Published: 11 செப் 2019

மும்பையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய விநாயகர் சிலைகள்

10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவானது மகாராஷ்ட்ரர்கள் அனைவருக்கும் ஒரு விருந்து ஆகும். ஆண்டின் வேறெந்த சமயத்திலும் இல்லாத மகிழ்ச்சிப் பிரவாகம், பிரகாசம் மற்றும் மங்கலமான உணர்வை இந்த மக்களின் இஷ்ட தெய்வமான விநாயகர் எழுந்தருளும் இந்நாட்களில் காணலாம். உடனிருக்கும் பக்தகோடிகளுடன், உறவினர் மற்றும் நண்பர்கள் புடைச்சூழ ஆட்டம்-பாட்டு-கொண்டாட்டம் என மும்பையே அமர்க்களப்படும்.

மிகவும் அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படும் உலோகமானது பண்டிகைகளுக்கு தனது வர்ணத்தை அளிக்கிறது – மகளிரின் சேலைகளுக்கு உயிரோட்டத்தை அளிக்கிறது, வீட்டில் நாங்கள் அலங்கரிக்கும் விநாயகரையும், நகரமெங்கும் அலங்கரித்திருக்கும் கண்கவர் பந்தல்களை நேரில் கண்டால் மட்டுமே உங்களால் நம்ப முடியும்!

மும்பையில் காண வேண்டிய மற்றும் விநாயகரும் தங்கமும் சேர்ந்த மங்கலகரமான கூட்டு மட்டுமே அருளும் ஆன்மிக சுகத்தை பெற்றிட சிறந்த இடங்களை கீழே பார்ப்போம்

ஜிஎஸ்பி சேவா மண்டல்

ஸ்ரீ குரு கணேஷ் பிரசாத், பூகைலாஷ் நகர் – 400022

கணபதி பப்பா மொர்யா! மங்கள் மூர்த்தி மொர்யா! ஜிஎஸ்பி சேவா விநாயகர் பந்தலில் உள்ள சிலையை மங்களகரமாக்குவது எது? இந்தச் சிலையை அலங்கரிக்கின்ற 68 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள் தான். மும்பைவாசி அனைவருக்கும், இந்த ஆண்டு, நகரத்திலேயே மிகவும் பணக்கார விநாயகர் இவர் தான் என்பதும், ரூ.266 கோடிக்கு இவரது சிலை காப்பீடு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது இந்தத் திருவுருவச்சிலைக்கு 70,000 தடவைகளுக்கு மேலாக பூசை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது! இந்தக் கோலாகலத்தைக் கண்டு ரசிக்க கண்கள் கோடி வேண்டும்!

Credits - GSB Seva Mandal

ஃபோர்ட்சா இச்சாபுர்த்தி கணேஷ்

இச்சாபுர்த்தி கணேஷ் சௌக், 400001

ஃபோர்ட்சா இச்சாபுர்த்தியில் உள்ள கணேஷ் பந்தல் தற்போது 64ஆம் ஆண்டை அடைந்துள்ளது. இன்று, இந்தப் பந்தலில் கம்போடியா முதல் ரோம் வரை, ரோம் முதல் ஜப்பான் வரை என உலக நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன மற்றும் இவை சுற்றுச்சூழலுக்கு 100% இணக்கமுள்ளவை என்ற பெருமையும் கொண்டுள்ளன.

படத்தில், விநாயகரின் தலையை ஒரு கம்பீரமான தங்கக் கிரீடம் அலங்கரிக்கின்றது, இது அவரது முடிவற்ற ஞானம் மற்றும் வல்லமையைக் கொண்டாடுகிறது. இந்துக்களுக்கு தங்கம் மங்களகரமானது என்பதால், பண்டிகைக் காலங்களின் போது, தங்கத்தை கடவுள் சிலைகளுக்கு வழங்குவது ஒரு சம்பிரதாயமாக உள்ளது. அதுவும், மகாராஷ்ட்ராவின் மாபெரும் பண்டிகையான கணபதி, தங்க நகைகளின்றி ஒருபோதும் முழுமையடைவதில்லை. உங்களின் ஆன்மாவைத் தூக்கி நிறுத்துகின்ற அற்புதக் காட்சி இது!

கிர்காவ்ம்சா ராஜா

நிகட்வாரி லேன், கோட்டாசி வாடி, அம்பேவாடி, கிர்காவ், 400004.

Gold, a symbol of triumph and divinity, adorns the 22-foot Ganesha idol at the Girgaumcha Raja pandal. Every part of Ganesha’s body holds relevance and is covered with gold; his two tusks- one broken, his four hands, and his large belly, all symbolising the wisdom and self-awareness for which we all must strive.

கெட்வாடிச்சா ராஜா

கெட்வாடி லேன் எண் 12, 400004

மும்பையின் பிரத்யேக கும்பமேளா என மக்களால் போற்றப்படும், கெட்வாடியின் 13 சந்துகள், கணபதி பண்டிகையின் போது வண்ணங்களும் உற்சாகமும் பீறிடும் இடமாக உள்ளது! 1959 முதல், அங்கு 21 தலை கணபதி, பாம்பின் மீது உட்கார்ந்த நிலையில் பப்பா மற்றும் பல வித்தியாசமான பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முக்கிய காட்சிப் பொருளாக இந்த 12-வது சந்தில் இருப்பது, கெட்வாடிச்சா ராஜா பந்தல் – இதில் தான் 24 அடி உயர கணபதி பெருஞ்சிறப்புடன் காட்சியளிக்கிறார். கணேசரின் வாகனமாக அவருக்குப் பின்னால் இருக்கின்ற எலியானது தங்கத்தால் ஆனது. கணேசரின் கையிலிருக்கும் கயிறும் தங்கத்தால் செய்யப்பட்டதாகும்.

பப்பாவுக்கு மட்டுமேயான நகைகள்

வீட்டிலுள்ள கணபதியை அலங்கரிக்கவோ அல்லது தமது விருப்பத்திற்குரிய கோயிலுக்கு தானமளிக்கவோ தங்க நகைகள் வாங்குபவர்களை நமக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், நகைக்கடைக்காரர்களும் திருப்பணிகளுக்கான கலக்ஷன்ஸை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வீட்டில் உள்ள கணேசா சிலையை அலங்கரிக்க, மிகுநிறைவான தங்க ஆபரணங்களை பி என் கட்கில் & சன்ஸ் வைத்திருக்கிறார்கள். தங்கக் கிரீடம், காது வளையங்கள், தங்க மாலை, கொழுக்கட்டை, முஷாக் போன்றவை, உங்கள் கணேசரை வாழ்க்கையை விட பெரியதாகக் காட்டும்.

பிரபல நகைக்கடைக்காரரான வாமன் ஹரி பீத் அவர்களும் தங்களின் கணேசரை, கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் வளமான தங்க ஆபரணங்களால் அலங்கரித்து விநாயகப் பெருமானிடம் தங்களுக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்துகிறார். தங்கக் கிரீடமும், ஆடம்பரமான தங்க மாலையும் அவர்களின் அன்பிற்குரிய கடவுள் சிலைக்கு முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

பட உதவி - வாமன் ஹரி பீத் ஜூவல்லர்ஸ்

வீட்டுக்கு வரும் பப்பா!

கணபதி கொண்டாட்டம் என்பது நமது பரம்பரை உடைமைகள், பொக்கிஷங்கள் மற்றும் மிக நேர்த்தியான ஆடைகளை தேடியெடுக்க வேண்டிய நேரமாகும். பெண்கள், தமது பாரம்பரிய தங்க வங்கியை வலது மேல் கையில் அணிந்திருப்பார்கள். பாரம்பரியமாக விட்டுச் செல்லப்படும் தங்க நெக்லஸ்கள் மற்றும் காதணிகளுடன் பாரம்பரிய புடவைகள் மற்றும் சமகால பாணியிலான ஃபெஸ்டிவ் ஃப்யூஷன் வியர் களைக் கட்டும்.

பூ அலங்காரங்கள் மற்றும் நாவில் நீர் ஊறச்செய்யும் வீட்டில் செய்த கொழுக்கட்டைகள், நாசிக் தோல் வாத்தியத்தின் கிறங்கடிக்கும் இசை ஆகியவை சேர்ந்த 10 நாட்கள் பண்டிகையான கணபதி, நல்லிணக்கம், நன்னம்பிக்கை மற்றும் நற்பேறு ஆகியவற்றை கொண்டுவருகிறது! இது மட்டும் தான் என்றில்லை, எந்தவொரு இந்திய கொண்டாட்டமும் அழகிய தருணங்களையும் நினைவுகளையும் உருவாக்கிடும் மங்கல தங்கம் இன்றி முழுமையடைவதில்லை.