Published: 27 செப் 2017

தங்கத்துடன் தொடர்புடைய பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள்

Traditional pure gold jewellery

பல நூற்றாண்டுகளாக, வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், மற்றும் தீவிர நம்பிக்கைகள் கொண்ட அமைப்பு முறை என ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்யும் எல்லாவற்றிலும் மதம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றின் தாக்கம் உள்ளது. அனைத்து மதிப்புமிக்க உலோகம் மற்றும் அதன் ஆபரணங்களிலும், இந்தியர்கள் தங்கத்தைப் பரிபூரணமாகக் கருதுகிறார்கள்.

நீண்டகால நம்பிக்கைகளானது, நாம் நகைகளை எப்படி அணிந்துகொள்வது, எந்த நபர் எதை அணிந்துகொள்கிறார், அது உடலில் எங்கு இருக்க வேண்டும் மற்றும் அணிந்திருப்பவரைப் பற்றி நகைகள் என்னென்ன குறிப்பிடுகின்றன என்பவற்றை தெரிவிக்கின்றன. சில நகைகளை அணிந்து கொள்வதால் ஆரோக்கியம் மற்றும் உளவியல் ஆகியவற்றில் நேர்மறையான விளைவுகளை ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கட்டுரையில், பண்டைய இந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்பட்ட, இப்பொழுதும் கூட பின்பற்றப்படுகிற நம்பிக்கைகள் மற்றும் மரபுகளில் சிலவற்றை முன்வைக்கிறோம்.

  • தங்கம் மற்றும் மனித உடல்

    தங்கமானது குணப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சரியான உடல் பாகங்களில் அணியும் பொழுது, அது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. சில முக்கிய நம்பிக்கைகள் பின்வருமாறு:

    • கடைசி விரலில் தங்கத்தை அணிவது சளி, காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
    • கழுத்தில் தங்கம் அல்லது தங்க லாக்கெட் அணிவது திருமண வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
    • நடுத்தர விரலில் ஒரு தங்க மோதிரத்தை அணிவது கருவுறாமை தொடர்பான பிரச்சினைகளைக் குணமாக்கும்
  • தங்கம் மற்றும் மதம்

    தங்கம் ஆனது தர்ம சாஸ்திரங்களில் (மதப் புத்தகங்களில்) சிறந்த உலோகமாகக் கருதப்படுகிறது, அதன் துருப்பிடிக்காதத் தன்மையே அதற்குக் காரணம். தங்கத்தின் பிரகாசமும் பளபளப்புத்தன்மையும் நிரந்தரமானவை. எனவே, கடவுளர்க்கான ஆபரணங்களைத் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நம்பிக்கையைப் போலவே, பல கதைகள், சமய நம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இவற்றில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் இந்த நம்பிக்கைகள் இருந்தாலும், இல்லையென்றாலும், தங்கமானது விலையுயர்ந்த மற்றும் விரும்பப்படும் உலோகமாக இருந்துவருகிறது.