Published: 14 ஜூலை 2017

தங்கத்தை பணமாக்குதல் கணக்கைத் துவங்குவதன் நன்மைகள்

Benefits of opening a Gold Monetisation Account
தங்கத்தை பணமாக்குதல் திட்டம் ஏன் ஏற்படுத்தப்பட்டது?

தங்கம் விலை உயர்ந்தால் லாக்கரில் உள்ள தங்கத்தின் மதிப்பும் உயர்கிறது, ஆனால் அது உங்களுக்கு ஒரு வழக்கமான வட்டி அல்லது இலாபப் பங்கீட்டை வழங்காது. மாறாக, நீங்கள் அதற்கான பராமரிப்புக் கட்டணங்களை (வங்கி லாக்கர் கட்டணம்) செலுத்த வேண்டும். பணமாக்குதல் திட்டம் உங்கள் தங்கத்தின் மீதான சில வழக்கமான வட்டிகளை ஈட்டித் தரும் மற்றும் பராமரிப்பு செலவுகளையும் சேமித்துத் தரும். தங்க சேமிப்புக் கணக்கு நீங்கள் டெபாசிட் செய்யும் தங்கத்திற்கான வட்டியையும் ஈட்டித் தரும். உங்கள் தங்கத்தை நகைகள், நாணயங்கள் அல்லது கட்டிகள் என எந்த வடிவத்திலும் நீங்கள் டெபாசிட் செய்யலாம். அதன்பின் இந்த தங்கம் அதன் எடையின் அடிப்படையில் வட்டியை ஈட்டித் தரும் மற்றும் அதன் மதிப்பும் உயரும். உங்கள் தங்கத்தை நீங்கள் 995 தூய தங்கத்திற்கு சமமான தங்கமாக அல்லது நீங்கள் விரும்பினால் அதற்கு சமமான இந்திய ரூபாயாக நீங்கள் திரும்பப் பெறலாம் (இந்த விருப்பம் டெபாசிட் செய்யும் நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்).
தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தில் டெபாசிட் செய்வதில் பல நன்மைகள் உள்ளன

  • தங்கத்தை பணமாக்குதல் திட்டம் உங்கள் லாக்கரில் உள்ள உங்கள் தங்க நகைகளுக்கு வட்டியை ஈட்டித் தருகிறது. உடைந்த நகைகள் அல்லது நீங்கள் அணிய விரும்பாத நகைகள் தங்கத்துக்கான வட்டியை உங்களுக்கு ஈட்டித் தரும்.  
  • நாணயங்கள் மற்றும் கட்டிகள் அதற்கான மதிப்பு உயர்வு தவிர வட்டியையும் ஈட்டித் தரும்.  
  • உங்கள் தங்கமும் வங்கியில் பாதுகாப்பாக பராமரிக்கப்படும். 
  • தங்கமாகவோ அல்லது ரூபாயாகவோ உங்கள் தங்கத்தை மீட்டெடுக்கலாம் எனவே நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு மேலும் சம்பாதிக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.  
  • இதில் கிடைக்கும் வருமானங்களுக்கு மூலதன ஆதாய வரி, சொத்து வரி மற்றும் வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டெபாசிட் செய்த தங்கத்தின் மதிப்பில் ஏற்படும் உயர்வுகளுக்கு அல்லது அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு எந்த மூலதன ஆதாய வரியும் கிடையாது.


தொடர்புடைய காலங்கள்

நியமிக்கப்பட்ட வங்கிகள் குறுகிய கால (1-3 ஆண்டுகள்) வங்கி வைப்பு மற்றும் நடுத்தர (5-7 ஆண்டுகள்) மற்றும் நீண்ட (12-15 ஆண்டுகள்) கால அரசாங்க வைப்புத் திட்டங்களின் கீழ் தங்க வைப்புகளை ஏற்றுக்கொள்ளும்.

தங்கத்தின் தூய்மையை சரிபாருங்கள்

உங்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்ப்பது அவசியமாகும் மேலும் இதை நீங்கள் இப்போது சேகரிப்பு மற்றும் தூய்மை பரிசோதனை மையங்களில் செய்யலாம். இந்த வைப்புத் திட்டங்களில் ஒன்றில் தங்கத்தை நீங்கள் டெபாசிட் செய்ய முடிவு செய்தால், இந்த மையங்களுக்கு உங்கள் தங்கத்தை நீங்கள் எந்த வடிவத்திலும் எடுத்துச் செல்லலாம், அவர்கள் உங்கள் முன்பே தங்கத்தை மதிப்பிட்டு தூய்மை குறித்தும் அதிலுள்ள தங்கத்தின் அளவு குறித்தும் உங்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்குவார்கள்.

நீங்கள் தகுதியானவரா?

இந்திய குடிமக்கள் (எஸ்.இ.பி.ஐ (மியூச்சுவல் ஃபண்ட்) ஒழுங்குவிதிகள் மற்றும் நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்/பங்குச்சந்தை வர்த்தக நிதிகள் உட்பட தனிநபர்கள், எச்.யு.எப் (HUF), அறக்கட்டளைகள்) இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யலாம். தங்க வைப்பு கணக்குகளைத் துவங்குவது வேறு எந்த வைப்புத்தொகை கணக்கிற்கும் பொருந்தக்கூடிய வாடிக்கையாளர் அடையாளம் தொடர்பான விதிகளுக்கு உட்பட்டிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள வங்கியை தொடர்பு கொள்ளவும்.