Published: 09 ஆக 2017

தனிப்பட்ட தங்கப் பரிசுகள் வழங்குவதற்கான 5 கருத்துக்கள்

ஓர் ஆண்டு விழா வந்து கொண்டிருக்கிறதா? உங்கள் பெற்றோரின் பொன்விழாவிற்கு சிறப்பான பரிசு ஏதாவது அளிக்க விரும்புகிறீர்களா? அத்தகு சிறப்புமிகு தருணங்களில் உங்கள் நேசத்திற்குரிய நபர்களுக்கு மிகவும் தனித்துவமான, அழகான பரிசை ஏன் அளிக்கக்கூடாது? நகைக்கடைக்காரர்கள், நகைக்கடைகள், ஆன்லைன் கடைகள் என இன்று நிறைய இருக்கின்றன, மிகவும் தனித்துவமான நகையை நீங்கள் பிரத்தியேகமாக வாங்கி உங்களது பிரியமானவருக்கு பரிசளியுங்கள்.

 1. ஆண்களுக்கான பிரத்யேகமான தங்க நகைகள்

  உங்களது தந்தை, கணவர், சகோதரர் அல்லது காதலர், என யாராக இருந்தாலும் குறைந்த அளவு தங்க நகையே நல்ல பலன் தரும். தனிப்பட்ட தங்க பட்டைகள், தங்க மோதிரங்கள் ஆகியவற்றில் உங்கள் பிரியமானவர்களின் பெயர் எழுத்துக்களைப் பொறித்தோ, தங்க பிரேஸ்லெட்டுகளில் தகவல்களை பதித்தோ, குடும்ப சின்னங்கள் பொருந்திய நெக்லேஸ்களையோ நீங்கள் பரிசளிக்கலாம். இவற்றை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். கைச் சங்கிலி இணைப்புகள், தோள்பட்டை இணைப்புகள், டை பின்கள், பதக்கங்கள், மற்றும் இதர தங்க ஆபரணங்கள், உங்கள் பிரியமானவர்கள் எப்படி விரும்புவார்களோ அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

 2. பெண்களுக்கான பிரத்யேகமான தங்க நகைகள்

  உங்களது தாய், மனைவி, சகோதரி, பெண் தோழி என உங்களுக்கு பிரியமானவர்களுக்கு உணர்ச்சி பூர்வமான தகவல்கள், எழுத்துக்கள், மறைமுகமான பதிவுகள் உள்ளிட்ட சிறப்பான தங்க நகைகளை பரிசளியுங்கள். ஒரு முக்கியமான நாளையும் தகவலையும் பின்பக்கம் பொறித்த ஒரு அட்டிகை, உங்கள் இருவரின் புகைபடங்கள் வைத்த பதக்கங்கள், திருமண அல்லது நிச்சயதார்த்த மோதிரங்கள், சிறிய கட்டிகள் கொண்ட பிரேஸ்லட்டுகள் என்று பல்வேறு விதமான தங்க நகை பரிசுகள் உள்ளன. இவை உங்களை ஈர்ப்பதற்கு தவறியதே இல்லை. பரம்பரை வம்சாவழி நகைகளும் புராதன தங்க நகைகளும் கூட தற்கால பெண்கள் விரும்பும் புதிய பாணியில் மாற்றி அமைக்கப்படலாம்.

 3. புதிதாக பிறந்தவர்களுக்கான பரிசுகள்

  புதிய பெற்றோருக்கு ஆசிர்வாதம் வழங்கும் அற்புதமான வழி தங்கத்தை பரிசாக அளிப்பதாகும். தங்கள் குழந்தையின் பெயர் பொறித்த சிறிய தங்க பிரேஸ்லெட்டை யார்தான் விரும்பாமல் இருப்பார்கள்? புதிதாக பிறந்த குழந்தையை ஆசிர்வதிக்க ஓர் அழகான தங்க நகை சிந்தனைக்குரிய பரிசு மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடும் கூட. குழந்தைக்கு பெயர் சூட்டுதல், முதல் பிறந்த நாள் கொண்டாட்டம், குழந்தைகளின் நீராட்டுதல் போன்ற வைபவங்களில் உங்கள் ஆசிர்வாதம் நிறைந்த தகவல்கள் பொறித்த தங்க நாணயங்களையும் பரிசளிக்கலாம்.

 4. உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கான பிரத்யேக தங்கப் பொருட்கள்

  உங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பரோ அல்லது மிகவும் மரியாதைக்குரிய சக ஊழியரோ அல்லது முதலாளியோ அவரைக் கவர்வதற்கான மாபெரும் வழி தங்கம். பரிசு பெறுபவரின் கையெழுத்து, பெயர் அல்லது முதல் எழுத்துக்கள் ஆகியவை பொறிக்கப்பட்ட தங்கப் பதிவு பெற்ற பேனாக்கள், வணிக அட்டைகள், பெயர் பறித்த தங்க கைகடிகாரங்கள், தங்க பேனாக்கள், தனிப்பட்ட வகை மோதிரங்கள், நிறைவான தங்க நகைகள், மறைமுகமான தகவல்கள் பதித்த தங்க சாவிக்கொத்துக்கள் ஆகியவை உங்கள் நலன் விரும்பிகளுக்கு நீங்கள் அளிக்கும் அற்புதமான பரிசுகள்.

  Name Engraved Gold Pen

 5. பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்ட தங்க பொக்கிஷங்களும் நகைகளும்

  திருமணங்கள், ஆண்டு விழாக்கள், மத சடங்குகள், திருவிழாக்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் இதர சமூக நிகழ்வுகள் போன்ற சிறப்பு தருணங்களில் பரிசளிப்பது சவால் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கலாம். உங்களது பரிசு புதுமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதற்கு அவை பிரத்யேகமாக இருக்க வேண்டும். கட்டிகள், நாணயங்கள், தொட்டிகள், ஓவியங்கள், பட சட்டங்கள் ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசுவதன் மூலமோ அல்லது தங்க நகையை பிரத்யேகமாக உருவாக்குவதன் மூலமோ அவற்றை உங்களுக்கென தனிப்பட்டதாக்குங்கள். உங்களது பிரியத்துக்குரியவர்களின் பெருமையையும் சந்தோஷத்தையும் அதிகரிக்க நுண்ணிய வேலைப்பாடுமிக்க தங்க சிலைகளையும் வடிவமையுங்கள்.

 6. உற்சாகமானவர்களுக்கான பரிசுகள்

  உங்களது பயண நண்பர், உங்களது வாகனத்தை விரும்பும் உறவினர், உங்களது உணவை பகிர்ந்துண்ணும் நண்பர் போன்றோருக்கு தனிப்பட்ட ஆபரணங்களை பரிசளித்தால் நீங்கள் அவர்கள் மேல் எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளீர்கள் என்பதை உணர்த்தும். கார்களின் சிறிய உருவத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள், உங்கள் பிரிய ஸ்தலங்களின் தங்க முலாம் பூசப்பட்ட ஓவியங்கள், ஒரு கால் பந்து வீரருக்கான சிறிய தங்க காலணி பொருத்தப்பட்ட சாவிக்கொத்து போன்ற பரிசுகளை அளிக்க விரும்புங்கள்.

பிரத்தியேகமான தங்க நகைகளை பரிசாக அளிப்பது விலை உயர்ந்த பரிசுகளின் உணர்ச்சி பூர்வமான மதிப்பையும் கூட்டும். உங்கள் பிரியமானவர்கள் மீது நீங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதையும் உணர்த்தும்.

ஆதாரங்கள்: Source1