Published: 20 பிப் 2018

பாதாள அறை பி –யின் மர்மங்கள்

Sri Padmanabhaswamy Temple Vault B

கேரளா, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு நீங்கள் போவீர்கள் என்றால், அத்தகைய ஒரு கோயிலை அந்த மாநிலத்தில் வேறேங்கும் காணமுடியாது என்பதை உணர்வீர்கள். விஷ்ணுவை தரிசிக்க நாள்தோறும் அங்கு ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர். ஆனால், அங்கு ஏதோ மறைக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் என்பார்களே, அது போல். அந்த இரகசியம் தான் என்ன?

பொக்கிஷம் – விலை மதிப்புள்ள தங்க சிம்மாசனம், கிரீடங்கள், நாணயங்கள், சிலைகள், ஆபரணங்கள் மற்றும் வைரங்கள் மற்றும் இதர நவரத்தின கற்கள் போன்றவை சேகரித்துவைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு, நீங்கள் தங்கம் நிறைந்த ஒரு அரங்கத்தில் நடப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.

இந்த பொக்கிஷங்கள் ஏ முதல் எஃப் வரை பெயரிடப்பட்ட 6 இரகசிய பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பி என்ற பாதாள அறை, அதைத் திறப்பவருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடும் என்ற பயம் காரணமாக திறக்கப்படவில்லை. இந்த பாதாள அறை குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு முன்பு நாம் ஏ, சி, டி, ஈ மற்றும் எஃப் ஆகிய பாதாள அறைகளில் உள்ள கற்பனைக்கும் எட்டாத அளவில் குவிக்கப்பட்டிருக்க சாத்தியமுள்ள பொக்கிஷங்களைப் புரிந்துகொள்வோம்.

கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம் – தூய தங்கத்திலான 3.5 அடி உயரமுள்ள மஹாவிஷ்ணு திருவுருவச்சிலை, 18 அடி நீளமுள்ள ஒரு தங்க செயின், 500 கிலோ எடையுள்ள தங்க சிப்பம், பல்வேறு ரத்தினங்கள் பதித்த தடிமனான 1200 தங்க நாணயங்கள், மாணிக்கம் மற்றும் நீலமணிக்கற்கள் பதித்த தங்க தேங்காய் கொட்டாங்கச்சிகள்.

இவை மட்டும் தான் என்றில்லை! மூட்டை மூட்டையாக விலைமதிப்பு மிக்க நவரத்தினக்கற்கள், நெக்லெஸ்கள் மற்றும் புராதன கைவினைப்பொருட்களும் கணக்கில் அடங்கும். உண்மையில், நெப்போலியன் காலத்து மற்றும் ரோமானியப் பேரரசு காலத்து தங்க நாணயங்களும் இதில் அடங்கும். இந்த நாணயங்கள், வெவ்வேறு பல்லாயிரமாண்டுகளைச் சேர்ந்தவை என்பதால் விலைமதிப்பற்றவை ஆகும். இவற்றில் சில கி.மு. காலத்தைச் சேர்ந்தவை” என பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் இவற்றைத் திறக்க உத்தரவிடவில்லை என்றால், பெரும்பாலானோருக்கு இந்த பொக்கிஷக் குவியல் பற்றி தெரியவந்திருக்காது. இந்த பாதாள அறைகள் திறக்கப்பட்டதும், ஜி மற்றும் எஃப் என மேலும் இரண்டு பாதாள அறைகள் உள்ளது தெரியவந்தது. ஆனால், மிகப்பெரிய தீய சகுனம் உள்ளதாக மக்களால் பார்க்கப்படுவதால் பி இன்னும் மூடிய நிலையிலேயே உள்ளது. இந்த அறையின் நுழைவாயிலை ஒரு பாம்பு காவல் காப்பதாக, கோயில் தீட்சிதர்கள் இதை ஓர் எச்சரிக்கையாகக் கருதுகிறார்கள்.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பாதாள அறை பி –க்கு வெளியிலிருந்த உலோக கிரில் கதவினை திறந்தனர். அதற்கு உள்புறத்தில் ஒரு கனத்த மரக்கதவு இருந்தது. அதனையும் திறந்த போது, உள்ளே இரும்பால் செய்யப்பட்டிருந்த மூன்றாவது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் குழு உறுப்பினர்கள் பூட்டு-சாவி செய்பவரின் சேவையை பெற வேண்டியிருந்தது. ஆனால், திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தினர், பாதாள அறை பி –யை திறப்பதற்கெதிராக, தீட்சிதர்களின் எச்சரிக்கையை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் ஒரு தடையாணை பெற்றுவிட்டனர்.

நியு யார்க்கரில் வெளியான ஒரு கட்டுரையில் ஜேக் ஹால்பெர்ன் இப்படி குறிப்பிடுகிறார் - திருவனந்தபுரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கோயிலின் பாதாள அறைகளைத் திறந்து சோதிப்பது பற்றி ஆர்ப்பரிக்கவில்லை. ஆரம்பத்தில் இது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா போன்ற சூழ்ச்சிகளில் வெறியான, ”மூடியவைகளை” அதிக முக்கியத்துவம் உள்ளவையாக கருதும் ஒரு தேசத்தால், மர்மம் நிறைந்த பூட்டப்பட்டுள்ள ஒரு கதவு அப்படியே வைத்திருக்கப்பட வேண்டும் என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. ஆனால், இந்தியாவில் இந்து கோயில்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் செல்வமானது, ஆன்மிகமாக பரந்த அளவில் பார்க்கப்படுகிறதே அன்றி, நிதிசார்ந்த வரையறையாக பார்க்கப்படுவதில்லை.”

இந்த தடவை அந்த அறையை மூடப்பட்டதாகவே நாம் வைத்திருப்போம், குறைந்தபட்சம், இன்னும் சில காலத்திற்கு.