Published: 08 செப் 2017

50களில் உள்ள பெண்களுக்கான தங்க வடிவங்கள்

jewellery For 50 Year Old Indian Woman

நமது 50கள் சொகுசான வாழ்கை வாழும் தசாண்டுகள். நமக்கே நம்முடன் எண்ணிப்பார்க்க முடியாத அளவு வசதி கிடைக்கும். நாம் நமது வழிகளில் நிலைகொண்டிருப்போம். நமது நவநாகரிக உணர்வு மேலோங்கி இருக்கும். ஏற்றுக்கொள்வதற்கான எளிய வழிகள் நமக்குக் கிடைக்கும்.

உங்களது அரை நூற்றாண்டை கொண்டாடுவதற்கென்று சில தங்க நகைகள் உள்ளன. அடுத்த ஆணடிற்குள் கம்பீரமாக கால் எடுத்து வைக்கலாம்.

நீங்கள் ஒரு வாரத்தில் சில நாட்கள் பணிபுரியப் போகிறீர்களா, அல்லது ஓர் அண்க்வீட்டு விழாவிற்கு செல்ல உள்ளீர்களா அல்லது முன்னதாகவே நன்கு சம்பாதிக்கக்கூடிய ஓய்வு வாழ்கையை அனுபவிக்கப் போகிறீர்களா, சிறிதளவு தங்கம் உங்களை நவநாகரிகமாகவும் திருப்தியுடன் காட்டும். உங்களது 50களில் இதனைப் பெறுவது எளியது, மிகவும் குறைத்து மதிப்பிடக்கூடியது என்பதே விதி எண். அடிப்படைகளுக்குத் திரும்புங்கள். எளிய தங்க பாண்டு, சிறிய தங்க காதணிகள் உங்கள் புடவையின் சலசலப்பிற்கு அழகூட்டும். அல்லது நுண்ணிய வேலைப்பாடு கொண்ட தங்க நெக்லேஸ் பல ஆண்டுகள் உங்களுக்கு துணையாக இருக்கும்

இந்த நேரத்தில் பல புதிய துவக்கங்கள் உருவாகும். நீங்கள் விரைவில் பாட்டியாகக்கூடும். உங்களது பேரக்குழந்தை பிறப்பது, அவர் கல்லூரி நாட்களுக்கு நுழைவது, அல்லது அவர் பட்டம் பெறும் நாள் போன்ற சிறப்பு தருணங்களில் குடும்ப தலைவராக நீங்கள் முன்னிருந்து வழி நடத்தலாம். நீங்கள் சம்பாதித்த மரியாதையின் குறியீடு தங்கம். நீங்கள் அனுபவித்த எல்லாவற்றையும் பற்றி கதை சொல்வதற்கு உங்களுக்கு ஏதாவது தேவைப்படும். சில விஷயங்கள் அழகானவை, தைரியமானவை மற்றும் தங்கத்தால் அழகூட்டப்படுபவை.

நீங்கள் உங்கள் நண்பர்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிறந்த நாளிலோ அல்லது ஒரு பணி ஓய்வு விழாவிலோ சந்தித்தால், அல்லது இளமையாக தோற்றம் அளித்தால், நீங்கள் உங்கள் நகைப்பெட்டியை தேடி நல்லவற்றை தேடலாம். திறந்த வேலைப்பாடு கொண்ட தங்கம் உங்கள் நகைகளை எடுத்துக்காட்டும். நீண்ட சங்கிலிகள் அணிவதால் உங்கள் கழுத்து நீண்டு காணப்படலாம். அடிப்படை தங்க காதனிகளை பெரிய கனமான நெக்லஸ்களுடன் அணிந்து கம்பீரமாக நீங்கள் காட்சி அளிக்கலாம். நளினமான தங்க பாண்டையும் அழகிய ப்ரேஸ்லெட்டையும் அணிந்துகொள்ளுங்கள். அந்த நகை உங்களுக்கானது. தங்க சன்பாலிக்களையோ (chandbalis) அல்லது காது வளையங்களையோ நீங்கள் அணிந்துகொள்ளலாம்.

உங்களது சிகை அலங்கார நகைகளை நளினமாகவும் கம்பீரமாகவும் நீங்கள் வைத்திருக்கக்கூடிய தருணம் இது. அடுத்த நிகழ்ச்சியிலோ அல்லது குடும்ப நிகழ்விலோ, உங்களது உடைகேற்ற அழகிய, நுண்ணிய வேலைப்பாடு கொண்ட நன்கு வடிவமைக்கப்பட்ட நகைகளை அணியுங்கள். உங்கள் வயது மற்றும் குடும்ப கௌரவத்தை அது பறைசாற்றும்.

பரிசளிக்கவும் நன்றாக உடை அணிந்து கொள்ளவும் பல்வேறு சந்தர்ப்பங்களை நமது 50கள் வழங்கும். எல்லாவற்றையும் விட நமது கௌரவங்களில் திளைத்திருக்கும் அற்புதத்தை அவை வழங்கும். கடின உழைப்பின் பலன்களை நீங்கள் அனுபவிக்கலாம். அந்த நேரத்தில் உங்கள் 50களை வரவேற்க அழகிய தங்க நகையுடன் உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அது அவசியம் தேவை.