Published: 04 செப் 2017

துக்ளக்கின் தோல்வியடைந்த பரிசோதனை

14ஆம் நூற்றாண்டின் சுல்தானான, "யோசனை மனிதர்" என அழைக்கப்படும் முகமது-பின்-துக்ளக் என்பவர், மத்திய கால இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க சுல்தான்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

அவரின் பல்வேறு யோசனைகள் நவீனமானதாக இருந்தன; இருப்பினும், அவர் பொறுமையற்றவராக இருந்தார், எனவே அடிக்கடி மாற்றப்படும் அவரது கொள்கைகளையும், கற்பனையையும் பின்பற்ற முடியாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

சுல்தான் தனது ஆரம்பகால ஆண்டுகளில் அற்பமான செலவினங்கள் மூலமாக ராஜ்யத்தின் கருவூலத்தை சீரழித்தார், பரிசுகளாக பெரும்பாலும் தங்க முடிப்புகளை யோசிக்காமலே அள்ளி வழங்கினார். இழந்த செல்வத்தை மீட்பதற்காக, வளமான நிலங்களின் விவசாயிகளுக்கு வரிகளை அதிகப்படுத்தினார். மிகக் கடுமையான வரிகளால் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் துன்பம் காரணமாக அவரது இராஜ்யம் சீக்கிரமே கரைந்து போனது. தனது தவறுகளை உணர்ந்து, அவர் 1341ல் அனைத்து வரிகளையும் நீக்கி, டெல்லி முழுவதும் தொண்டு செயல்களில் பங்கு பெற்றார்.

கருவூலத்தின் பெரும் இழப்புகளை மீட்டெடுக்க முடியாத போது, டோக்கன் நாணயத்தை அறிமுகம் செய்தல் என்ற மற்றொரு பேரழிவு முயற்சியில் துக்ளக் ஈடுபட்டார். சீனாவில் அவருடைய சமகாலத்தைச் சேர்ந்த குப்ளாய் கானால் வெளியிடப்பட்ட காகிதப் பணத்தைப் பார்த்து, டோக்கன் நாணயத்தை வெளியிடும் யோசனை அவருக்குத் தோன்றியது.

துக்ளக் தனது பணம் குறித்த பரிசோதனையின் விளைவுகளை முன்னரே கணிக்கவில்லை. டோக்கன் பணத்தின் மதிப்பானது கருவூலத்தின் வளத்தைப் பொறுத்தது (அவருடைய டெக்கான் வெற்றிகளுக்குப் பின்னர் இது முழுக்க தங்கத்தால் நிறைந்திருந்தது) என்பது அவருக்கு புரிந்திருந்தது, ஆனால் அரசு மட்டுமே டோக்கனை வழங்க வேண்டும் என்பதை அவர் மறந்துவிட்டார்.

விளைவு? மக்கள் டோக்கனை உருவாக்குவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர், எனவே சந்தையானது விரைவிலேயே போலி நாணயங்களால் நிறைந்தது. ஸ்டேன்லி லேன்-பூலே என்பவர் எழுதிய இந்திய வரலாறு: முகமதியர்களின் வெற்றியில் இருந்து அக்பர் பேரரசின் ஆட்சிக்காலம் வரையிலான இடைக்கால இந்தியா என்ற புத்தகத்தில், "ஒவ்வொரு வீடும் ஒரு நாணயம் அச்சடிக்கும் கூடமாக மாறி, பல மில்லியன் கணக்கான நாணயங்களை மக்கள் உற்பத்தி செய்தனர்" என்று தெரிவிக்கிறார். அவரது குடிமக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ, பசுக்களை வாங்க, ஆயுதங்கள், துணி மற்றும் தங்களால் முடிந்த அனைத்தையும் வாங்க கள்ள நாணயங்களைப் பயன்படுத்தினர்.

உள்ளூர் ராஜாக்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் பணக்காரர்களாக ஆன போது, இந்த நாணயங்களின் மதிப்பு கிட்டத்தட்ட பயனற்றதாக ஆனதால் அரசாங்கம் ஏழையாக மாறியது, எனவே அந்த உத்தரவை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் சுல்தானுக்கு ஏற்பட்டது. இந்த தோல்வியுற்ற பரிசோதனையின் மிகப்பெரிய சீரழிவு காரணமாக, கருவூலத்திலிருந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை செம்பு நாணயங்களாக பரிமாற்றிக்கொள்ளப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தேசிய தலைநகருக்குத் திரண்டனர், எனவே துக்ளக்கிடம் மலை அளவில் செம்பு நாணயங்கள் குவிந்தது.