Published: 27 செப் 2017

இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கான மங்களகரமான 3.5 நாட்கள்

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளிலும் ஒரு சிறப்புமிக்க புனிதமான இடம் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கம் என்பது அதன் அளவற்ற ஆன்மிக மற்றும் சமய முக்கியத்துவத்தின் காரணமாக, உலோகங்களில் தூய்மையானதாகக் கருதப்படுகிறது. இது ஒருவரின் ஆன்மிக அல்லது உளவியல் ரீதியான ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தடுக்கும் அனைத்தையும் எரிக்கக்கூடிய, நெருப்பின் கூறுகள் கொண்ட ஆற்றல் அலைகளால் ஆனது என்று கூறப்படுகிறது.

எந்த நாளில் தங்கத்தை வாங்கினாலும் சுபிட்சமானது என்றாலும், வருடத்தின் பின்வரும் மூன்றரை நாட்களில் ஒரு நாளில் அவற்றை வாங்குவது மிகவும் மங்களகரமானது என்று கூறப்படுகிறது.

  • குடிபத்வா: இது இந்து மத நாட்காட்டியின் சித்திரை மாதத்தில் சந்திரனின் வளர்பிறை காலகட்டமான சுக்லா பக்ஷாவின் முதல் நாளாகும். இது வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும், மேலும் இது குஜராத், மகாராஷ்டிரா, வட இந்தியா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவற்றில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
  • அக்ஷய திருதியை: இந்து மத நாட்காட்டியின் வைகாசி மாதத்தில் சுக்லா பக்ஷாவின் மூன்றாவது நாளான இது, அகா டீஜ் அல்லது அகாத்ரிஜ் என்றும் அறியப்படுகிறது. வழக்கமாக, இது ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வருகிறது.
  • தசரா: அஷ்வினி மாதத்தில் சுக்லா பக்ஷாவின் 10வது நாள், இது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வருகிறது. தீமையை வென்ற ஒரு நன்மையைக் குறிக்கும் வகையிலான இந்த நாளில் ராமபிரான் அரக்கனான இராவணனைக் கொன்றார்.
  • அரை முகூர்த்தம்: இது தீபாவளி தினத்தின் பாதி ஆகும், அதாவது கார்த்திக் சுக்லா பிரத்திபாடா. இதுவும் குஜராத்திகளால் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்கள் அனைத்தும் இந்து மத நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்திருக்கும், ஒவ்வொரு ஆண்டும் இவை கொண்டாடப்படும் தேதிகள் மாறுபடலாம்.

தங்கம் வாங்குவதற்கு இந்த நாட்கள் ஏன் மங்களகரமானவையாக உள்ளது?

இந்திய ஜோதிடத்தில், ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னர் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் இடங்கள் ஆய்வு செய்யப்படும். இந்த மூன்றரை நாட்களில், கிரகங்களின் அமைப்புநிலை என்பது சாதகமானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இந்த நாட்களில் முகூர்த்தத்தைத் தேடுவதற்கான தேவையில்லாமல் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்க முடியும்.

இது போன்ற நாட்களில், ஒரு புதிய இடத்திற்குச் செல்வது, திருமணம் செய்து கொள்வது, முக்கியமானவற்றை வாங்குவது அல்லது ஆவணங்களில் கையொப்பமிடுவது போன்றவற்றை மக்கள் மேற்கொள்வதைப் பொதுவாகக் காணலாம். இந்த அற்புதமான நாட்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்வது அல்லது வாங்குவது, பெருகுவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்தியாவில் செல்வச்செழிப்புக்கான அடையாளமாக உள்ள தங்கத்தை வாங்குவதற்குப் பலர் விரும்புகிறார்கள். எனவே, இந்த மூன்றரை நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஒருவர் வீட்டிற்கு தங்கத்தைக் கொண்டு வந்தால், அவர் தனது வாழ்க்கையில் செல்வச்செழிப்பை வரவேற்கிறார் என்று நம்பப்படுகிறது.

இந்த 3.5 நாட்களானது வரவிருக்கின்ற தங்க நாட்களில் முக்கியமானவை என்று நம்பப்படுகிறது!