Published: 17 ஆக 2018

மேற்கு வங்காளத்தில் பிரசித்தி பெற்ற தங்க நகை வடிவமைப்புகள்

Bengali Gold Jewellery

தங்கமானது, வங்காள கலாச்சாரத்தில் மாபெரும் முக்கியத்துவம் வகிக்கிறது மேலும் திருமணங்கள், சமய விழாக்கள் மற்றும் துர்கா பூஜை மற்றும் காளி பூஜை போன்ற முக்கிய திருவிழாக்கள் உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்ச்சிகளில் தங்க நகைகளை அணிந்து கொள்ளும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்தே இருக்கிறது.

இன்றளவும் புகழ்பெற்று விளங்கும் சில வங்காள பாரம்பரிய தங்க நகை வடிவமைப்புகளைப் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.

  • டிக்லி

    நெற்றியில் அணியப்படும் டிக்லி எனப்படும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட தங்க ஆபரணம் ஒவ்வொரு பாரம்பரிய வங்காள மணப்பெண்ணாலும் அணியப்படும் மாங்க்டிக்காண்டுடன் ஒத்திருக்கிறது.

  • சிக்

    பொதுவாகப் பெரும்பாலும் சோக்கர் என்றறியப்படும் சிக் ஒவ்வொரு வங்காள மணப்பெண்ணாலும் அணியப்படும் ஒரு இறுக்கமான விரிவாக நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தங்க நெக்லஸ் ஆகும். மேலும் இது துர்கா பூஜை போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் வங்காளப் பெண்களால் அணியப்படுகிறது.

    Courtesy: JKS Jewels
  • கான்

    ‘கான்’ என்கிற வார்த்தை ‘காது’ என்று பொருள் தரும். கான் என்பது வங்காளப் பெண்களால் அணியப்படும் ஒரு வகை காதணியாகும் மேலும் இது மனித காது வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் இது ‘கான் பாலா’ என்றும் அறியப்படுகிறது. இவை மெல்லிய தங்க இழைகளால் செய்யப்பட்டவை.

    மரியாதை: மலபார் கோல்ட்
    மரியாதை: டிகே பசாக் ஜூவல்லர்ஸ்
  • சுர்

    பொதுவாக ஜோடியாக வரும் அகன்ற காப்பான சுர் தங்கத்தில் செய்யப்படுகிறது. ஒரு ஜோடியை தயாரிக்க 40 முதல் 50 கிராம் தங்கம் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

    மரியாதை: சுஜாய் ஜூவல்லர்ஸ்
    மரியாதை: சென்கோ கோல்ட்
  • ரதன்சுர்

    முகலாயர்களால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரதன்சுர் கைகளுக்கான ஒரு நுண்ணிய தங்க ஆபரணமாகும். இதில் தங்க மோதிரத்துடன் மையத்தில் இணைக்கப்பட்ட சங்கிலி அணிந்திருப்பவரின் கைகளில் ஊஞ்சலாடும், இறுதியில் வங்கி அல்லது காப்பில் இணைக்கப்பட்டு முடியும்.

    மரியாதை: சென்கோ கோல்ட்
  • பவுடி

    அன்றாடப் பயன்பாட்டிற்கு சிறந்ததான பவுடி ஒரு அரை வெட்டு வளையலாகும், இது திருமணமானப் பெண்களின் விருப்பத்திற்குரியது.

    மரியாதை: சென்கோ கோல்ட்
  • பெலோயாரி சுரி

    ஒரு சிறப்பு வெட்டு வடிவமைப்பில் செய்யப்பட்ட இந்த வகை தங்க வளையல்கள் ‘பெலோயாரி’ என்று அறியப்படுகிறது. எனவே இந்த வளையல்கள் பெலோயாரி சுரி என்றழைக்கப்படுகிறது.

    மரியாதை: சென்கோ கோல்ட்
  • ஷோனா பந்தனோ ஷாகாபோலா

    வங்காளத் திருமணங்களில் பொதுவாகக் காணப்படும் இந்த வளையல்கள் சங்கு கிளிஞ்சல்கள் மற்றும் தங்கத்தால் செய்யப்படுகிறது.

    மரியாதை: சென்கோ கோல்ட்
  • போகுல் மாலா

    இந்தக் குறிப்பிட்ட தங்கச் சங்கிலியின் வடிவமைப்பு ‘போகுல்’ என்றழைக்கப்டும் மலரால் கவரப்பட்டு வடிவமைக்கப்பட்டது. திருமணமான வங்காளப் பெண்கள் தினசரி அடிப்படையில் போகுல் மாலாவை அணிகிறார்கள்.

  • காலா போரா பாலா

    இந்தத் தங்க வளையலில் அதன் வலிமை மற்றும் வாழ்நாளை அதிகரிக்க மெழுகை உள்ளே வைத்து நிரப்பப்படுகிறது. வங்காளப் பெண்களால் விரும்பப்படும் இந்த நகை மற்றுமொரு அன்றாடப் பயன்பாட்டு ஆபரணமாகும்.

இந்த மேற்கு வங்க தங்க நகை அந்த மாநிலத்தின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும். எனவே வங்காள பாரம்பரிய விழாக்களில் இது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.