Published: 28 ஆக 2017

தாயத்துக்கள் – ஒரு பழங்கால நம்பிக்கை

தாயத்துக்கள் என்பது நகைகள் அல்லது சிறிய நகைத் துண்டுகள் ஆகும், இது அனைத்து வகையான தீயசக்திகள், ஆபத்துக்கள் அல்லது நோய்களில் இருந்தும் பாதுகாப்பு கொடுக்கும் என்று உரிமையாளர்கள் நம்புகிறார்கள். அவை இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சில சாதியினர் மற்றும் சமூகங்களால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் பண்டைய கலாச்சாரங்களில் அவை மிகவும் பொதுவானவையாகும்.
 
தாயத்துக்கள் என்பது அதிர்ஷ்டமானவை அல்லது மஸ்கோட்கள் என்றும் கருதப்படுகின்றன, மேலும் இந்தியாவில் வழக்கமாக ஒரு பதக்கம் அல்லது ஒரு காடா (வளையல்) வடிவில் காணப்படுகிறது, இது மாய சக்திகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தாயத்தின் வெளிப்பக்கமானது சூரியனின் மற்றும் பூமியின் சக்தியை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. தாயத்துக்கள் என்பது வாழ்வில் சமாதானத்தையும் வளத்தையும் மேம்படுத்தும் வகையில் தணிக்கும் ஆற்றல் மற்றும் நேர்மறை அதிர்வுகளைக் கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது.
 
பண்டைய நம்பிக்கைகளுக்கு இணங்க, பதக்க வடிவங்களானது முன்னமைக்கப்பட்ட நியமங்களின்படி குறிப்பிட்ட வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன, அவை அதன் ஆற்றலைக் குவித்து அணிபவர்களைப் பாதுகாக்கிறது. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் தாயத்துகளுடன் தொடர்புடைய நம்பிக்கைகளானது கிராமப்புற இந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக உள்ளன.
 
எல்லா வகையான தீமைகளையும் தடுக்க, பாகன் சமூகத்தினர், தாயத்துக்களை பதக்கம் மற்றும் காடா வடிவில் அணிந்துள்ளார்கள். தென்னிந்திய நகரான கோயம்புத்தூரில் உள்ள சில நாடோடிகள், சில வகையான தங்கத் தாயத்துகளை வைத்துக்கொள்கின்றனர், இந்த தாயத்துக்களானது நல்ல அதிர்ஷ்டத்தை விளைவிக்கின்றன என்று நம்புகின்றனர். தென்னிந்திய மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் பதக்க வடிவிலான தங்கத் தாயத்துக்களானது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வடக்குப் பகுதியில், ஒரு தாயத்து என்பது பாதாளம், மனிதர்களின் உலகம் மற்றும் கடவுளின் உலகம் ஆகிய மூன்று உலகங்களையும் இணைக்கிறது என்பது ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பொதுவான நம்பிக்கை ஆகும்.
 
இவையனைத்திலும், சுவாரஸ்யமான அம்சம் என்பது தங்கத் தாயத்துக்கள் ஆகும். தங்கத் தாயத்து என்பது பொதுவாகக் கழுத்தில் அணியப்படும் ஒரு எளிமையான பதக்கமாகும். சுவாரஸ்யமாக, தங்கத் தாயத்துகளில் பிற இரத்தினங்களைச் சேர்க்க முடியாது என்றும், அதனால் அதில் ஏராளமான வகைகள் இருக்காது என்றும் ஒரு நம்பிக்கை கூறுகிறது.