Published: 04 அக் 2018

நெய்யக்கூடிய, அணியக்கூடிய மற்றும் துவைக்கக்கூடிய தங்கத்தை உருவாக்கியதன் பின்னணி என்ன?

All you need to know about a new fabric threaded in 24 karat gold

கடந்த பத்தாண்டுகளில் ஆடை உற்பத்தித் துறை பெருமளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 3டி பிரிண்ட் செய்யப்பட்ட துணிகளாக இருக்கட்டும் அல்லது IoT-அடிப்படையிலான ஸ்மார்ட் மற்றும் இண்டரேக்டிவ் ஆடைகளாக இருக்கட்டும் – தொழில்நுட்பமானது ஃபேஷன் உலகத்தில் புரட்சியை ஏற்படுத்திவருகிறது.

2011ல் இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்தது - 24 கேரட் தங்கத்தால் நெய்யப்பட்ட புதிய துணி தான் இந்தக் கண்டுபிடிப்பு. பத்தாண்டுகளுக்கு மேலாக தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஸ்விஸ் ஃபெடரல் லேபரட்டரிஸ் ஃபார் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை சார்ந்த ஒரு ஸ்விஸ் பொறியாளர்கள் குழு, தங்கத்தை துணியாக நெய்யக்கூடிய புதுமையை உருவாக்கினர். இந்த முறையில் பெறப்பட்ட தங்கத் துணியானது, நெய்யக்கூடியதாக, அணியக்கூடியதாக மற்றும் துவைக்கக்கூடியதாக இருந்தது.

பல நூறாண்டுகளாக, அரசப் பரம்பரையினரின் துணி அலமாரியில் தங்க முலாம் பூசப்பட்ட ஆடைகள் சிறப்பிடம் வகித்துவந்த போதிலும், ஒரு துணியை தூயத் தங்கத்திலான நூல்களால் பின்னி உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த EMPA குழுவானது, நெய்தல் மற்றும் அணிதல் ஆகிய செயல்முறைகளால் தேய்மானம் அடையாத, உலகின் முதல் தங்கத் துணி இது தான் என்று அறிவித்துள்ளது.

தொடர்புடையது: How gold is used in textiles

ஒருங்கிணைத்தல்

தங்கத் துணியை உருவாக்க பின்வரும் செயல்முறை பின்பற்றப்படுகிறது:

  1. தங்கத்தை மெல்லிய இழைகளாக பிரிப்பதற்கு அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இழைகள் நானோமீட்டர் அளவுகோலில் அளக்கப்படுமளவிற்கு மெல்லியவை ஆகும்
  2. ஒரு தங்க பாளமானது, அதிவேகத்தில் பாயும் ஆர்கன் அயனிகளால் அடிக்கப்பட்டுவதால், அதிலுள்ள தனி உலோக அணுக்கள் பிரிக்கப்படுகிறது
  3. தங்கச் சரக்கேற்றப்பட்ட ஒரு ஜெட் மூலம் பட்டு நூலின் மீது மெல்லியத் தங்கப்பூச்சு தரப்படுகிறது
  4. இந்த நூலானது பிறகு ஒரு பிளாஸ்மா பாய்ச்சலுக்குள் செலுத்தப்படுகிறது.

துணியின் பயன்பாடு

இந்தத் துணியானது தற்பொழுது பௌட்டை, கைக்குட்டை மற்றும் முழுநீள டை ஆகியவற்றைத் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஸ்டாண்டர்ட் கழுத்து டையானது 8 கிராம் தங்கத்தை கொண்டிருப்பதுடன், இதற்கு 7500 ஸ்விஸ் ஃப்ராங்குகள் (சுமார் 8500 அமெரிக்க டாலர்கள்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீடித்திருப்பதற்காக உருவாக்கப்பட்டது

தங்கத் துணி, நளினம் மற்றும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, அது நீடித்திருக்கக் கூடியதும் (ஏனென்றால், இது பட்டு நூலிழையை அடிப்படையாகக் கொண்ட்து) ஆகும்.

உலகம் முழுவதும் ஆடம்பரமாக உடையணியும் சமூகத்தினருக்கு தங்கத்துணியின் கண்டுபிடிப்பு ஒரு வேல்யூ அடிஷன் ஆகும். அதி வேக தொழில்நுட்ப முன்னேற்றத்தால், எதிர்காலத்தில் உண்டாகப் போகின்ற முன்னேற்றங்கள் நம்மை தொடர்ந்து அதிசயத்தில் ஆழ்த்தப்போகின்றன என்பது மிகையில்லா நிஜம்.

தொடர்புடையது: காலப்போக்கில் தங்கத்தின் பொருள் எப்படி மாறியது