Published: 10 செப் 2018

இந்தியாவில் தங்கத்தை நோக்கிய நேர்மறை அணுகுமுறை

Positive attitude towards gold trend in Indian hearts

இந்தியர்களின் இதயத்தில், மூளையில், நகைப் பெட்டியில் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் தங்கத்தின் இடம் நிலையானது. ஆனால் இந்த மிக விலை மதிப்புள்ள தனிமத்துடன் நாம் பகிர்ந்து கொள்ளும் உறவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. தங்கத்திற்கு எப்பொழுதும் நம்பகமான சந்தை மதிப்பு இருக்கிறது அது உங்கள் அன்புக்குரியவர்களின் நிதிசார்ந்த வருங்காலத்தை பாதுகாக்க பணவீக்கத்திற்கு எதிரான காப்பரணாக செயல்படுகிறது. தங்கம் இன்று அதன் திட வடிவங்களான கட்டிகள், நாணயங்கள் மற்றும் நகைகளைத் தாண்டி புதிய மார்க்கமாக டிஜிட்டல் மயமாகியுள்ளது. இருந்தாலும், இந்தியர்கள் தங்கத்தை சொந்தமாக வைத்திருப்பது மரியாதையை பெற்றுத் தருவதாக நம்புகிறார்கள் இதனாலேயே, சிறப்பு தருணங்களில் தங்க நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களை வாங்குவது மற்றும் பரிசளிப்பதில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

பழைய மற்றும் புதிய தலைமுறையினர் தங்கத்தை பற்றிக் கொண்டிருக்கும் நேர்மறை அணுகுமுறையைப் பற்றி இங்கே ஒரு பார்வை:

தங்கம் இந்தியக் குடும்பத்தினரிடையே எப்படி பார்க்கப்படுகிறது?

  • வளர்ந்து வரும் இந்தியர்கள் அவர்களுடைய தாத்தா பாட்டி மற்றும் அவர்களுடைய பெற்றோர் தங்க நாணயங்களை சேகரிப்பதை கவனிக்கின்றனர். அவர்கள் இப்படி செய்வது எதனாலென்றால், தங்கத்தை சொந்தமாக வைத்திருப்பது வருங்காலத்திற்கான பாதுகாப்பு என்கிற உணர்வு அவர்களுடைய மனதில் பதியப்பட்டுள்ளது. இயல்பாகவே, இளம் இந்தியர்களும் தங்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு இதனை பாதுகாப்பான வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பு மற்றும் முதலீடாக பார்க்கின்றனர்.
  • இந்தியக் கலாச்சாரத்தில், தங்கம் நல்லதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் கொண்டு வரும் என்று அறியப்படுகிறது, எனவே வாழ்க்கையின் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் தங்கம் வாங்கப்படுகிறது.

தங்கம் எப்படி ஒரு முக்கியமான, நம்பகமான முதலீடாக இருக்கிறது?

  • மக்களுக்கு அவர்களுடைய வாழ்நாள் இலக்குகள் இலட்சியங்களை அடைய உதவுவதால் தங்கம் செல்வத்தை பாதுகாக்கும் ஒரு திடமான மற்றும் நிலையான வழிமுறையாக அறியப்படுகிறது.
  • அதன் உறுதித்தன்மை அதன் உரிமையாளருக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உணர்வை அளிக்கிறது.
  • தங்கத்தை சொந்தமாக வைத்திருப்பதில் மக்களுக்கு நேர்மறையான அணுகுமுறை இருக்கிறது.
  • இந்தியர்களில் 72% பேர் நீண்ட நாட்களானாலும் தங்கம் ஒருபோதும் அதன் மதிப்பை இழப்பதில்லை என்று நம்புகின்றனர்.
  • பணவீக்கம் மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு எதிரான காப்பரணாக இருப்பதால் 63% இந்தியர்கள் இந்திய கரன்சியை விட தங்கத்தை அதிகமாக நம்புகின்றனர்.
  • 70% இந்தியர்கள், தங்கத்தை சொந்தமாக வைத்திருப்பது தங்களுக்கு பாதுகாப்பான உணர்வை அளிப்பதாகக் கூறினார்கள்.
  • இந்தியர்கள் வருங்கால தங்க விலைகளைப் பற்றி நம்பிக்கையாக இருப்பதால் அதை ஒரு நம்பகமான முதலீட்டு வழியாக கருதுகிறார்கள்.

தங்க முதலீட்டில் வரவிருக்கும் போக்குகள்

  • முதலீட்டாளர்கள் தங்கத்தின் உறுதிப்பாடு மற்றும் நீண்ட காலத்திற்கு அதன் மதிப்பை தக்கவைத்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறார்கள்.
  • இந்தியர்கள் தங்கள் வருவாயைப் பொருட்படுத்தாமல் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
  • தமது வருமானத்தில் 24% முதல் 30% வரை சராசரியாக 3.8 சதவிகித பொருட்களில் முதலீடு செய்வதில் நகர்ப்புற இந்தியர்கள் இளமையும் ஆர்வமும் ஊகமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

தங்கத்தை நோக்கிய இந்தியர்களின் நேர்மறை பார்வை முதலீட்டாளர்களிடையே பயன்படுத்தப்படாத பெருமளவு திறன் இருப்பதைக் காட்டுகிறது, குறிப்பாக கொடுக்கப்பட்ட தங்கத்தில் முதலீடு செய்யும் நவீன வழிகளில் – ஈடிஎஃப் முதல் தங்க நகை கொள்முதல் திட்டம் வரை தங்கம் மொபைல் ஆப்பை அடிப்படையாகக் கொண்ட கட்டணம் செலுத்தல் மற்றும் போன்பி மற்றும் பேடிம் போன்ற மொபைல் வாலெட் சேவைகள் வழியாக விற்கப்படுகிறது.

ஆதாரம்