Published: 04 செப் 2017

உலக வங்கிகளின் கடுமையான பணம்சார்ந்த கொள்கையானது தங்கத்தின் விலைகளில் பாதிப்பு ஏற்படுத்துமா ?

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் கருத்துக்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணக் கையிருப்பு ஆகியவற்றின் மீதான அவற்றின் நடவடிக்கைகள் ஆகியவை தங்கத்தின் விலை நிர்ணயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

முதலில், கடுமையான மற்றும் மென்மையான கருத்துகளின் தாக்கத்தை புரிந்து கொள்ள, அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கடுமையான நடவடிக்கை அல்லது கடுமையான கருத்துக்கள் என்றால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் அல்லது பணம்சார்ந்த கொள்கைகளை தளர்த்துவது இனி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்க முடியாது என்று அர்த்தமாகும். மத்திய வங்கிகள் கடுமையான சொற்களில் பேசும் போது, அது தங்கத்தின் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

மறுபுறம், மென்மையான கருத்துக்கள் என்றால் தளர்த்தப்பட்ட பணம்சார்ந்த கொள்கைகள் தொடரும் என்று அர்த்தமாகும், மேலும் வட்டி விகிதங்கள் குறையச் செய்கிறது. இது நடக்கும்போது, விலைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

இது டாலரின் மதிப்பைப் பாதிக்கும். ஒரு பலவீனமான டாலர் மதிப்பானது தங்கத்தின் மதிப்பிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சமீபத்தில், மத்திய வங்கியின் செலவுகளைக் குறைத்து, வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐரோப்பாவிலும் கூட, ஐரோப்பிய மத்திய வங்கியின் இணக்கமான கொள்கை விரைவில் திரும்பப் பெறப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன.

இது உண்மையில் தங்கத்தின் விலைகளைப் பாதிக்கிறதா?

கடந்த காலத்தில் வட்டி விகித உயர்வானது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உண்மையில், அமெரிக்கா கடந்த காலங்களில் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பரில் அது வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியது, இது தங்கத்தின் விலை மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தியா போன்ற நாடுகளில், மத்திய வங்கிகளின் கொள்கைகள் தவிர, தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் காரணிகள் பல உள்ளன. கடந்த சில தசாப்தங்களில், உலகளாவிய மத்திய வங்கியின் நடவடிக்கையையும் மீறி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கூடுதலாக, வரிகளில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்களாலும் தங்கத்தின் விலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல், பொதுவாக, டாலர் அடிப்படையில் குறிப்பிடப்படும் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் விலைகள் கடுமையாக சரிந்த போதிலும், தங்கத்தின் விலை சீராக இருந்தது.

உலகெங்கிலும் தேவை மற்றும் வளர்ச்சி விகிதங்கள் ஆகியவை தொடர்ந்து பலவீனமாக இருக்கும்பொழுது, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளானது மிகவும் கடுமையான கொள்கைகளைப் பின்பற்றுவது சாத்தியமில்லாததாகும்; ஆனாலும், கடுமையான பணம்சார்ந்த கொள்கையானது தங்கத்தின் மதிப்பை சீர்குலைக்கும் என்பது அரிதான ஒன்றாகும். முதலீட்டாளர்கள் பெரும்பாலும் தங்கத்தை முதலீட்டை பரவலாக்கும் கருவியாகப் பயன்படுத்துவதால், உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை தொடர்ந்து வலுவாக இருக்கின்றது.