Published: 05 செப் 2017

30களில் பெண்கள் அணிவதற்கு ஏற்ற தங்க நகைகள்

பல்வேறு பெண்களுக்கு 30கள் அற்புதமான தசாண்டு. நாம் நம்மை இறுதியாக ஏற்றுக்கொண்டு நமது வாழ்க்கைக்கான பொறுப்பை சுமக்கத் துவங்கும் ஆண்டு. நம்மில் பலருக்கு வளர்ந்த பருவத்தின் உண்மையான துவக்கம் அது. இந்த நேரத்தில், நாம் ஒரு நிலையான வேலையை அனுபவிக்கத் துவங்கியிருப்போம். ஆசிர்வாதம் பெற்ற திருமண வாழ்க்கை அமைந்திருக்கும். ஒரு குடும்பத்தை துவங்குவது பற்றி நம்மில் பலர் சிந்தித்திருப்போம்.

நாம் நம்மைப் பற்றி நன்றாக சிந்திக்கும் அற்புதமான தசாண்டு அது. நம்முடைய ஆளுமையின் விஸ்தீரணமாக நமது தங்க நகைகள் விளங்கும். மிகவும் சொகுசான பாரம்பரிய வடிவங்களுடன் உங்களது தோற்றத்துடன் நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம். நீங்கள் எவ்வளவு வளர்ந்திருக்கிறீர்கள் என்று அவை காட்டும்.

உங்களது 30களில் தங்கம் உங்களை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பதற்கான சில வழிகள் இதோ.

உங்களது பணியிடத்தில் உங்கள் நகை உங்களுக்காக பேசட்டும்.

இந்திய பாரம்பரிய உடைகளுடன் செல்லும்போது இந்த வடிவங்கள் மகத்தானதாக இருக்கும். ஜிமிக்கிகள்( jhumkas) போன்ற சில தேர்வுகளுடன் அணியும்போது நளிமான தோற்றத்தை அளிக்கும். ஒரு கார்ப்பரேட் தோற்றத்திற்கு மிகவும் கனமான தோற்றத்தை அளிக்கும்.

Courtesy: polyvore.com

மேற்கத்திய உடைகளுடன் நீங்கள் செல்ல விரும்பினால், இந்த ரோஸ் நிற தங்க வடிவங்கள் உங்களை கீழே செலுத்தாது.

Courtesy: amazon.com

ஒரு நண்பர்களின் சந்திப்பிற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா, அரை கேசுவல் உடையுடன், அதாவது ஜீன்ஸ் மற்றும் குர்த்தி போன்ற, வசதியான ஆனால் நவநாகரிகமான ஆடையுடன் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட வடிவங்கள் கொண்ட நகைகளை அணியலாம். நீங்கள் அடுத்த முறை உங்களது அலங்கார ஆடையை அணியும்போது அவற்றுடன் இணையத்தக்க சில வடிவங்கள் இதோ.

Courtesy: bluestone.com

தங்கம் என்று வரும்போது தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு நிறங்கள் உள்ளன. ரோஸ், பச்சை, மஞ்சள், மற்றும் வெள்ளை என்று பல்வேறு நிறங்களில் பல்வேறு வடிவங்கள் உள்ளன. உங்கள் ஆளுமைக்கு ஏற்ற நிறத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பல்வேறு சமூக நிகழ்வுகளிலும் திருமண விழாக்களிலும்,குடும்ப விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றிலும் உங்களை இந்த வடிவங்கள் தனித்துக்காட்டும்

Courtesy: bluestone.com
Courtesy: grtjewels.com
Courtesy: interclodesigns.com
Courtesy: interclodesigns
Courtesy: grtjewels.com

நமது வாழ்வின் மையப் புள்ளியை எடுத்துக்கொள்வது நமது 30கள்தான். பளிச்சென்ற வெளிச்சத்தை உணர இது உதவும். குடும்பம், சமூக வளையங்கள், ஒட்டுமொத்த உறவுகள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள இது உதவும். பளபளப்பாக இருப்பதற்கு தங்கத்தை தவிர வேறென்ன சிறந்த வழி உள்ளது??