Published: 04 ஆக 2017

இரக்க்ஷா பந்தனுக்கு பரிசளிக்கும் கருத்துக்கள்

Raksha Bandhan Gift Ideas

ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான பந்தம என்றும் நிலையானது. முக்கியத்துவம் அற்ற விஷயங்களில் ஏற்படும் அன்றாட சச்சரவுகளில் இருந்து விடுபட்டு, அவர்கள் ஒருவர் மற்றவருக்கான அன்பை வெளிப்படுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட சில நாட்கள் உண்டு. பிறந்த நாட்கள், குடும்ப விழாக்கள் உட்பட பல்வேறு தருணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று இரக்க்ஷா பந்தன்.

 • தங்க சேகரிப்புகள்: உங்களது சகோதரரையோ அல்லது சகோதரியையோ நீங்கள் உண்மையிலேயே தெரிந்து வைத்துள்ளீர்கள் என்று உணர்த்துவதற்கும் அவர்கள் குறித்து உண்மையில் கவலைப்படுவதற்கும் இங்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அவர்கள் உண்மையிலேயே விரும்பும் ஒன்றை, அவர்கள் விரும்பிய ஒன்றை அவர்கள் விரும்பக் கூடிய ஒன்றை வாங்கிக் கொடுங்கள். தங்க முலாம் பூசப்பட்ட விளையட்டுக் காரை ஃபார்முலா ஒன் ரசிகருக்கு வாங்கிக் கொடுக்கலாம். அவர்களது பிரியமான விளையாட்டின் டிராஃபியின் தங்க முலாம் பூசப்பட்ட மாதிரியை அளிக்கலாம். தங்க முலாம் பூசப்பட்ட சமையல் பொருட்கள், தங்க பேனா ஆகிவற்றை அளித்தால், அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவற்றை தங்களுடன் நெருக்கமாக எடுத்துச் செல்வார்கள்.

  Gold Car Miniatures      

  Golden Spoon Set

  Gold Tea Set

  Gold Pen

 • எதிர்காலத்துக்கான தங்கம்: நீங்கள் உங்களது உடன்பிறப்பை விட மூத்தவரோ அல்லது இளைமையானவரோ, அவர்களது நலன் குறித்து எப்போதுமே அக்கறை கொண்டுள்ளீர்கள். அதன் மாபெரும் அங்கம் நிதி சுதந்திரம். அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று உறுதி செய்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அவர்களது எதிர்காலத்திற்கு பாதுகாப்பை உருவாக்கலாம். அவர்களது பெயரில் ஒரு சிறிய முதலீட்டை துவங்கினால், நீங்கள் அவர்களுக்காக எப்போதும் இருப்பீர்கள் என்பதை உணர்த்தும். உங்களுக்கு முதலீட்டு உலகில் போதுமான அறிவு இல்லை என்றால், கவலையை விடுங்கள். சில எளிய வழிகளில் தற்போது தங்கத்தை ஆன்லைன் மூலம் பெற முடியும். தங்கத்தை ஆன்லைன் மூலம் முதலீடு செய்வதற்கான வழி முறை இதோ. . Here’s a guide to investing in gold online.

இந்திய தங்க நாணயமானது தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் தேசிய பெருமை கொண்ட பொருளை பரிசாக வழங்குவதற்கும் ஏற்றது. இந்திய தங்க நாணயம் 24 காரட் தூய்மை கொண்டது. அதன் துல்லியம் 999. இது பல்வேறு அடுக்குகளில் கிடைக்கும். இதனை பல்வேறு பட்டியலிடப்பட்ட கடைகளில் இருந்து பெறலாம். இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும். Click here to know more.

Indian Gold Coin

 • தங்க நகை: உங்களுக்குப் பிரியமானவருக்கு தங்க நகையை பரிசளிப்பது உங்களது நேசத்தை உணர்த்த மிகவும் தனித்துவமான வழியாகும். நீங்கள் பதக்கம் பதித்த நெக்லெசையோ, அல்லது தங்க வளையல்களையோ அல்லது தங்க மோதிரங்களையோ உங்கள் தங்கைக்கு பரிசாக வழங்கலாம். அதனை அவர் எப்போதும் பாதுகாத்து அலங்காரமாக வைத்துக் கொள்வார். இந்த பாரம்பரிய, மரபு சார் மாதிரிகளையும் தாண்டி இந்த மரபு சாரா நகை மாதிரிகளையும்unconventional jewellery options for everyday wear பரிசீலனை செய்யவும். இவை அன்றாடம் அணிவதற்கு ஏற்றவை. என்றும் நிலைத்திருக்கும் உங்கள் பந்தத்தை உணர்த்த உங்கள் சகோதரருக்கு நீங்கள் மெல்லிய தங்க சங்கிலியை பரிசளியுங்கள். ஆண்களுக்கான அன்றாட நகை மாதிரிகளிலிருந்துeveryday gold jewellery options for men, நீங்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். அல்லது அவர்களுக்கான சட்டை கொக்கிகளையும் டை கொக்கிகளையும் சேர்க்கலாம். இது மிகவும் குறைவான மினுமினுப்பையும் மிடுக்கான உடைகளுக்கான நவீனத்தையும் அளிக்கும். கார்ப்பரேட் விழாக்களுக்கு செல்வதற்கு உதவும். Stylish Gold Ring

  Classic Gold Earrings

  DesignerGold Bangles

  Timeless Gold Necklace

 • தங்க துணை பொருட்கள்: எல்லா வயதினருக்கும் ஏற்றது தங்க துணை பொருட்கள். அவர்களுக்கு ஏற்ற அத்தகைய கண்கவரும் மாதிரி தங்க கைக்கடிகாரம். தங்க பிரேஸ்லெட்டானது எளிமையாக இருந்தாலும் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். அர்த்தமுள்ள குறிக்கோள்களுடன் தங்க ப்ரூச்சுகள் அளிப்பது சிறந்த பரிசாக இருக்கும். ஒரு ஃபேன்சியான தங்க பிடிப்பு அல்லது பர்சு உங்களது சகோதரியின் உடைக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும்.

  Personalised Golden Clutch

  Gift Gold Bracelet

  Personalised Gold Pin

  Elegant Gold Watch

முழுக்க முழுக்க அன்பும் எண்ணிடற்கரிய பரிசுகளும் நிறைந்த ரக்ஷாபந்தன் உங்களுக்கு நிறைவை அளிக்கும் என்ற நம்பிக்கை இங்குள்ளது.