Published: 01 செப் 2017

தங்கமானது ரூபி சிகப்பு கண்ணாடியாக மாறுதல்

நீங்கள் ஐரோப்பாவில் இடைக்காலகட்டங்களின் தேவாலயங்களைப் பார்வையிடும்போது, கலை வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் சாயம் பூசப்பட்ட கண்ணாடி ஜன்னல்களைப் பார்க்க நேரிடலாம். எங்காவது சில இடங்களில், சிவப்பு கண்ணாடிக்கு அதன் நிறத்தைக் கொடுக்கக்கூடிய சிறிய நானோ அளவிலான தங்க செதில்கள் இருக்கும். நானோடெக்னாலஜி என்பது ஒப்பீட்டளவில் சமீப கால விஞ்ஞானம் ஆகும், மேலும் அதன் முக்கிய கருத்துகளானது கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும்; ஆனால் மனிதர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இடைக்காலகட்டத்தின் சாயம் பூசப்பட்ட கண்ணாடி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டவை என்பது வரலாற்றில் நானோ தொழில்நுட்பத்தின் சிறந்த ஆவணப்படுத்தப்பட்ட உதாரணங்களில் ஒன்றாகும். ஜன்னல்களில் ரூபி சிவப்பு நிறத்தை உருவாக்குவதற்காக, அவர்கள் 'கண்ணாடி மேட்ரிக்ஸில்' தங்க நானோதுகள்களை பயன்படுத்திய முதல் நானோடெக் வல்லுநர்களாக இருந்தனர்.

பல நூற்றாண்டுகளாக, சூடான, திரவ கண்ணாடியுடன் (உருகிய கண்ணாடி) தங்க உப்புகள் அல்லது கூழ்ம தங்கத்தை சேர்த்து, கிரான்பெரி கண்ணாடி அல்லது 'தங்க ரூபி' கண்ணாடி உருவாக்கப்பட்டது. வண்ணமயமான கண்ணாடியில் தங்கம் இருப்பதால், அது விலை உயர்ந்த அலங்காரங்களுக்கான ஒரு ஆடம்பர பொருளாக இருந்தது. பணக்கார ரூபி நிற கண்ணாடி தயாரிக்க மிகவும் குறைந்த செறிவுகளில் (0.001%) தங்கம் பயன்படுத்தப்பட வேண்டி இருந்தாலும், கண்ணாடியின் மீது தங்கத்தின் விளைவு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. இன்னும் குறைந்த செறிவுகளில், அது குறைந்த அளவிலான சிவப்பு நிறத்தில் இருந்தது, அவை "கிரான்பெரி கண்ணாடி" என்று குறிப்பிடப்படுகிறது."

தங்கம் மற்றும் கண்ணாடி ஆகியவை, அதிக அளவில் செய்யப்படாமல் உற்பத்தியாளர்களால் கையால் ஊதி அல்லது உருக்கி கைவினையாக உற்பத்தி செய்யப்படுவதால், அவற்றின் விலை பொதுவாக அதிகமாக இருக்கும். ஐரோப்பியர்கள் ஒரு தங்க நாணயத்தை உருகிய கண்ணாடி கலவையின்மீது சுண்டிய போது தங்க ரூபி கண்ணாடி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புராண நூல் கூறுகிறது. துரதிருஷ்டவசமாக, தங்கமானது முதலில் ஹைட்ரோகுளோரிக் மற்றும் நைட்ரிக் அமிலங்களின் கலவையான அக்வா ரீஜியாவில் கரைக்கப்பட வேண்டும் என்பதால், இது உண்மையாக இருக்காது.

இன்றைய காலகட்டத்தில், தங்கமானது கண்ணாடிக்கு வண்ணத்தை சேர்க்க மட்டுமல்லாமல், சூரிய ஒளி மூலம் ஊடுருவும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களைக் குறைக்க ஒரு பிரதிபலிப்பு பூச்சாகவும் புதுமையான வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. வெப்பத்தைக் கடந்து செல்ல அனுமதிப்பதால், உற்பத்தியாளர்கள் தங்க துகள்களை சாளர படலத்தில் அல்லது கண்ணாடியில் நேரடியாக சேர்க்கிறார்கள், இது புற ஊதா அல்லது UV கதிர்வீச்சு மற்றும் கண்ணை கூசும் அளவைக் குறைக்க உதவுகிறது. புற ஊதா கதிர்வீச்சு குறைதல் என்பது நிறம் மங்குதலில் இருந்து தளபாடங்கள், தரைகள், மேலுறைகள் மற்றும் கலை வேலைப்பாடுகளைப் பாதுகாக்க, ஒரு பிரதிபலிப்பு கண்ணாடியாக வீட்டு உரிமையாளர்களுக்கு உதவுகிறது.

சூரிய வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், குறைந்த உள் வெப்பநிலைகளை பராமரிக்கவும், கண்ணாடிகளில் தங்கமானது சூடான தட்பவெப்ப நிலையில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.