Published: 31 ஆக 2017

தென் இந்தியாவின் பாரம்பரிய தங்க நெக்லஸ் வடிவமைப்புகள்

Chandan Haar Gold

தங்கத்தின் இருப்பு காரணமாக, இந்தியா எப்போதும் உலகளாவிய பார்வையாளர்களையும் வாங்குபவர்களையும் ஈர்க்கும் தங்கப் பொக்கிஷங்களின் நிலமாக உள்ளது. இந்த பன்முக தேசத்தின் நகைப் பெட்டியானது, ஒவ்வொரு பிராந்தியத்திலும் மாறுபடும் பல்வேறு வகையான நேர்த்தியான வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன. மனித உடலைக் கொண்டாடும் நேர்த்தியான வடிவமைப்புகளை கண்டுபிடிப்பதற்கும், உருவாக்குவதற்கும் மகத்தான சக்தியை இந்தியர்கள் செலவழித்துள்ளனர்.

தங்க நெக்லஸ் (ஹிந்தியில் 'ஹார்') ஆனது பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கின்ற ஆபரணமாகும். இந்த ஆபரணங்கள் மாநிலங்கள் மற்றும் சமுதாயங்களை பொருத்தவரையில் வேறுபடுகின்றன. இந்தியாவின் பாரம்பரியத்திலிருந்து சில பழங்கால, நேர்த்தியான நெக்லஸ்களை உங்களுக்குக் கொண்டுவருகிறோம்.

இந்தியாவின் தங்க நிலமான இந்தியாவின் தென் முனையானது எப்போதும் அதன் வளமான மற்றும் பாரம்பரிய தங்க ஆபரணங்களுக்காக கௌரவிக்கப்படுகிறது.
 

தமிழ்நாட்டில் உள்ள காசுமாலை நெக்லஸ் என்பது தங்க நாணயங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகிறது, அது இடுப்பு வரை நீள்கிறது.

கௌரிசங்கரம் நெக்லஸ்: இந்த நெக்லஸானது, தங்க மணிகளுக்குப் பதிலாக புனித வழிபாடு செய்யப்பட்ட ருத்ராட்சம் மற்றும் ஒரு தங்கப் பதக்கம் ஆகியவற்றைக் கொண்டது, இது சிவபெருமானின் தோற்றமான, நடராஜரின் தாண்டவக் காட்சியைக் காட்டுகிறது.

மாங்காய் மாலை என்பது மாபெரும் தங்க சரங்களின் விளிம்பில் சேர்க்கப்பட்டுள்ள மாம்பழ வடிவ வடிவமைப்புகளுடன் (பைஸ்லே என அழைக்கப்படுகிறது) அலங்கரிக்கப்பட்ட மற்றொரு பாரம்பரிய தங்க நெக்லஸ் ஆகும்.

முல்லை மொட்டு மாலை என்பது இன்றைய காலகட்டத்தில்கூட மிகவும் பிரபலமான தங்க நெக்லஸ்களில் ஒன்றாகும். மணக்கும் மல்லிகை மலர்களின் மொட்டுகளானது தங்கத்தில் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தின் கொக்கே-தாத்தி பிறை நிலா வடிவ தங்கப் பதக்கத்தின் தொகுப்பு ஆகும். இதேபோல், மோ மாலா என்பது தங்கத்தால்-மூடப்பட்ட குஞ்சத்துடன் (குச்சி), ஒரு கருப்பு கயிறு மீது மெழுகு பூசப்பட்ட தங்க மணிகளால் கோர்க்கப்பட்டுள்ளது. இந்த கழுத்தணிகளானது குடகு பகுதியின் மணப்பெண்களின் நகைகளில் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

மற்ற மாநிலங்களைப் போலவே, கேரளா அதன் நேர்த்தியான கலையுணர்வு மற்றும் வடிவமைப்புகளுக்கு புகழ்பெற்றது ஆகும். வலைப்பின்னல் என்பது ஃபிலிக்ரீ கலைவடிவத்தைக் காட்டுகிறது; இது ஜரிகை வேலைப்பாடுகளுக்காக சிறுபூக்கள் கொண்ட ஒரு தங்கக் கம்பியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 

மலர் நெக்லஸானது பூ-தாலி என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்காநெட் (ஒரு காலர்-பாணி நெக்லஸ் நகை) என்பது ஒளிரும் மலர் கொண்டு தங்கத்தின் இலகுவாக தகடுகளில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழி மின்ன மாலை என்பது முத்திரையிடப்பட்ட தங்கம் மற்றும் ஃபிலிக்ரீ கலைவடிவம் ஆகியவற்றின் கலவையாகும். இந்த நெக்லஸின் பெயரானது பிரகாசிக்கும் (மின்னா) கோப்பைகள் (குழி) என்பதில் இருந்து வந்ததாகும்.

பவன் சாரா நெக்லெஸ் என்பது காசுமாலையைப் போன்றது ஆகும்; 50 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட மகாராணி விக்டோரியாவின் உருவம் கொண்ட இருபத்தி ஏழு தங்க நாணயங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நெக்லஸ் ஆகும். அவை மகாராணியை ஒரு இளம் பெண்ணில் இருந்து வயது முதிர்ந்தவர் வரை சித்தரிக்கிறது, அதன் நடு நாணயமானது அவரை இந்தியாவின் மாகாராணியாக சித்தரிக்கிறது.

மகாராஷ்டிராவின் சம்பாகளி நெக்லஸ் தங்க மொட்டான மிச்சேலியா சம்பாக்காவில் இருந்து ஈர்க்கப்பட்டது ஆகும். இந்த நெக்லஸின் கூறுகளானது தங்கத்தின் மெல்லிய தகடில் செய்யப்படுகிறது.

கோலாபூரி சாஜ் என்பது கோலாபூர் நகரில் இருந்து வந்த நெக்லஸ் ஆகும்; விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் முத்திரையிடப்பட்ட சின்னங்களை வரிசையாக உள்ளடக்கிய ஒரு தங்க நெக்லஸ் ஆகும். இந்த நெக்லஸானது அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் செல்வம் ஆகியவற்றிற்காக அணியப்படுகிறது.

கந்தி என்பது ஏழு வரிசைகளில் தங்க முலாம் பூசப்பட்ட மணிகளால் ஆனதாகும். பண்டைய கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கந்த-துடா மற்றும் கந்திகா என்பது இந்த நேர்த்தியான எளிய நெக்லஸின் முன்னோடிகளாகும்.

துஷி என்பது கோலாப்பூரில் இருந்து வந்த மற்றொரு நெக்லஸ் ஆகும். நெருக்கமாக-வைக்கப்பட்டுள்ள தங்கப் பந்துகளின் தடிமனான சங்கிலிகளானது ஒரு தோல் சரம் அல்லது ஒரு கயிறு மூலம் கட்டப்பட்டுள்ளது. துஷி என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அணியப்படுகிறது.

குஜராத்தில் உள்ள சாட் லடா நெக்லெஸ் என்பது ஏழு சரம் கொண்ட கார்காநெட் ஆகும். இந்தியாவில், ஏழு என்ற எண் இராசியானது என்று கருதப்படுகிறது.

கட்ச் பகுதியின் பாட்டியா சமுதாயத்தைச் சேர்ந்த ஜவளி மாலா என்பது ஒவ்வொரு மங்களகரமான நிகழ்விலும் தங்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வடிவமைப்பானது தங்கச் சங்கிலி மீது கட்டப்பட்டிருக்கும் தங்கத் தானியங்களைக் (ஜவளி) கொண்டிருக்கிறது, இது வளமை மற்றும் செல்வச்செழிப்பைக் குறிக்கிறது. இந்தக் கழுத்தணியானது புதிதாக தாயான ஒருவருக்கு பொதுவாக வழங்கப்படுகிறது.

ஹஸ்லி (கடினமான நெக்லஸ்) என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. தங்க கம்பியானது மூடி, ஒரு திடமான தங்க வளையத்தைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும்.

பலியோரா என்பது 'இளஞ்சிவப்பு நகரமான' ஜெய்ப்பூரை சேர்ந்ததாகும். இந்தக் கழுத்தணியானது இரத்தினக் கற்கள் கொண்ட ஸ்பேசர்கள் மற்றும் ஒரு பதக்கத்தில் பிணைக்கப்பட்டுள்ள ஏழு சங்கிலிகளால் ஆனதாகும். பலியோரா என்பது பொதுவாக ராஜஸ்தானிலுள்ள வணிகர் சமுதாயத்தினரால் அணியப்படுகிறது.

இந்த தங்க நெக்லஸ்கள் என்பது பழங்காலத்தைச் சேர்ந்ததாகும், ஆனால் அவை இன்னும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது, மேலும் இப்போது அவை முக்கியப் பகுதியாக கருதப்படுகின்றது. இருப்பினும், இவை இப்பொழுது கிடைக்கும் சில வகை தங்க நெக்லஸ்களாகும்; இதுபோல், இன்னும் பல இருக்கின்றன.