Published: 07 ஜூலை 2017

இந்தியர்கள் தங்கத்தை காதலிக்கிறார்கள்

ভারতীয়রা স্বর্ণকে ভালবাসে
இந்தியர்கள் 22,000 டன் தங்கத்தை வைத்திருப்பது தங்கம் என்ற மஞ்சள் உலோகத்தின் மீது அவர்கள கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு இந்திய நுகர்வோருக்கு 900-1000 டன் தங்கம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலன இந்த தங்கத் தேவைகள் நமது நாட்டில் நடக்கும் திருமணங்களினாலேயே உருவாகின்றன. இந்தியாவில் தங்கத்தின் தேவையில் 50 சதவீதம் தங்க நகைகளுக்கு தேவைப்படுகிறது. மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானோர் 25 வயதிற்கும் குறைவானவர்களாக இருப்பதனாலும் மற்றும் அடுத்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 15 மில்லியன் திருமணங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதனாலும், தங்கத்தின் பயன்பாடு ஒரு நாளும் வற்றிப் போகாது.

திருமணங்களில் பரிசளிக்கப்படும் நகைகள் எப்போதும் ஒரு முதலீடாகவே பார்க்கப்பட்டாலும், இந்த நாட்களில் இந்திய வாடிக்கையாளர்கள் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களில் பெரிதும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

இதற்கான காரணம் எளிமையானதாகும். கட்டிகள் மற்றும் நாணயங்கள் எப்போதுமே நகைகளை விட வர்த்தகம் செய்வதற்கு எளிதானவைகாளகும். இவற்றில் குறைந்த அளவே மோகம் காணப்படுகிறது.

தங்கத்தை வாங்குவது வாங்குபவர்களுக்கு அதிர்ஷடத்தைக் கொண்டு வரும் என நம்பப்படுவதால், அட்சய திருதியை மற்றும் தந்தேராக்கள் போன்ற பண்டிகைகளில் இந்த தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் பெருமளவில் வாங்கப்படுகின்றன. தெற்கில் பொங்கல், ஓணம் மற்றும் உகாதி போன்ற பண்டிகைகள்; கிழக்கில் துர்கா பூஜை; மேற்கில் குதுபாவ்டா; வடக்கில் பைசாகி மற்றும் கர்வாசாத் போன்ற பண்டிகைகளில் மக்கள் தங்கத்தை வாங்கி கொண்டாடுகின்றனர்.

நாம் அனைவரும் அறிந்தது போல, இந்த தங்கத்தின் ஒரு பகுதியை நமது தெய்வங்களுக்கு பரிசளிப்பது நமது கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு மற்றும் ஒரு நல்ல சகுணங்களைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலில் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இருப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்திலும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மிகவும் பிரபலமான உதாரணமாகும். சமீபத்திய ஆராய்ச்சியில் 35-40 மொபைல் போன்களில் சுமார் 1 கிராம் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நவீன மருத்துவத்திலும் தங்கம் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. உதாரணமாக மலேரியாவை கண்டறியும் பரிசோதனை கருவிகளில் தங்கம் உள்ளது. தங்கத்தின் குணப்படுத்தும் தன்மை என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் பழமையான மருத்துவ முறையாகும், ஆயுர்வேதத்தில் தங்கபஸ்பம் போன்ற மருந்துகள் பிரபலமானவைகளாகும்.

பொருள் வடிவிலான தங்கம் தவிர, இந்தியவில் உள்ள சில சேமிப்புகள் தங்க ஈ.டி.எப்.கள் மற்றும் தங்க நிதிகள் போன்ற சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் பக்கம் திரும்பியுள்ளன. இந்தியாவில் இந்த நிதிகளில் சுமார் 2.5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யப்படுகிறது மற்றும் அரசு கொண்டுவரவிருக்கும் அரசின் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) மூலம் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.