Published: 12 செப் 2017

பாரம்பரிய தங்க ஒட்டியாணங்கள்

Woman adorning traditional gold waist-belt

இந்தியாவில் நகைகளின் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கும் ஆபரணம் ஒட்டியாணம் ஆகும். பண்டைய காலங்களிலிருந்தே ஒட்டியாணம் (அரைக்கச்சை) என்பது மிகவும் பிரபலமான ஆபரணமாக இருந்து வந்துள்ளது, மேலும் அதை பெரும்பாலும் கடவுள்கள், அரசர்கள், ராணிகள் ஆகியோரின் ஒவ்வொரு வரலாற்று உருவத்திலும் அல்லது சிற்பங்களிலும் காணலாம். அரைக்கச்சை என்பது உடையைச் சுற்றி மற்றும் / அல்லது ஆடைகளின் அடிப்பகுதியை பிடிக்கும் வகையில் இருக்கும், மேலும் பாரம்பரிய ஆடைகளை வடிவமைப்பதற்காக தங்கத்தால் கட்டப்பட்டிருக்கும்.

தங்கத்தால் செய்யப்பட்ட அரைக்கச்சைகள் தடிமனாகவோ அல்லது நெகிழ்வாகவோ இருக்கலாம். இவை கர்தாணி அல்லது கமர்பண்ட் என்று பிரபலமாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில், ஒரு தடிமனான இடுப்பு கச்சை என்பது 'ஒட்டியாணம்' (வட்டணம்) என்று அழைக்கப்படுகிறது, 'அரப்பட்டா' என்பது நெகிழ்வான ஒன்றாகும். அரைக்கச்சைகளின் மற்ற பெயர்களானது சரங்களின் எண்ணிக்கையின் (தங்கம் அல்லது பிற உலோகம்) அடிப்படையில் இருக்கும்-
 

காஞ்சி ஒற்றை சரம்
மேகலா எட்டு சரங்கள்
ரஸனா பதினாறு சரங்கள்
கலபா இருபத்தி-ஐந்து சரங்கள்
 

தங்கக் கச்சைகளானது திருமணத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. கூடுதலாக, கருத்தரித்தல் தொடர்பான நோய்களிலிருந்து திருமணமான பெண்களைத் தங்கமானது பாதுகாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

சாவிக்-கொத்து என்பது இந்தியாவின் மேற்குப் பகுதியில் சல்லா என்று பிரபலமாக அறியப்படும் மற்றொரு இடுப்பு நகை ஆகும். பாரம்பரியமாக, டிஜோரியின் (குடும்பத்தின் பொக்கிஷம்) சாவிகளை வைத்திருக்கும் பெண்களால் ஒரு சல்லா பயன்படுத்தப்பட்டது. சல்லா என்பது இடுப்பில் சேலைக்குள் செருகப்பட்டிருக்கும், இது பாரம்பரிய உடைக்கு அழகைக் கூட்டும்.

நவீன இந்தியா அதன் மரபுகளை மனதார பாதுகாத்து வருகிறது; இருப்பினும், பாரம்பரிய வடிவமைப்புகளை நவீனத்துடன் கலக்க நாம் விரும்புகிறோம். கர்தானி என்ற நவநாகரிக நகையானது, வயிற்று சங்கிலியாகப் பயன்படுத்தப்படுகிறது, இது சில நேரங்களில் தொப்புளில் குத்திக்கொண்டு இணைக்கப்படுகிறது.

இடுப்பு-ஆபரணங்களின் முக்கியத்துவம் மற்றும் இந்திய கலாச்சாரத்தில் அவை நன்கு பரவியிருப்பதன் காரணமாக, பாரம்பரிய மற்றும் நவீன பதிப்புகள் ஆகியவை எப்போதும் ஒவ்வொரு இந்திய பெண்ணின் "விருப்பமான பட்டியலில்" இருக்கிறது.