Published: 11 செப் 2018

மீனாகாரி பாணி தங்க நகைகளின் அறிமுகம்

Traditional Meenakari Design Artefacts

நகைகளில் வண்ணங்கள் துடிப்பான ஒரு அம்சத்தை ஏற்படுத்தி அது இயல்பான நோக்கத்திற்காக இருந்தாலும் அல்லது சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டதா இருந்தாலும், எந்த ஒரு தோற்றத்தையும் உயர்த்திக் காட்டும்.

தங்கத்தில் வண்ண மேற்பூச்சு செய்யப்படுவது விரும்பப்படுகிறது ஏனெனில் மற்ற எந்தவொரு உலோகத்தையும் விட தங்கம் வண்ண எனாமல் பூச்சை சிறப்பாக பிடித்துக் கொள்ளும், மேலும் தங்கத்தின் இயற்கையான பிரகாசமான ஒளி வண்ணங்களை அழகாக வெளிக்கொண்டு வரும்.

இந்தியாவில் மிகப் பிரசித்தமான எனாமல் வண்ணப்பூச்சு கலைமீனாகாரி வேலைப்பாடாகும், இதில் தங்கத்தின் ஒளியை மேம்படுத்த தங்கத்தின் மேற்பரப்பை அழகான வண்ணங்களால் அழகுப்படுத்தும் பணி செய்யப்படுகிறது. எளிமையாக உலோக நகைகளிக் மேற்பரப்புகளில் வண்ணம் தீட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, சூளையில் வைத்து சுடப்படும், அங்கே அழகான பொருளை தயாரிக்க வண்ணங்கள் உருக்கி ஒட்டப்பட்டு கெட்டிப்படுத்தப்படும்.

திறன் வாய்ந்த முகலாய கலையான மீனாகாரியின் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பற்றி மேலும் படியுங்கள்.

பெரும்பாலும் ஜடாவ் மற்றும் குந்தன் நகைகளின் பின்னால் காணப்படும் இந்த செழிப்பான கலை அதிக விவரமா நுணுக்கங்களைக் கொண்டது மேலும் அதிகமாக கண்கவர் தன்மை கொண்டது. இந்த கலை வடிவத்தின் நுணுக்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

மீனாகாரி வேலைப்பாட்டின் வகைகள்

மீனாகாரி பாரம்பரிய நகைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் சாவிக் கொத்துக்கள், பூச்சாடிகள், கிண்ணங்கள், சுவர் அலங்காரப் பொருட்கள் போன்ற ஏராளமான அலங்காரப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மீனாகாரி கலையில் முக்கியமாக இரண்டு வகைகள் இருக்கின்றன, அவை ‘ஏக் ரங் குலா’ மற்றும் ‘பாஞ்ச் ரங் மீனா’ என்றழைக்கப்படுகிறது. முதலாவது வகையில் ஒற்றை எனாமல் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது மேலும் இது பெரும்பாலும் திருமண நகைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் பிந்தையதில் அதிக பாரம்பரியத் தோற்றத்திற்காக ஐந்து வண்ணங்களின் கலவை பயன்படுத்தப்படுகிறது.

ஏக் ரங் குலா பாணியிலான காப்பு

வண்ண மேற்பூச்சு செய்யும் செயல்முறை

வண்ண மேற்பூச்சிடும் வேலைப்பாடு சிக்கலானது என்பதால், ஒவ்வொரு நகையும் நிறைவை நெருங்கும் முன் பல்வேறு நிபுணர்களைக் கடந்து வருகிறது. இந்த செயல்முறை அதிக திறன் வாய்ந்த சிதேராவால் (வடிவமைப்பாளர்) தொடங்கப்படுகிறது, அவர் தான் வடிவமைப்பை தயார் செய்து சோனாரிடம் (பொற்கொல்லர்) அனுப்புகிறார், அவர் கலம்காரின் (செதுக்குபவர்) உதவியோடு வடிவமைப்பை செதுக்குகிறார். பின்னர் மீனாகார் உலோகத்தை வண்ண எனாமல் பூச்சுடன் உருக்கி ஒட்டுகிறார்.

அந்த நகை இறுதியாக கோட்னாவாலாவால் (மெருகிடுபவர்) மெருகேற்றப்பட்டு பிறகு குந்தன்சாஜின் (கல் பதிப்பவர்) கைகளுக்கு மாற்றப்படுகிறது, அவர் குந்தன்களை பொருத்துகிறார். இறுதியாக இந்தத் தயாரிப்பு படுவாவிடம் (சரங்களை இணைப்பவர்) ஒப்படைக்கப்பட்டு நிறைவு வேலைப்பாடுகள் செய்யப்படுகிறது, இத்துடன் விரிவான மீனாகாரி செயல்முறை நிறைவடைகிறது.

அதன் பிறகு இந்த நகை உலையில் இடப்பட்டு உருக்கி இணைக்கப்படுகிறது அல்லது கடினமாக்கப்படுகிறது. ஒருமுறை வண்ணங்கள் உலோக மேற்பரப்பின் மீது பாதுகாக்கப்பட்ட பிறகு, அதன் ஒளியை வெளிக்கொண்டு வர எலுமிச்சை மற்றும் புளி கலந்த கலவையால் தேய்க்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

வண்ண மேற்பூச்சு செய்யப் பயன்படுத்தப்படும் வண்ணங்களின் பின்னணியில் உள்ள விஞ்ஞானம்.

உலோக ஆக்சைடுகள் எனாமல் வண்ணங்களாகப் பயன்படுத்தப்படுகிறது, இது மிகச் சரியான அளவு தூளாக்கப்பட்ட கண்ணாடியுடன் கலக்கப்படுகிறது. ஆக்சைடு பெறப்பட்ட வண்ணத்தின் சாயத்தைக் கட்டுப்படுத்துகிறது; இந்தக் கலவைகள் உலையில் வைக்கப்படும் வரை அதன் அசல் சாயல்களை மூல வடிவத்தில் காட்டுவதில்லை. இந்த வண்ணங்கள் இந்தியாவில் அமிர்தசரஸ் அல்லது ஜெர்மனியில் பிரான்ஸிலிருந்து பெறப்பட்டவை.

முகலாயர்களால் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நகைகளிலும் வீட்டு அலங்காரப் பொருட்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மீனாகாரி வேலைப்பாடு, இந்தியா முழுவதும் ஒரு முக்கியக் கலை வடிவமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதிக அளவில் இந்திய நகரங்களான லக்னோ, பஞ்சாப், பனாரஸ் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்கள், அவற்றின் சொந்த பாணியில் வண்ண மேற்பூச்சு வேலைப்பாடுகளை மேம்படுத்தியுள்ளன. மேலும் உலகெங்கிலும் அவற்றின் அற்புதமான கலைப் படைப்புகளுக்காக புகழ்பெற்று விளங்குகின்றன.