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.

ஆனால் மிக விரைவாக எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன்னர், அந்த காலத்தின் வரலாற்றை கூர்ந்து கவனிப்பது அவசியமானது. உதாரணமாக, இந்தியாவில் உள்ள தங்கச் சுரங்கங்கள் தொழிற்சாலைகளுக்கான தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் மூலம் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது. தங்கம் மற்றும் வெள்ளியில் ஃபார்வேர்டு டிரேடிங் இன்னமும் தடைசெய்யப்பட்டே இருந்தது. வெள்ளிக் கட்டிகள் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டிருந்தது மேலும் வெள்ளிப் பொருட்கள் ஏற்றுமதியும் ஒதுக்கீடு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருந்தது.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தங்களின் சொந்த உபயோகத்துக்கான நகைகள் தவிர மற்ற தங்க இறக்குமதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) பிரத்யேகமான அங்கீகாரம் பெற்றாகவேண்டும். சில குறிப்பிட்ட நிகழ்வுகளில், இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்திலிருந்து ஏற்றுமதிக்கு மட்டுமே நகை உற்பத்தி செய்வதற்கு நகை உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தங்க நகை ஏற்றுமதி அபிவிருத்தி நிரப்புதல் திட்டத்தின் மூலம் தங்கத்தை மீண்டும் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திட்டம் 1992-ல் தொடங்கப்பட்டது; ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள், சுங்க வரியை, மாற்றக்கூடிய கரன்சியாக, வழக்கமாக யுஎஸ் டாலர்களில் செலுத்திவிட்டு, தங்களுடன் 5 கிலோகிராம் வரை தங்கம் எடுத்து வரலாம். தங்கத்தைப் பொருளாக கருதக்கூடிய பிரத்யேக இறக்குமதி உரிமம் (SIL) மூலம் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு 1994-ல் அரசு அனுமதி வழங்கியது.

பெரும்பாலும் தங்கம் வாங்குவதற்கான உரிமையை SIL ஏற்றுமதியாளர்களுக்கு அளித்தது. தங்கச் சந்தையை தாராளாமயக்குவது என்ற வாதம், பிரத்யேகமாக தங்கத்தை இறக்குமதி செய்வது லாபத்தைக் குறைப்பதில் உதவும் மேலும் தங்கத்தின் விலையை போட்டிக்குரியத்தாக்கும். இந்த வாதம் கடந்த காலங்களிலும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் உண்மை சற்றே வேறுபட்டிருந்தது. தங்கம் நிதி சார்ந்த தாக்கத்தைக் கொண்டிருக்கிறது எனவே மற்ற பொருட்களிலிருந்து மாறுபட்ட வகையில் கையாள வேண்டியிருக்கிறது என்கிற எதிர் வாதமே வெற்றிபெற்றது.

1997-ல், வெளிப்படையான பொது உரிமம் (OGL) என்ற திட்டத்தின் கீழ் ஏழு வங்கிகளுக்கு, அதிகாராபூர்வ தங்க இறக்குமதியாளர்கள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது; இந்த எண்ணிக்கை பிறகு 20 ஆக அதிகரிக்கப்பட்டது. 1999-ல், தங்க சேமிப்புத் திட்டத்தின் (GDS) மூலம் தங்கத்தை சேர்க்க முயற்சித்தது. பாரத ஸ்டேட் வங்கியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், தங்கத்தை குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வங்கிகளில் டெப்பாசிட் செய்யலாம். விளைவு: தங்கத்தின் தேவை அதிகரித்தது, விலையும் அதிகரித்தது - ஆனால் அரசு அவ்வாறு நினைத்து இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. தங்கம் நம் அனைவரையும் காலங்காலமாக தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.