Published: 12 செப் 2017

பண்டைய காலங்களில் இந்திய ரசவாதம்

Alchemy Gold

வேதியியலின் ஆரம்பகால அறிவியல்பூர்வமாக அல்லாத வடிவமான இரசவாதம் என்பது, அடிப்படை உலோகங்களை தங்கமாக மாற்றும் நோக்கத்தில் இடைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்திய ரசவாதத்தின் வரலாறானது சிந்து சமவெளி நாகரிக காலத்தின் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றிற்கு முன்பாக, முன்-வேத காலத்தில் தோன்றி இருக்கலாம். விஞ்ஞானிகளால் பல ஆண்டுகளாக தோண்டப்பட்ட அகழ்வாராய்ச்சியானது சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது, இது முன்-வரலாற்று காலத்தில் பண்டைய இந்தியர்களுக்கு இருந்த இரசாயனம் குறித்து அறிவைக் காட்டுகிறது.

"சாராம்சத்தின் பாதை" என்ற அர்த்தம் கொண்ட ரஸாயனா என்ற சமஸ்கிருத சொல்லானது, "ரசவாதம்" என்பதைக் குறிக்க தெற்காசிய நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையிலும், மற்றும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வேர்களைக் கொண்டிருந்த இந்த வார்த்தையானது, ஆயுட்காலத்தை நீட்டிக்கும் விஞ்ஞானம் அல்லது "புத்துயிர் சிகிச்சை" என்பதைக் குறிக்க ஆரம்பகால ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது.

டேவிட் கோர்டன் வொயிட்டின் ரஸாயனா (ரசவாதம்) கருத்துப்படி, இந்தியாவில், அடிப்படை உலோகங்களை தங்கமாக மாற்றுவதற்கான ஒரு மாற்றும் செயல்முறையை கண்டுபிடிக்கவும், அதன்பின்னர் சாகாமலே இருப்பதற்கான அமிர்தத்தை தயாரிப்பதற்காகவும் ரசவாதம் தொடங்கியது. இந்திய ரசவாதமானது தாந்திரீக வழிபாட்டு முறைகளில் இருந்து, பெரிய அளவிற்கு அதன் நிறத்தையும் சுவையையும் பெற்றது. இறுதியில், பாதரசம் மற்றும் பிற உலோகங்களின் பலவிதமான சேர்க்கை மற்றும் தயாரிப்புக்கள் ஆகியவை மருத்துவத்தில் உதவிகரமான பொருட்களாக உருவானது.

ஆரம்பகால இரசவாதிகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில், மாற்றப்பட்ட 'தங்கம்' மற்றும் உண்மையான தங்கம் ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இருந்தது. இந்திரா காந்தி கலைகளுக்கான தேசிய மையம், புது தில்லி என்ற நிறுவனத்தை சேர்ந்த பி.வி. சுப்பராயயப்பாவின் இயல்புமாற்றம்: பண்டைய இந்தியக் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள், மற்றும் தமிழ் உரையான அகஸ்தியரின் அமுத கலைஞானம், ஆகிவற்றின்படி தெளிவாக வேறுபடுத்தி அடையாளம் காண முடியும். "செயற்கை 'தங்கம் மற்றும் இயற்கை தங்கம் ஆகியவற்றை தனித்தனியாக நீண்ட காலத்திற்கு வெப்பத்திற்கு உட்படுத்தினால் அல்லது கால்சினேஷன் செய்தால், "செயற்கை 'தங்கம் என்பது சாம்பலாக மாறி, உண்மையான உலோகம் மட்டும் வெளிப்படுகிறது, அதே நேரத்தில் தூய தங்கமானது இந்த முறையில் பாதிக்கப்படாமல் உள்ளது.”

வரலாறு மற்றும் இரசவாதம் பற்றி முன்னர் அறியப்படாத ஆதாரங்களின்படி, இடைக்காலங்களின் இந்து ரசவாதம் மற்றும் ஹதா யோகா ஆகியவை ஒரே மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று வொயிட்டின் புத்தகம் முதன்முதலாக தெரிவிக்கிறது. ரசவாதத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட நாகார்ஜூனா சாகரா என்ற மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நடத்திய புத்தமத துறவியான நாகர்ஜுனாச்சார்யாவைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். பாதரசத்தை தங்கமாக மாற்றுவதற்காக ஒரு முறையை உருவாக்கியதாக நம்பப்படுபவர் நாகர்ஜுனாச்சார்யா ஆவார்.

உண்மையில், பழங்கால இந்திய நூல்களில் இந்த வகையான இரசவாதம் குறித்த மேற்கோள்கள் நிறைய உள்ளன. ரசவாதம் உண்மையிலேயே ஏற்பட்டிருந்தால், அவை குளிர் இணைவு என்று பிரபலமாக அழைக்கப்படும் குறைந்த- ஆற்றல் அணுசக்தியின் ஒரு வகையாக இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.