Published: 31 ஆக 2017

மயக்கும் நூலிழை தங்க ஆபரணங்கள்

இந்திய தங்க நகைகளானது அதன் நவநாகரிக வடிவமைப்புகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றவை ஆகும். வேலைப்பாடு மிகுந்த மற்றும் நேர்த்தியான அலங்கார கலைப்படைப்புகளுக்கு எப்பொழுதும் அதிக அளவில் தேவைகள் இருக்கின்றன. இந்த பாரம்பரியமான நகைகளை விரும்புபவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள்.

ஃபிலிக்ரீ என்பது இத்தாலி மற்றும் கிரேக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பாரம்பரிய பாணியிலான தங்க நகைகள் ஆகும்; 'ஃபிலிக்ரீ' என்ற வார்த்தையானது 'ஃபிலியம்' என்ற லத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது, இதற்கு ’நூல்’ என்று அர்த்தமாகும்

இந்த கலை வடிவமானது இத்தாலி மற்றும் கிரேக்க நாடுகளில் இருந்து இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்தது. மெஸபட்டோமியா மற்றும் எகிப்து நாடுகளில் முதன் முதலில் ஃபிலிக்ரீ உருவாக்கப்பட்டது, குறிப்பாக மேலை மெஸபட்டோமியாவின் மார்டின் மாகாணத்தில் உள்ள மிட்யாட் நகரத்திலிருந்த மிகவும் திறமையான கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டது. ஃபிலிக்ரீ என்பது இந்தப் பிராந்தியத்தில் 'டெல்காரி' என்று பரவலாக அறியப்பட்டது. சுமார் கி.மு 2500ஆம் ஆண்டில் ஆசியக் கண்டத்தில் இந்தக் கலைப்படைப்பு பிரபலமடைந்தது.

நகைகளின் ஒரு ஃபிலிக்ரீ துண்டை உருவாக்க, முதலில் நகை வடிவமைப்பாளர் உறுதியான தங்கக் கம்பிகளை எடுத்து, அதை முறுக்கி, வடிவமைப்புக்கான ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறார். முறுக்கப்பட்ட கம்பியானது பின்னர் வட்ட வடிவம் உட்பட, பல்வேறு வடிவங்களில் வார்க்கப்படுகிறது. துண்டானது, பெரும்பாலும், 'கிரானுலேஷன்' என்று அழைக்கப்படும் முறை மூலம் மேம்படுத்தப்படுகிறது, இதில் சிறிய தங்க மணிகளானது ஃபிலிக்ரீ வடிவத்தில் இடைவெளிகளில் கோர்க்கப்படுகின்றன.

பண்டைய இந்தியாவில், விரும்பிய தங்க ஆபரணத்தை செய்வதற்காக வாடிக்கையாளரின் வீட்டுக்கு ஃபிலிக்ரீ கைவினைஞர்கள் சென்றனர். கைவினைஞருக்கு தங்க நாணயங்கள் அல்லது மஞ்சள் உலோகத்தின் சாதாரணத் துண்டுகளானது எடை அளக்கப்பட்டு, பின்னர் கரி பாத்திரத்தில் சூடேற்றப்பட்டு வழங்கப்பட்டன. அதன்பிறகு, ஃபிலிக்ரீ வேலைப்பாடுகளை உருவாக்குவதற்காக மெல்லிய தங்கக் கம்பிகளாக உருவாக்கப்பட்டன. இந்த செயல்முறையானது வாடிக்கையாளரின் வீட்டின் முற்றத்தில் அல்லது வராண்டாவில் நடந்தது. தங்க ஆபரணங்களைத் தவிர, மங்களகரமான நிகழ்வுகளுக்காக நேர்த்தியான ஆபரணங்களை உருவாக்கவும் ஃபிலிக்ரீ பயன்படுத்தப்பட்டது.

ஃபிலிக்ரீ மாதிரிகளானது இந்தியப் புராணங்களில் உள்ள கடவுள்களின் மற்றும் தேவியர்களின் சிலைகள், கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவை ஆகும். ஃபிலிக்ரீ கைவினைஞர்கள் தங்கள் கலைப்படைப்பின் வெளிப்புறங்களை நிரப்ப சுழல்கள், கொடிகள் மற்றும் சுருள்கள் போன்ற தொண்ணூறு வகையான கம்பிகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஃபிலிக்ரீ வடிவமைப்புகளானது அஜோர்-ஐ ஒத்திருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஃபிலிக்ரீ நுட்பத்தில் துளைகளானது செய்யப்படும்போது இணைக்கப்படுகிறது, அதே நேரத்தில் அஜோர்-ல் துளைகளானது உலோகத்திலிருந்து வெட்டப்படுகின்றன.

ஃபிலிக்ரீ நகைகளின் நேர்த்தியான கலையானது நவீன காலகட்டத்தில் மிகவும் நேசிக்கபடுவதாக இருக்கிறது. சமீப காலங்களில், பாரம்பரிய, இந்திய-மேற்கத்திய ஆடைகளுடன் மட்டுமல்லாது, மேற்கத்திய ஆடைகளோடும் ஒரு புதிய தோற்றத்தை வழங்குவதற்காக பிரபலமாக உள்ளது.