Published: 15 மார் 2018

தங்கத்தின் பல்வேறு பயன்கள்

Use of gold for health benefits

தங்கம் விலையுயர்ந்தது என்பது எல்லொருக்கும் தெரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு பண மதிப்பிற்கும் அப்பால் சென்றுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

உண்மையில் நூற்றாண்டுகளுக்கு முன், பண்டைக் கால மக்கள் ரசவாத மூலக்கூறுகளால் அதிக தங்கச் சரக்கிருப்பை அமைத்து வைத்திருந்தனர். பண்டைய எகிப்து, ஐரோப்பா, மற்றும் இந்தியாவில் கூட, தங்கம் பல்வேறு விதமான நோய்கள் மற்றும் மூட்டு வாதம் முதல் அஜீரணம் வரையிலான உடல் உபாதைகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் மற்றும் சிகிச்சைக்குப் பயன்படும் என்கிற நம்பிக்கை நிலவியது. உணவு மற்றும் பானங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டது.

‘தங்கத் தண்ணீர்’ என்று மிகச் சரியான மொழிபெயர்ப்பினைக் கொண்டிருக்கும் கோல்ட்வாஸர் எனப்படும் ஒரு வகை மதுபானம், 16 ஆம் நூற்றாண்டில் போலிஷ் நகரமான டன்ஸ்க், அதன் பிறகு டன்ஜிக்கில் முதன்முதலில் காய்ச்சப்பட்டது. அதில் தங்கத் துகள்கள் கலக்கப்பட்டிருந்தன. ரஷ்ய மன்னர் பீட்டர் மற்றும் அவருடைய மனைவி கேத்தரின் தி கிரேட்டின் விருப்ப பானமாக இது குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில், சவன்ப்ராஷ் எனப்படும் ஆயுர்வேத சூப்பர் டானிக்கின் பல்வேறு கலவைகள் அனைத்தும் தங்கத்தை உள்ளடக்கியிருக்கின்றன.

தூய தங்கம் மற்றும் வெள்ளி பஸ்மம் (சாம்பல்): இவை ஆயுர்வேதத்தில் சக்தி வாய்ந்த புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருளாக பாராட்டப்பட்டுள்ளது. அவை உடலின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் ஆயுளையும் மற்றும் சுறுசுறுப்பையும் தொடர்ந்து பராமரிக்கிறது.

தங்கம், சருமத்திற்கு நன்மைத்தரக்கூடியது என்று நம்பப்படுகிறது. கிளியோபாட்ரா தனது அழகை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக தங்க முகமூடியை அணிந்து தூங்கினார் என்று சொல்லப்படுகிறது. கூழ்ம நிலை தங்கமும், தங்கத்தின் மிகச்சிறிய துகள்களும் தண்ணீருக்குள் மறைந்திருப்பதை விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே தற்செயலாகக் கண்டறிந்தார். இது குடிநோயை குணப்படுத்தவும் கூட பயன்படுத்தப்படுகிறது.

இன்று, தங்கமானது உணவுகளில், அந்தஸ்து மற்றும் செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கு, அடிப்படையாக ஓர் அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தபடுகிறது.

ஆனால் முன்னோர்கள் நோய்களை குணப்படுத்தப் பயன்படுத்திய தங்கத்தின் பயன்கள் நவீன மருந்துகளின் வருகையால் விரிவாக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் வீக்கத்திற்கு எதிரான பண்புகளினால் இது முடக்குவாதச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. அங்கு புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளை சுமந்து சென்று நேரடியாகக் கட்டிகளுக்கு விநியோகம் செய்யும் கடத்திகளாக செயல்படுகிறது.

எனவே, தங்கம் முதலீடுகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக சிறந்த வருவாயை அளிக்கும் அதே சமயத்தில் மாற்றங்களுக்குள்ளாகும் நிதிகளுக்கெதிரான காப்பரணாகவும் செயல்படுகிறது. ஆரோக்கியம் என்னும் விஷயத்திற்கு வரும் போது உண்மையில் அது பெருஞ்செல்வமாகும்.