Published: 06 ஜூலை 2017

மரியாதை, அந்தஸ்து மற்றும் கௌரவம் - தங்கம் வாங்குவதனால் சமுதாயத்தில் கிடைக்கும் நன்மைகள்

Respect, Status and Prestige—the Social Benefits of Buying Gold
உலகிலேயே இந்தியர்கள் தான் மிக அதிக அளவில் தங்கம் வாங்குபவர்களாக இருக்கின்றனர், கடுமையாக வறுமையில் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் இவ்வாறு நடப்பது பொருளாதார நிபுணர்களை குழப்பமடையச் செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா சுமார் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது இது வேறு எந்த நாட்டைக் காட்டிலும் அதிகமாகும் மற்றும் உலகளாவிய விநியோகத்தில் கால் பகுதியாகும்.

இந்தியாவை தங்கம் ஆட்டிப் படைப்பதற்கான காரணங்களை நாம் உற்று கவனித்தால் இந்திய சமூகத்திலுள்ள இந்த முரண்பாடான காரியங்களை தீர்ப்பது சாத்தியமானதாகவே இருக்கிறது. தங்கம் அதனுடைய அழகு மற்றும் அபூர்வத்தன்மை காரணமாக அதை அணிவது “கௌரவமானது” என முத்திரையிடப்பட்டு வரலாறு, கலாச்சாரம் மற்றும் சமுதாயத்துடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளதே இதற்கு காரணமாகும். இந்தியாவில் தங்கம் பழங்காலத்தில் இருந்தே உயர்வான அந்தஸ்தை பெற்று வருகிறது - ஆட்சியாளர்களும் பேரரசர்களும் அவர்களின் அரண்மனைகளை தங்கத்தினால் அலங்கரித்துள்ளனர் மற்றும் அவர்களின் தாராளத்தன்மையின் அடையாளமாக அடிக்கடி எடைக்கு எடை தானம் செய்துள்ளனர்.

இந்தியாவில் தங்கம் ஆசிர்வாதத்தின் ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது; இது பெரும்பாலும் இந்திய திருமணங்களில் வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகிறது, இது வைபவத்தில் மணப்பெண் அணியும் தங்க நகையின் அளவு அவளது குடும்பத்தின் சமுதாய மற்றும் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் ஒன்றாகவே கருதப்டுகிறது. தங்கத்திற்கும் தூய்மைக்கும் இடையிலான வரலாற்று அமைப்புகள் 22 காரட் தங்கம் மீதான இந்தியாவின் மோகத்தில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது; தங்கம் அதன் தூய்மையான மற்றும் மேன்மையான வடிவத்தில் ஒரு வளமான குடும்பத்தின் ஒரு மதிப்புமிக்க சொத்தாக கருதப்படுகிறது.

தங்கத்தில் அதன் பண மதிப்பு தவிர, மணப்பெண் அணியும் தங்க நகையில் ஒரு உணர்வுப்பூர்வமான மற்றும் உணர்ச்சி வசமான மதிப்பும் இணைந்துள்ளது. மணமகள் ஒரு நாள் அதை தனது சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஒரு பரம்பரை சொத்தாகவும் நகைகள் பார்க்கப்படுகின்றன மேலும் அது ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளை இணைக்கும் கயிறாகவும் இருக்கிறது. இவ்வாறு, தங்கம் செல்வத்தின் ஒரு அடையாளமாக மட்டுமின்றி முன்னோரின் நினைவுகள் மற்றும் அடையாளங்களை சுமந்து வருகிறது.

விசேஷ நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின் போது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரிசளிப்பதற்கு தங்கத்தின் தனித்தன்மை அதனை ஒரு பிரபலமான தேர்வாக்குகிறது. ஒரு சிறு ஆபரணமாக அல்லது ஒரு மோதிரமாக இருக்கட்டும், ஒரு தங்கத்தை பரிசளிப்பது பரிசளிக்கும் நபரின் செழிப்பின் அளவையும் மற்றும் தாராளத்தன்மையையும் காட்டுகிறது.

ஆடம்பரமான கார்கள் மற்றும் வடிவமைப்பாளர் ஷூக்களில் பணத்தை வீணடிக்கும் நேரத்தில் தங்க நகைகள் ஒரு நியாயமான முதலீடாக இருப்பது மட்டுமின்றி செல்வத்தின் நேர்த்தியான மற்றும் மேன்மையான காட்சியை உருவாக்குகிறது. தங்கமானது கார்கள் மற்றும் ஷூக்களைப் போல் ஒருபோதும் ஃபேஷன் முடிந்து போகாமல் எப்பொழுதும் விரும்பப்படுவதாக இருக்கிறது

இதுபோன்று தங்கத்தின் கலாச்சார மற்றும் சமுதாய உணர்வுகளை புரிந்துகொள்வது மேலே குறிப்பிட்ட முரண்பாட்டை களைய உதவுவது மட்டுமின்றி வாங்கும் தங்கத்தின் முக்கியமான சமுதாய நன்மைகளை எடுத்துரைக்கவும் உதவுகிறது. செல்வத்தின் ஒரு அடையாளமாக, குடும்ப அந்தஸ்தின் ஒரு அடையாளமாக மற்றும் சமுதாய நிலையின் ஒரு சுட்டிக்காட்டியாக தங்கமானது இந்தியாவிலுள்ள வேறு எந்த பொருளையும் காட்டிலும் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.