Published: 27 செப் 2017

விலங்குகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட தங்க நகை வடிவமைப்புகள்

Animal Inspired Gold Ornaments Designs

விலங்குகள் உலகம் என்பது நகை வடிவமைப்பாளர்களுக்கு எப்போதும் ஒரு உத்வேகம் அளிக்கும் வளமான ஆதாரமாக உள்ளது. வரலாறு முழுவதும், சிறுத்தைகள், புலிகள் அல்லது சிங்கங்கள் போன்ற சில விலங்குகளானது தனித்துவமான நகைகளின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் மாயாஜாலம் கொண்ட சில நகைகளைப் பார்க்கலாம்.

குனுஸ்: இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதியில் இருந்து பண்டைய இந்தியாவின் பிரபலமான நகைகளில் ஒன்று குனுஸ் ஆகும். குனுஸ் என்பது இரண்டு முனைகளில் ஒரு பாம்பு அல்லது சிங்கத்தின் தலைகள் கொண்ட திடமான தங்கத்தினால் ஆன ஒரு தடிமனான வளையல் ஆகும். இந்த கலைவடிவம் அழகானதாக இருக்கிறது, இதில் பல்வேறு வகையான விலங்குகள் வளையல்களில் செதுக்கப்பட்டுள்ளன.

லோகபாரோ என்பது புறாக்களால் ஈர்க்கப்பட்ட, அசாமின் புகழ் பெற்ற பழங்கால நகைகள் ஆகும். இது இரண்டு புறாக்கள் வெவ்வேறு திசைகளை பார்த்துக்கொண்டிருக்கும் வகையிலான ஒரு பதக்கம் ஆகும், அவை தங்க மணிகளோடு இணைக்கப்பட்டுருக்கின்றன. இந்த ஆபரணமானது "பாட் சன்" என்றும் அழைக்கப்படுகிறது. பல சரங்களால் ஆன பல்வேறு நிற மணிகளால் உருவாக்கப்பட்ட ஒரு தடிமனான நெக்லஸில் புறாக்கள் தொங்கிக் கொண்டிருக்கும், இது பெரிய தங்க மணிகளால் கோர்க்கப்பட்டிருக்கிறது.

கருப்பு சிங்கம் நெக்லஸ் என்பது சமீபத்திய காலத்தில் பெருமளவில் புகழ் பெற்றுள்ளது. இது ஆண்கள் நகைகள் என்ற பிரிவின் கீழ் பொதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள தனித்துவமான ஒரு நெக்லஸ் வேலைப்பாடுக்கான ஒரு அரிய உதாரணம் ஆகும். ஒரு தங்க நெக்லஸ் மீது ஒரு கருப்பு சிங்கம் பொறிக்கப்படுதல் என்பது படைப்புத்திறனுக்கு ஓர் உண்மையான உதாரணமாக காட்டப்படுகிறது.

தங்கத் தாழ் பிரேஸ்லெட்டுகள் வழக்கமாக 20 காரட் தங்கத்தில் வருகிறது, மேலும் அதன் இரு முனைகளிலும் யானையின் முகம் உள்ளது. ஒரிசா மாநிலத்தில் இந்த வகை நகைகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தங்க கடா என்பது விலங்குகளில் பல்வேறு அம்சத்தைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்றிணைந்த யானைத் தந்தங்கள், முதலைகள் அல்லது மயில்கள் ஆகியவற்றின் வடிவத்தைக் கொண்டுள்ளது.

நவீன வடிவமைப்பாளர்கள் தங்கள் வடிவமைப்பில் விலங்குகளை பயன்படுத்துகின்றனர். தங்க சிங்க பிரேஸ்லெட் உடன் கருப்பு எரிமலைக் கற்கள் என்பது சமீபத்திய நாகரிகமாக மாறிவிட்டது. ஒவ்வொரு கல்லிலும் 10 மிமீ அளவிலான உயர் தரமான எரிமலைக் கற்களைப் பயன்படுத்தி அந்த ஆபரணம் வடிவமைக்கப்பட்டது.

பழங்காலத்திய தங்க சிங்க கஃப்லிங்க் என்பது ஆண்களுக்கான நேர்த்தியான கலைத்தன்மைக்கான ஒரு அற்புதமான உதாரணம் ஆகும், மேலும் அவை இன்றைய காலகட்டத்திலும்கூட வழக்கத்தில் உள்ளன.

உலகப் புகழ்பெற்ற இந்திய நகைகளாக அமரபள்ளியில் அழகிய தங்க வளையல்கள் வடிவமைக்கப்படுகின்றன, அவை மையமாக கர்ஜிக்கும் இரட்டை சிங்கங்களின் ஆக்ரோஷமான தலைகளைக் கொண்டிருக்கும். நாகாஷி-வேலைப்பாடு கொண்ட வளையல்கள் என்பது மிகவும் விரும்பப்படுபவை ஆகும், மேலும் அவை உலகம் முழுவதுமுள்ள பிரபலங்களின் விருப்பமானவையாக உள்ளது.

இயற்கையான உலகின் அழகைப் பின்பற்ற விரும்பும் ஆசையே, ஆரம்பகால நாகரிகத்திலிருந்து இப்பொழுது வரை நகைகளை வடிவமைக்க உந்துசக்தியாக இருக்கிறது, இவை வடிவமைப்பாளர்களிடம் இப்பொழுது வரை தாக்கம் செலுத்துகிறது.