Published: 01 ஐன 2020

இந்த ஆண்டில் தங்க நகை வாங்குவதற்கான சிறந்த நாட்கள்

Good days to buy gold

தங்கம் எப்போதுமே உங்கள் வாழ்விற்கான ஒரு கூடுதல் மதிப்பு. அது நகையாக இருக்கட்டும், உங்கள் இல்லத்திற்கான அலங்காரப் பொருளாக இருக்கட்டும் அல்லது உங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாக இருக்கட்டும். ஆனால் சில நாட்களில் தங்கம் வாங்குவது மற்ற நாட்களை விட புனிதமாகக் கருதப்படுகிறது.

 • 5 நீண்ட நாட்கள் தீபாவளி பண்டிகையின் முதல் நாளன்று தந்தேராஸ் வருகிறது. இந்த நாளில் பக்தர்கள் இலக்ஷ்மி தேவியையும் பகவான் குபேரனையும் வணங்குகின்றனர். இந்த நன்னாளில் மன்னர் ஹிமாவின் கதை தொடர்புடையது. திருமணமான நான்காவது நாள் இறந்துவிடுவான் என்ற சாபம் மன்னர் ஹிமாவின் மகனுக்கு இருந்தது. அவனைக் காப்பாற்ற, அவனது மனைவி அவனைச் சுற்றி நிறைய தங்கம் வைத்திருந்தாள். இறுதியில் மரணத்தின் கடவுளான எமராஜன் வந்தபோது சுற்றி இருந்த தங்கத்தின் மினுமினுப்பால் அவன் சொக்கிப் போனான். ஹிமாவின் மகனைக் கொல்லவில்லை. எனேவ தந்தேராசின் போது தங்கம் வாங்குவதால் தீய சக்திகள் சென்றுவிடுகின்றன என்று மக்கள் நம்புகின்றனர்.
 • இந்துக்களுக்கும் ஜைனர்களுக்கும் மிகவும் புனிதமான நாள் அக்ஷய திரிதையை இந்த நாளில், பகவான் விஷ்ணு பாண்டவர்களுக்கு அக்ஷய பாத்திரம் என்ற கிண்ணத்தை அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பாத்திரம் அளவில்லா உணவளிக்கும். இந்த நாளில் தங்கம் வாங்குவது முடிவில்லா அதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது.
 • துர்கை அம்மனின் 9 தெய்வ வடிவங்களையும் அங்கீகரிக்கும் பொருட்டுநவராத்திரி கொண்டாடப்படுகிறது. எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் பக்தர்களை துர்கை அம்மன் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் பிரபலமான பண்டிகைகளுள் இதுவும் ஒன்று. அந்த நாளில் தங்க நகை வாங்குவதற்கு மக்கள் கடைக்குச் செல்கின்றனர்.
 • தசரா தீமையை எதிர்த்து நன்மை வெற்றி பெற்றதன் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான், பகவான் இராமர் இராவணனைக் கொன்றார். மகிஷாசுரனை துர்கை அம்மன் வெற்றி கண்டார். மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், மஞ்சள் உலோகம் வாங்குவது விசேஷமாகக் கருதப்படுகிறது.
 • தீபாவளி திருநாளின் மூன்றாவதுநாள் பாலிபிரதிபாடா வருகிறது. இந்த நாளில் பாலி அரசன் ஒரு நாள் பூமிக்கு வரலாம் என்ற ஆசிர்வாதத்தை பகவான் விஷ்ணு வழங்கியுள்ளார் என்று புராணங்களில் கூறப்படுகிறது. பாலி அரசன் செல்வத்தைக் குறிப்பதால் இந்த நாளில் மக்கள் தங்க நகை வாங்குகின்றனர்.
 • இந்துக்களின் சந்திர நாள்காட்டியின்படி, மகாராஷ்டிராவில்குடி படுவா புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் துவக்கத்தில் தங்க நகை போன்ற மதிப்பு மிக்க பொருட்களை வாங்குவது புனிதம் என்று மக்கள் கருதுகிறார்கள்.
 • தென்னிந்திய புத்தாண்டானஉகாடி (மாகராஷ்டிராவின் குடி படுவாவுக்கு இணையானது) கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கொண்டாடப்படும் பெரிய பண்டிகைகளுள் ஒன்று. அப்போது தங்க நகை வாங்குவது புனிதம் என்று கருதப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம் வாங்கினால் நல்ல அதிர்ஷ்டம், வளமை, செல்வம் ஆகியவை வரும் ஆண்டுகளில் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.
 • அறுவடைத் திருநாளான ஓனம் பண்டிகை கேரளாவில் பல்வேறு உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் 10 ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கான அதிர்ஷ்டகரமான நாள் ஓனம். அன்றைய தினம் தங்கம் வாங்கினால் ஒருவரது வாழ்வில் புதிய துவக்கத்தையும் செல்வத்தையும் அது கொண்டு வரும்.
 • தமிழர்களின் அறுவடைத் திருநாளானபொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது. தங்க நகை வாங்குவதற்கு இது மிகவும் விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. இது வளமையையும் பிரகாசமான எதிர்காலத்தையும் அளிக்கிறது.
 • வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளானபைசாகி சீக்கியர்களின் புத்தாண்டு. பஞ்சாப் மாநிலத்தில், தங்கம் அணிந்த பெண்கள் சந்தோஷம் மற்றும் செல்வத்தின் குறியீடாகக் காணப்படுகின்றனர். எனவே பைசாகி அன்று அவர்களது குடும்பங்களில் பெண்களுக்குத் தங்கம் வாங்குகின்றனர்.
 • மகாபாரத இதிகாச காலங்களிலிருந்து தோன்றிய பண்டிகையான கர்வாசௌத் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் ஒரு நாள் பண்டிகை. ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பாகங்களில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு பொதுவாக தங்க நகையை பரிசாக அளிப்பார்கள். அவர்களது காதலின் அழியா சின்னமாக இது வழங்கப்படுகிறது.
 • இந்திய திருமணங்களில் ஒட்டுமொத்த திருமண செலவில் மூன்றில் ஒரு பங்கு தங்கத்திற்காக செலவிடப்படுகிறது. நீங்கள் மணமகளின் குடும்பத்தில் இருந்தாலும் சரி, அல்லது மணமகனின் குடும்பத்தில் இருந்தாலும் ◌சரி. பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் தங்களது குழந்தைகளுக்கு மண நாள் அன்று தங்கத்தை பரிசாக அளிப்பது இலக்ஷமி அம்மனின் ஆசிர்வாதத்தை வழங்குவதற்கான வழியாகக் கருதப்படுகிறது. ஒரு நண்பரோ அல்லது உறவினரோ, திருமணத்தின்போது தங்கம் அளிப்பது அந்தத் தம்பதியினரின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு வளையமாக செயல்படும்.
உங்களது அடுத்த தலைமுறையின் வாழ்வில் தங்கம் உத்தரவாதம் அளிக்கும் செல்வங்களான அன்பு, சந்தோஷம், அதிர்ஷ்டம் ஆகியவை நிறைந்திருக்கட்டும் என்று நம்புவோம்.