Published: 12 செப் 2017

தங்கத்தின் வரலாற்றில் ஒரு சில மைல்கற்கள்

A few milestones in the history of Gold

தங்கத்தின் மீதான மனிதகுலத்தின் ஆர்வம் என்பது பதிவுசெய்யப்பட்ட வரலாறு போலவே பழையது ஆகும். மனிதன் இந்த கவர்ச்சிகரமான உலோகத்தை முதன்முதலாக எப்பொழுது கண்டுபிடித்தான் என்று நமக்குத் தெரியாத நிலையில், கி.மு. 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மவியல் குகைகளில் தங்கத் துகள்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். நமது முன்னோர்கள் தங்கத்தை சேகரித்து வந்தார்களா அல்லது தங்கம் அவர்களிடம் இருந்ததால் அவர்கள் குகைகளில் தங்கி இருந்தார்களா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

நைல் நதி நாடான பண்டைய எகிப்தில், தங்கத்தை மனிதன் முதலில் பயன்படுத்தியதற்கான உறுதிச் சான்றுகள் கிடைத்தன. எகிப்திய சாம்ராஜ்ய அரசர்கள் மற்றும் குருமார்கள் தங்கள் கல்லறைகளிலும் கோயில்களிலும் தங்கத்தைப் பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். மனித குல வரலாற்றில், இந்த மயக்கும் உலோகத்தின் மீது தற்போதைய மக்கள் கொண்டுள்ள அதே ஆசையை, பழங்காலத்தைச் சேர்ந்த பயன்பாட்டாளர்களும் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. எகிப்தியர்கள் முதன்முதலாக தங்கத்திற்கு ஈடாக நாணய பரிமாற்ற முறையை உருவாக்கினர், மேலும், அந்தக் காலத்தில், சமுதாயத்தில் அதன் மதிப்பை உறுதிப்படுத்தினர். அந்தக் காலத்தில், ஒரு துண்டு தங்கம் கொடுத்தால் உங்களுக்கு 2.5 மடங்கு வெள்ளி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எகிப்தியர்களுக்குப் பிறகு, கிரேக்கம் என்ற மற்றொரு பெரிய நாகரிகமும் தங்கத்தைப் பரவலாகப் பயன்படுத்தியது. அந்நாகரிகத்தைப் பின்பற்றிய கிரேக்கர்கள், தங்கத்தை சமூக அந்தஸ்தின் குறியீடாகக் கருதினர், மற்றும் கடவுள்கள் மற்றும் பேய்கள் மத்தியில் பெருமைமிக்க ஒரு வடிவமாகவும் கருதினர். எகிப்தியர் போலவே, கிரேக்கர்களும் தங்கத்தை சமூக அந்தஸ்தின் குறியீடாகவும், செல்வத்தின் அடையாளம் மற்றும் பணமாக கருதினர். இருப்பினும், பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஒலிம்பிக்கில் வென்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களை அளிக்கும் ஒலிம்பிக் பாரம்பரியமானது நவீன கால ஒலிம்பிக்குக்கு முன்னர் தொடங்கப்படவில்லை, இது கிரேக்க பாரம்பரியத்திற்கு சிறிது இழுக்காக உள்ளது.

பல ஆண்டுகளாக, தங்கம் என்பது செல்வத்தின் அடையாளமாகவும், உலகின் பல பகுதிகளில் பண்டமாற்று நாணயமாகவும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நகைகளாகவும் பிரபலமாகி வருகிறது. 18ஆம் நூற்றாண்டில், தங்கமானது உலகப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக தன்னை நிலைநாட்டியுள்ளது. 1792ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் என்பது தங்கத்தின் நவீன வரலாற்றை நிரந்தரமாக மாற்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அமெரிக்க டாலர் அடிப்படையில் தங்கத்திற்கு ஒரு நிலையான விலையை நிர்ணயித்து, நாணயம் மற்றும் பணம் சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றியது. ஸ்பெயினின் ரியல் போலவே (ஸ்பானிஷ் பேரரசின் ஒரு வெள்ளி நாணயம்) போலவே தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் ஆகியவை சட்டப்பூர்வமான ஒன்றாக ஆனது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து, 1873ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிந்த சிறிது காலத்திற்குள், வெள்ளி என்பது அதிகாரப்பூர்வ நாணயம் என்பதில் இருந்து அகற்றப்பட்டது, மேலும், காகிதப் பணம் என்பது முதல் முறையாக அமெரிக்காவில் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வமான பணமாக ஆனது.

இரண்டு உலகப் போர்கள் முடிந்த உடன், உலகப் பொருளாதாரம் சிக்கல்களில் இருந்தது. தாக்குதல்களாலும், குண்டுவீச்சுகளாலும் அழிக்கப்பட்ட முழு நகரங்களையும் மீண்டும் கட்டியெழுப்பும் கடுமையான பணிகளால் பெரும்பாலான முக்கிய நாடுகள் திணறின. எனினும், அமெரிக்காவுக்கு இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. உலகப் போர்களின் காரணமாக அவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை, மேலும் உலகின் வலுவான பொருளாதாரமாக உருவானார்கள். அந்த நேரத்தில்தான், அமெரிக்கா தங்கத்தின் தரநிலையை உருவாக்கி, அமெரிக்க டாலரை ஓர் உலகளாவிய நாணயமாக ஆக்கியது.

நம் உலகத்தை வடிவமைப்பதில் தங்கம் பெரும் பங்கைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு உயிரற்ற உலோகமானது பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது இயற்கையை மீறியதாக இருந்துள்ளது – இந்த நிலையே இனிமேலும் நீடிக்கும்.