Published: 19 ஐன 2018

அனுதினமும் ஆண்களுக்கான தங்க விருப்பத்தேர்வுகள்

தங்கம் என்னென்ன வடிவங்களில் கிடைக்கிறதோ, ஒன்றுவிடாமல், குறிப்பாக நகை வடிவத்தில், பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வது பலரும் அறிந்தது தான், ஆண்களும் கூட இந்த கண்கவர் அழகால் பயன் பெற முடியும். ஆண்களும் தங்கத்தை எவ்வாறு புதுமையான முறையில் தங்கள் ஆடையலங்காரத்தில் தங்கத்தைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:

 1. தங்க கஃப்லிங்க்ஸ்:

  உங்களின் தோற்றத்திற்கு வசீகரமூட்டவும், செழுமை சேர்க்கவும், உங்களின் ஆடையில் தங்கக் கஃப்லிங்க்ஸை சேர்த்து அணியவும். கஃப்லிங்க்ஸ் பல வகைகளில் கிடைக்கின்றன – வேல் பேக், புல்லட் பேக், ஸ்டட் அல்லது பட்டன் ஸ்டைல், செயின் லிங்க், பால் ரிடர்ன், லாக்கிங் டூயல் ஆக்ஷன் மற்றும் முடிச்சு கஃப்லிங்க்ஸ். இதனை முறைசார் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு அணியலாம்.

 2. தங்க செயின்கள்:

  ஒரு வெள்ளை டி-சர்ட் அல்லது ஒரு அளவெடுத்த தைத்த சூட் உடன் அணியும் போது, ஒரு தங்கச் செயின் ஆனது அதற்கே உரிய ஒரு கிளாஸிக் ஸ்டேட்மெண்ட் ஆகும். நிகழ்ச்சிகளுக்கு ஏற்றார் போல் அணிந்துகொள்ள பல வகைகளில் செயின்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, முறைசாரா நிகழ்ச்சிகளில் அணிவதற்கு பாம்பு போன்று வழுவழுப்பான அல்லது ரோலோ செயின்கள் எந்தவிதமான ஆடைகளுடனும் அணியலாம், அல்லது கனமான நங்கூர அல்லது கோதுமை செயின்களை இனஞ்சார்ந்த ஆடைகளுடன் குடும்ப நிகழ்ச்சிகளில் அணியலாம், நீங்கள் விரும்பி தேர்ந்தெடுக்க பலவகையான பதக்கங்களும் கிடைக்கின்றன, உதாரணமாக, மதச் சின்னங்கள், ஆத்மார்த்தமான வடிவமைப்புகள் அல்லது நேர்த்தியான ஸ்டேட்மெண்ட்டை வெளிப்படுத்தும் எளிமையானவை.

 3. தங்கக் கைக்கடிகாரம்:

  தங்கக் கைக்கடிகாரமானது, கட்டிளங்காளைப் பருவத்தினரின் நெஞ்சில் நிற்கின்ற ஓர் அன்பளிப்பு என்று அறியப்படுகிறது. ஆனால், பணிக்குச் செல்வோரும் கூட, மேற்கத்திய பாணி ஆடைகள் அல்லது இந்திய பாணி ஆடைகளுடன், தங்கத்தின் பழங்காலத்து கவர்ச்சி கூட்டி பலனடையலாம். தங்கக் கைக்கடிகாரங்கள் வழுவழுப்பான தங்கப் பட்டிகள், தங்கப் பிணைப்புகள், கற்கள் மற்றும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு கிடைக்கின்றன. பணி கலந்தாய்வுகள் அல்லது நிர்வாகசபைக் கூட்டம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் போது, ஒரு தங்கக் கைக்கடிகாரமானது, மாபெரும் சாதனைச் சின்னமாகும்.

 4. தங்கக் கொண்டையாணிகள்:

  ஆண்கள் காது குத்திக்கொள்கின்ற கருத்தாக்கமானது மன்னராட்சி நடைபெற்றுவந்த காலம் முதலே வழக்கத்திலிருந்து வருகிறது. தங்கக் கொண்டையாணிகள் மற்றும் வளையங்கள் அன்றாட பேஷனில், உதாரணமாக, அலுவலம், கல்லூரி அல்லது ஒரு சமூக நிகழ்ச்சியில் கச்சிதமாக இருக்கும். பாலிவுட்டின் ஜாம்பவான்களால் பிரபலமாக்கப்பட்டாலும், இவை முறைசாரா ஆடைகளுடனும் அணிவதைப் பார்க்க குளுமையாக இருக்கும்.

 5. தங்க கண்ணாடிகள்:

  1980களில் தங்க வயர் ஃபிரேம் லென்ஸால் ஆன கண்ணாடி உங்களின் கவர்ச்சியை எடுப்பாக்குவதுடன் காலத்தை வென்றவர் போன்ற தோற்றத்தையும் உங்களுக்கு அளித்து சமூக நிகழ்ச்சிகளில் உங்களைப் பற்றிய ஓர் மேலான கருத்தினை உருவாக்கும்.

 6. தங்க பிரேஸ்லெட்கள்:

  ஆண்களின் தோற்றத்திற்கு ஒரு நுண்ணிய பிரகாசத்தைக் கூட்டுவதில் தங்க பிரேஸ்லெட்கள் மிகச்சிறந்த வழியாகும். எளிமையானது, வழுவழுப்பானது (முறைசாரா தோற்றத்துக்கானது), முதல் கனமான செயின் பிரேஸ்லெட்கள் (இனம் சார்ந்த ஆடைகளுக்கானது) வரை, பிரேஸ்லெட்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. நிகழ்ச்சியைப் பொருத்து அணியப்படும் ஆடைகளுக்குப் பொருத்தமாக பிரேஸ்லெட்களை இணை சேர்க்கலாம்.

 7. தங்க மோதிரங்கள்:

  ஒரு மோதிரமானது வெறும் திருமண சின்னம் மட்டுமல்ல; அது ஒரு ஃபேஷன் குறியீடும் ஆகும். தங்க மோதிரங்கள், கிளாஸிக், பேண்ட், அறுகோணம் மற்றும் செவ்வகம் ஆகிய பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு தங்க நிறங்களில், அதாவது சிகப்பிலிருந்து பச்சை, பச்சையிலிருந்து வெள்ளை ஆகிய வகைகளில் கிடைக்கிறது. தங்க மோதிரங்கள், அவற்றின் முக்கியத்துவமான சோதிட இயல்புகளுக்காகவும் பரவலாக அணியப்படுகின்றன

 8. தங்கக் கடா:

  ஒரு மெல்லிய வளையமான கடா என்பது இந்தியாவில், குறிப்பாக சீக்கிய இனத்தவர்களின் கட்டாய அணிகலனாக இருந்துவருகிறது. ஒரு தங்கக் கடா உங்களின் தோற்றத்திற்கு வசீகரத்தைக் கூட்டும். இதனை மேற்கத்திய ஆடைகள் மற்றும் இனம் சார்ந்த ஆடைகள் உடன், ஓர் அணிகலனாக பயன்படுத்தலாம்.

 9. தங்க பொத்தான்கள்:

  எந்தவொரு முறைசார் நிகழ்ச்சிகளுக்காக அணிகின்ற சூட் உடன் தங்க பொத்தான்களை சேர்த்துக் கொள்ளலாம்; பணியிடத்து பார்ட்டி, குடும்ப வைபவம் அல்லது நண்பரின் திருமணம் எதுவென்றாலும் . உங்களின் தோற்றத்தில் தங்க மினுமினுப்பைக் கூட்ட இன்னொரு நேர்த்தியான வழி.

  உங்களின் ஆடை எதுவென்றாலும், அதனை சிறப்பாக்கவும் ஸ்டைலிஷ் ஆக்கவும் தங்கத்தால் முடியும், அத்துடன் ஆண்களின் உடை அலமாரியில் மதிப்புக் கூட்டுவதாகவும் தங்கம் இருக்கிறது.