Published: 31 ஆக 2017

வளையல்கள் – தங்கத்தின் ஓசை

தங்க நகைகளின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான வடிவமான வளையல்கள் என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாகும். தங்கம், கண்ணாடி, தந்தம் மற்றும் மெழுகு போன்ற பொருட்களைக் கொண்டு வளையல்கள் செய்யப்படுகின்றன. அவை மணிக்கட்டை அலங்கரிக்கின்றன, மேலும் பலவகைப்பட்ட சாதிகள் மற்றும் சமூகங்களில் திருமணமான பெண்களின் அடையாளங்களில் ஒன்றாக வளையல்கள் உள்ளது. அவை, "சோலா-சிருங்காரம்" என்று அழைக்கப்படும் மணமகளின் பதினாறு அலங்காரங்களின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பாரம்பரியமாக, வளையல்களை மாற்றும்பொழுது கூட, இந்தியப் பெண்கள் தங்களுடைய கையை முற்றிலும் வெறுமையாக எப்பொழுதும் தூக்கியதில்லை. புதியதை அணியும் வரை, அவர்கள் எப்போதும் தங்கள் கைகளை ஒரு புனித நூலால் அல்லது சேலையின் சரத்தால் மூடுகிறார்கள்.

பண்டைய இந்தியாவில், வளையல்கள் விற்பனை செய்பவர் மட்டுமே, பெண்களின் கைகளை தொடுவதற்கு அல்லது பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே ஆண் (தந்தை, சகோதரர் மற்றும் கணவர் தவிர) ஆகும். பாரம்பரிய முறையானது பெண்களை அரிதாகவே வீட்டை விட்டு வெளியேற அனுமதித்தது, இதன் காரணமாக வளையல் விற்பனையாளர்கள் தங்களது பொருட்களுடன் அவர்களின் வீட்டிற்கு விஜயம் செய்தார்கள். இந்தக் கட்டுரையில், திருமணங்கள் அல்லது பிற சிறப்பு விழாக்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய தங்க வளையல்களைப் பார்க்கலாம் -

 

பிச்சோடி: இந்த மெல்லிய தங்க வளையல்களானது, கடினத்தன்மைக்காக ஒரு தாமிர அடித்தளத்துடன் பொதுவாக 24 காரட் தங்கத்துடன் கட்டமைக்கப்படுகின்றன. இந்த வளையல்களானது மலர்கள் அல்லது விலங்குகளின் உருவங்கள் அல்லது மதம் சார்ந்த உருவங்கள் ஆகியவற்றுடன் அலங்கரிக்கப்படுகின்றன. மகாராஷ்ட்ராவை சேர்ந்த மணமகள் அல்லது திருமணமான பெண்கள், தங்களின் பச்சை நிற கண்ணாடி வளையல்களுடன் பிச்சோடியை அணிகிறார்கள்.

டோடா என்பது மகாராஷ்டிராவின் மற்றொரு பிரபலமான வளையல் வடிவமாகும். இவை தங்கத்தால் செய்யப்பட்ட தடிமனான வளையல்கள் ஆகும், மேலும் இவற்றில் பல்வேறு வடிவமைப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு மணமகள் அல்லது பணக்கார மகாராஷ்டிர பெண், குறைந்தது இரண்டு டோடாக்களை அணிகிறார்

பச்சேலி: கோக்ரு என்றும் அழைக்கப்படும் பச்சேலி வளையல்கள் என்பது ராஜஸ்தானிய நகைகளில் மிக முக்கியமானவைகளில் ஒன்றாகும். 10 செமீ வரை வெளிப்புற விட்டம் கொண்ட இந்த வளையல்கள், முத்துக்கள் அல்லது வைரங்கள் ஆகியவை கொத்தாக பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான தொடர்ச்சியான துருத்தல்களைக் கொண்டுள்ளன. உலோகத்தில் மீனகாரி வேலைப்பாடுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த வளையல்களானது மிகவும் அழகான நகை வடிவமாகும், ஆனால் இவை பொதுவாக தொடர்ச்சியான வளையல்கள் அல்லது பிரேஸ்லெட்டுக்கு இடையே ஒரு ஜோடியாக அணியப்படுகின்றன. பிச்சோடி போலவே, இந்த வளையல்களை மற்ற கண்ணாடி, மெழுகு அல்லது தந்தம் வளையல்களுடன் சேர்த்து அணியலாம்.

ஹவல்லாகட்டு:மலபார் கடற்கரையின் கரையில் இருந்து பெறப்படும் பவள மணிகள் மற்றும் தங்க மலர்களால் கட்டப்பட்ட ஹவல்லாகட்டு என்பது பவள வளையல்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வளையல்களானது மங்கோலிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது இந்திய-ரஷ்ய வர்த்தகத்தில் இருந்து உருவானதாகக் கருதப்படுகிறது, இதற்காக சிலோன் மற்றும் மத்தியதரைக் கடல் கடற்கரையில் இருந்து பவளப் மணிகள் வாங்கப்படுகின்றன.

சுரி, பாங்டி, நௌகாரி, கங்கன், பஹுஞ்சி, கைரா, பட்ரி, பர்டானா மற்றும் டஸ்ட்பந்த் ஆகியவை வட இந்தியாவில் உள்ள பல்வேறு வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட்டுகள் ஆகியவற்றில் உள்ளடங்கியவை ஆகும்.
 

கடாஸ்: இவை ஆண்கள் மற்றும் பெண்களால் அணியப்படுகிறது. கடாஸ் என்பது திடமான தங்கமாக இருக்கலாம், அல்லது மெழுகால் நிரப்பப்பட்டதாக இருக்கலாம். கடாவின் முனையானது மயில்கள், யானைகள், பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற வடிவமைப்புகள் / வடிவங்களுடன் அலங்கரிக்கப்படுகிறது. இந்தியப் பெண்கள் கடாஸ்-ஐ வளையல்கள் போன்ற மற்ற ஆபரணங்களுடன் சேர்த்து அணிகின்றனர், அதே நேரத்தில் ஆண்கள் ஒரே கடாவை மட்டும் தனியாக அணிகிறார்கள்.

சீக்கிய மதத்தில், எஃகு அல்லது இரும்பு கடாவை அணிந்துகொள்கிறார்கள். பூமியில் கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுமாறு அவை தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டுகின்றன.

வளையல்கள் தவிர, பாஸு, பாஸு-பேண்ட், வன்கி என்று அழைக்கப்படும் கை அணிகளால் பெண்கள் தங்கள் கைகளை அலங்கரிக்கிறார்கள், இவை மணமகளால் அணியப்படுகிறது.

இந்த வகையான ஆபரணங்களானது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது, அவை பெரும்பாலும் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. பளபளப்பான தங்க வளையல்கள் பெண்களின் கைகளை அலங்கரிப்பதைக் காணவும், கேட்கவும் முடியும், மேலும் இவை நாடு முழுவதும் சிறப்பு விழாக்கள் மற்றும் மங்களரகரமான விழாக்களை கொண்டாடும்பொழுது அணியப்படுகின்றன.