Published: 07 ஐன 2019

பாதுகாப்பாக தங்கம் வாங்குவது எப்படி?

தங்கம் வாங்கும்போது தரத்தை உறுதிபடுத்திக் கொள்வது கட்டாயமாகும். இந்த உத்தரவாதத்தை பெறுவதற்கு உதவியாக அடுத்த முறை நீங்கள் தங்கம் வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களைப் பற்றிய கையடக்க சரிபார்ப்பு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. BIS ஹால்மார்க் குறியீடுகளை சரி பார்க்கவும்.

    இதில் நான்கு குறியீடுகள் அடங்கியுள்ளது:

    • BIS சின்னம்

      தங்க நகைகள் இந்திய தர மதிப்பீட்டு நிறுவனத்தால் (BIS) அமைக்கப்பட்ட தரம் மற்றும் தூய்மைக்கான வழிகாட்டுதல்களை எதிர்கொள்கிறது என்பதை இது குறிக்கிறது.

    • தங்கத்தின் தூய்மைத் தரம் மற்றும் நேர்த்தி.

      உங்கள் தங்க நகைகளின் தூய்மையை விவரிக்கும் ஒரு குறியீடு.

      22 K 916 என்பது 22 காரட் தங்கத்தை ஒத்திருக்கும்.

      18 K 750 என்பது 18 காரட் தங்கத்தை ஒத்திருக்கும்.

      16 K 85 என்பது 14 காரட் தங்கத்தை ஒத்திருக்கும்.

    • நகைக்கடைக்காரரின் அடையாளக் குறியீடு

      BIS உரிமம் பெற்ற ஒவ்வொரு நகைக்கடைக்காரருக்கும் ஒரு பிரத்தியேக அடையாளம் ஒதுக்கப்படுகிறது. அதனை பிஸ் வலைதளத்திலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    • தரக்குறியீட்டு மையத்தின் குறியீடு

      பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மதிப்பீடு மற்றும் குறியீட்டு மையத்திற்கும் ( AHC) ஒரு பிரத்தியேக குறியீடு ஒதுக்கப்படுகிறது. அதை நீங்கள் BIS வலைதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

  2. சரியான விலையை கணக்கிடுங்கள்

    தங்க நகையின் இறுதி விலை காரணிகளின் வரிசையை பொறுத்து ஒரு நகைக்கடைக்காரருக்கும் மற்றொரு கடைக்காரருக்கும் வேறுபடும்.

    எனவே ஒரு கொள்முதலை செய்வதற்கு முன்பு பல நகைக்கடைக்காரர்களிடம் விலையை சரிபார்க்க வேண்டியது முக்கியமானதாகும்.

    இருந்தாலும் மை கோல்டு டாட்.காமில் தங்கத்தின் உண்மை விலை நிலவரத்தை சரி பார்ப்பதன் மூலம் விலைமதிப்பீட்டை நீங்கள் பெறலாம்.

  3. உங்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    நகையின் எடையைப் பொறுத்து அதன் செய்கூலி கட்டணங்களை கணக்கிடுங்கள்.

    வழக்கமாக இது தங்கத்தின் விலையில் 5% மற்றும் 25% க்கு இடையே மாறுபடுகிறது. இருந்தாலும் நகைக்கடைக்காரரிடம் பேரம் பேசி வாங்கலாம்.

  4. கேரட்டின் மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள்.

    கேரட்டின் அளவு அதிகரித்தால் தங்கத்தின் தூய்மையும் அதிகரிக்கும்.

    24 கேரட் என்பது தூய தங்கமாகும். 22 கேரட் மற்றும் 18 கேரட் தங்கமானது தங்கத்தின் வலிமை மற்றும் வாழ்நாளை அதிகரிக்க தங்கத்துடன் உலோகக் கலப்பு சேர்த்து செய்யப்படுகிறது.

  5. உண்மையான எடையை சரிபாருங்கள்.

    விலையை கணக்கிட நகைக்கடைக்காரர் தங்கத்தின் எடையை மட்டுமே கருத்தில் கொள்கிறார். நகையில் பதிக்கப்பட்ட கற்களின் எடையை அல்ல என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    சில நேரங்களில் வித்தியாசமான உலோகத்தை பயன்படுத்தி பற்றவைப்பு செய்யப்படுகிறது.

    எனவே பற்றவைப்புக்கு பயன்படுத்திய உலோகத்தின் எடையும் விலையும் தங்கத்தின் விலையிலிருந்து விலக்கப்பட்டதா என்று நகைக்கடைக்காரரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  6. திரும்பிக் கொடுத்தல், பணத்தைத் திரும்ப பெறுதல், திரும்ப வாங்கிக் கொள்ளுதல் ஆகிய கொள்கைகளை சரிபார்க்கவும்.

    பின்னாளில் நீங்கள் உங்கள் நகையை விற்கவோ / மறுசுழற்சி செய்யவோ முடிவு செய்தால் அது உங்கள் கைக்குதவியாக இருக்கும்.

    நீங்கள் உங்கள் தங்கத்தை விற்க முடிவு செய்யும்போது ஆபரண கற்களைத் தவிர்த்து தங்கத்தின் எடை கருத்தில் கொள்ளப்படும்.

    செய்கூலி மற்றும் சேதாரம் கழிக்கப்பட்ட பணத்தை நீங்கள் பெறுவீர்கள். வெவ்வேறு நகைக்கடைகளில் வெவ்வேறு திரும்ப வாங்கிக் கொள்ளும் விலைகள் உள்ளன. கொள்முதல் செய்வதற்கு முன் இதை கேட்டு அறிந்துள்ளீர்களா என உறுதி செய்து கொள்ளவும்.

    ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட தங்கம் ஹால்மார்க் முத்திரை இடப்படாத தங்கத்தோடு ஒப்பிடும் போது குறைவான கழிவுகளை ஈர்க்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

  7. முக்கிய தகவல்கள் அடங்கிய முறையான விலைப்பட்டியலை கேட்கவும்.

    ஒரு கிராம் தங்கத்தின் விலை , தங்கத்தின் மொத்த எடை, செய்கூலி, பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி போன்ற விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.