Published: 18 செப் 2018

இந்தியாவின் ஹூட்டி சுரங்கத்தின் பொன்னான வரலாறு

Ancient mining techniques

முதன் முதலாக 1902ல் நிறுவப்பட்ட ஹூட்டி சுரங்கமானது, உலகிலுள்ள மிகவும் புராதன தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியத்தில் சுமார் 1900 ஆண்டுகள் முன்பாகவே சுரங்க செயல்பாடுகள் நடைபெற்றதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கர்நாடகாவின் ரெய்சூர் மாநிலத்திலுள்ள ஹூட்டி பிராந்தியமானது, தென்னிந்தியாவிலேயே வர்த்தக ரீதியாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாக உள்ளது.

புராதன சுரங்க உத்திகள்

புராதன சுரங்கத்தொழிலாளிகள் 35 மீட்டர் முதல் 190 மீட்டர் ஆழம் வரை தோண்டினர்.

பண்டைய காலத்தில் பாறைகளை உடைப்பதற்கு சூடேற்றுதல் மற்றும் குளிரூட்டுதல் நடைமுறைகளை உள்ளடக்கிய தீமூட்டும் உத்தி பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள்

ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிறகு, அரவை கற்கள், தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக தாதுவை நொறுக்கின.

கனமான தங்கத் துகள்களை, இலேசான அசுத்தங்களிலிருந்து பிரித்தெடுப்பதற்காக, ஆட்டுத்தோல் வழியாக, நொறுக்கப்பட்ட தாது மற்றும் தண்ணீர் கலவையானது செலுத்தப்பட்டது.

தொடர்புடையது:இந்தியாவின் தங்கச் சுரங்கங்கள்

ஹுட்டியின் வரலாற்றில் ஏற்ற இறக்கங்கள்

1880களில் , ஹைதராபாத் (டெக்கான்) கம்பெனியின் சார்பில், இந்தப் பிராந்தியத்தில், ஹைதராபாத் நிஜாம், முறைப்படியாக தங்கச் சுரங்கப் பணிகளுக்கு ஏற்பாடு செய்தார். 1902 மற்றும் 1918 ஆண்டுகளுக்கிடையில் 3.8 லட்சம் டன் தங்கத் தாது தோண்டியெடுக்கப்பட்டது மற்றும் 7.41 டன் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1920ல், நிதி நெருக்கடியால் இந்தச் சுரங்கம் முடப்பட நேர்ந்தது. விவசாயம் மட்டுமே மாற்று வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக இருந்ததால், வேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக, 1937ல் சுரங்கப் பணிகளை மறு ஆய்வு செய்ய திட்டமிட்டார் நிஜாம்.

இப்படியாக, 1947ல் நிஜாம் முயற்சியால், ஹைதராபாத் கோல்டு மைன்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற பெயரில் மீண்டும் சுரங்கப் பணிகளைத் தொடங்கியது.

1956ல் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்ட பிறகு, உரிமையானது, ஹைதராபாத்திடமிருந்து கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டு (அப்போது மைசூர் என்ற பெயரால் அறியப்பட்டது) நிறுவனம், “தி ஹுட்டி கோல்டு மைன்ஸ் கம்பெனி லிமிடெட்” (HGML) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

தொடர்புடையது: தி லார்ஜெஸ்ட் கோல்டு மைன்ஸ் இன் தி வேர்ல்ட்

சமீபத்திய மைல்கற்கள்

2011-12ல் HGML., 5.66 லட்சம் டன் தாதுவை செயல்முறைப்படுத்தி, 2181 கிலோ தங்கத்தைப் பிரித்தெடுத்துள்ளது. சுரங்கமானது தற்பொழுது 2600 அடி ஆழத்திற்குச் சென்றுள்ளது. நாளொன்றுக்கு 1500 டன்கள் தாதுவை பிரித்து, அதிலிருந்து 7-8 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

ஹுட்டி தங்கச் சுரங்கம் 2015ல் அதிகபட்சமாக 1.399 டன்கள் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது. உற்பத்தியை அதிகரிக்க, மாநில அரசால் பல்முனை முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஹுட்டி பிராந்தியத்தில் விரிவான அளவில் தங்கச் சுரங்கத் தொழிலுக்கு நிறைய வாய்ப்பளவு உள்ளது. இது இந்தியாவிலுள்ள தங்கச் சந்தைகளுக்கு பெருமளவு உத்வேகமாக இருக்கும்.