Published: 20 பிப் 2018

தங்கம் ஏன் காப்பீடாகப் பார்க்கப்படுகிறது?

Why gold is seen as insurance?

குறிப்பாக, இந்தியாவில் இது முற்றிலும் உண்மை, ஏனெனில் பல இந்தியர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி எனில் மறுபாதி இது ஒரு பலமான நிதி முதலீடு. உண்மையில், தோராயமாக 700 டன் அல்லது உலகில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் 33% இந்தியாவில் வாங்கப்படுகிறது, இதன் மூலம் இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாக உள்ளது.

இந்தியர்கள் ஏன் அதைத் தொடர்ந்து ஒரு காப்பீடாகப் பார்க்கிறார்கள்? ஏனெனில் அது உண்மைதான்.

ஆயள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு என இன்னும் பல காப்பீடுகள், விபத்து, உடல்நலக்கேடு, எதிர்பாராத மரணம் இன்னபிறவற்றால் ஏற்படும் நிதிச் சிக்கல்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையில்தான் முக்கியமாக வாங்கப்படுகின்றன. அதைப் போலவே தங்கமும் நிதி அபாயங்களைக் குறைக்கும் பொருளாகவே பார்க்கப்படுகிறது.

முழுமையான நிதித் திட்டமிடலில் தங்கத்தின் பங்களிப்பு அறிவுடையதாகவே உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் முதலீடுகளை பல்வேறு வகைகளில் செய்வது பாதுகாப்பானதே. தங்கம் போன்ற விலையுயர்ந்த ஒன்று பங்குகள், பத்திரங்கள் மற்றும் பல்வேறு பிற முதலீடுகளுக்கு பலம் சேர்ப்பதாகவே இருக்கும். உங்கள் முதலீடுகளில் ஒன்று மதிப்பு குறைந்தால், மற்றொன்றின் மதிப்பு அதிகரித்து உங்களுக்கு ஏற்படும் பெரும் நிதி இழப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது தங்கம் உங்கள் முதலீடுகளையும் பாதுகாக்கிறது. கடந்த காலங்களில், மோசமானப் பொருளாதாரச் சூழல்களில் தங்கம் தன் மதிப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. பங்குகளின் சுழற்சித் தன்மை காரணமாக, சந்தை வீழ்ச்சி அடைவது எதிர்பார்க்கக்கூடியதே, தங்கத்தை கையிருப்பில் வைத்திருப்பது நல்ல பலனளிக்கக்கூடியதே.

இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, ஆனால் அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே போவது போலன்றி தங்கம் (அப்போதும்) அதனுடைய அசல் மதிப்பைத் தக்கவைத்திருந்தது. பணவீக்கம் அதிகமாக உள்ள காலத்தில், உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் குறைவான பொருட்களையும் சேவைகளையுமே பெற்றுத்தரும், ஆனால் தங்கம் தன் மதிப்பைத் தக்கவைத்திருக்கும்.

தங்க வர்த்தகம் யுஎஸ் டாலர்களில் நடைபெறுகிறது. டாலர் மதிப்பு குறையும்போது, அது தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு உதவுகிறது. நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், தங்கத்தை யுஎஸ் டாலர்களில் அதன் மதிப்பின் அடிப்படையில் உள்ளூர் கரன்சியாக மாற்றிக் கொள்ளலாம். இது ஒன்றும் அவ்வளவு மோசமில்லை தானே!